தெறித்து ஓடிய இஸ்ரேல் படைகள்.. லெபனானுக்குள் நுழைய மேற்கொண்ட முயற்சி தோல்வி! 8 வீரர்கள் பலி

பெய்ரூட்: பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல் படை, ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக இருப்பதாக கூறி ஹிஸ்புல்லா மீதும் சரமாரி தாக்குதல் நடத்தியது. இதில் ஹிஸ்புல்லா தலைவர் கொல்லப்பட்டார். இதனையடுத்து லெபனானுக்குள் நுழைய இஸ்ரேலிய படைகள் முயன்றன. ஆனால் ஹிஸ்புல்லா கொடுத்த பதிலடியில் இஸ்ரேல் வீரர்கள் 8 பேர் வரை உயிரிழந்துள்ளனர். எனவே ஊடுருவல் முயற்சி தோல்வியடைந்துள்ளது. Source Link

கருணாநிதியை விடுங்க.. 1974க்கு பின் மதுக்கடையை திறந்தது யார்? எம்ஜிஆர் – ஜெ.,வை கைக்காட்டிய திருமா

கள்ளக்குறிச்சி: தமிழகத்தில் மதுக்கடைகளை கருணாநிதி 1971ல் திறந்து 1974ல் மூடிவிட்டார். அதன்பிறகு மதுக்கடைகளை திறந்தது யார்? அதை யாரும் பேசுவது இல்லையே? டாஸ்மாக் எனும் நிர்வாகத்தை உருவாக்கியது யார்? எம்ஜிஆருக்கு என்ன பங்கு? ஜெயலலிதா என்ன செய்தார்? என்பது பற்றி யாரும் பேசவில்லை என்று உளுந்தூர் பேட்டையில் நடந்த மது மற்றும் போதை ஒழிப்பு மாநாட்டில் திருமாவளவன் Source Link

ஐநா பொதுச்செயலாளர் இஸ்ரேலில் நுழைய தடை.. அதிரடியாக வெளியான அறிவிப்பு.. ஈரான் ஆதரவு தான் காரணமா?

டெல்அவிவ்: இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதல் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தான் இஸ்ரேலுக்குள் நுழைய ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ்க்கு தடை விதித்து அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் அதிரடியாக  அறிவித்துள்ள நிலையில் அதன் பின்னணி பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. பாலத்தீனத்தின் காசா பகுதியில் செயல்பட்டு வரும் Source Link

தொடங்கியது விசிக மது ஒழிப்பு மாநாடு.. திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு

கள்ளக்குறிச்சி: விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று உளுந்தூர்பேட்டையில், திருமாவளவன் தலைமையில் மது ஒழிப்பு மாநாடு நடைபெற்றது.. இதில், திமுக சார்பில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ் இளங்கோவன் மற்றும் கூட்டணி கட்சியினர் பலர் பங்கேற்றனர். சட்டமன்ற தேர்தல் நேரத்தில், தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமல்படுத்துவோம் என்று திமுக கூறியிருந்தது. இதனை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சியினர் சரமாரியாக கேள்விகளை எழுப்பி Source Link

“இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உள்ளிட்டோரை தீர்த்துக் கட்டுவோம்”.. ஈரான் உளவுத்துறை பகிரங்க மிரட்டல்!

தெஹ்ரான்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கொல்லப் போவதாக ஈரான் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது. இஸ்ரேல் பிரதமர் உள்ளிட்டோரை பயங்கரவாதிகள் என ஈரான் உளவுத்துறை அமைச்சகம் பட்டியலிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பயங்கரவாதிகள் என அறிவிக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய தலைவர்களை தீர்த்துக் கட்டுவோம் எனவும் ஈரான் உளவுத்துறை மிரட்டல் விடுத்துள்ளது. இஸ்ரேல் – காசா இடையேயான போரில், Source Link

இவ்வளவு நடந்தும் இஸ்ரேலை விட்டு தராத அமெரிக்கா.. உண்மையில் என்ன காரணம்! அதிர வைக்கும் பின்னணி

டெல் அவிவ்: காசா மீதும் சரி, ஹிஸ்புல்லா மீதும் சரி அமெரிக்கா பல முறை வேண்டாம் எனச் சொல்லியும் இஸ்ரேல் தாக்குதலை நடத்தியது. இருப்பினும், அதையும் ஈரான் தாக்க ஆரம்பித்த உடன் இஸ்ரேலுக்குப் பக்க பலமாக முதலில் வந்து நிற்பது அமெரிக்கா தான். இத்தனை நடந்த பிறகும் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா நிற்பது ஏன் என்ற கேள்வி Source Link

அயன்டோமுக்கு விபூதி அடித்த ஈரான்! முக்கிய விமான தளத்தை ஒன்றும் இல்லாமல் செய்த ஏவுகணைகள்!

டெல் அவிவ்: இஸ்ரேலின் முக்கிய விமான தளமாக கருதப்படும் நெவடிம் விமான தளத்தை ஈரானின் ஏவுகணைகள் பதம் பார்த்துள்ளன. இந்த தாக்குதலில் விமான தளம் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக ஈரான் தெரிவித்திருக்கிறது. பாலஸ்தீனம் மீது கடந்த ஓராண்டாக இஸ்ரேல் நடத்தி வந்த தாக்குதல் சர்வதேச அளவில் பெரும் அதிருப்தியை உருவாக்கியிருந்தது. இதனை தொடர்ந்து ஹிஸ்புல்லா அமைப்பை தாக்குவதாக அறிவித்த Source Link

திருப்பதி பிரமாணப் பத்திரத்தில்.. கையெழுத்திட்ட பவன் கல்யாண் மகள்.. என்ன காரணம் தெரியுமா?

அமராவதி: திருப்பதியில் பவன் கல்யாண் தனது தீட்சை பரிகாரத்தை இன்று நிறைவு செய்யவுள்ள நிலையில், சுவாமியை தரிசனம் செய்வதற்கு முன்பாக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மற்றும் அவரது மகள் நம்பிக்கை பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்திட்டனர். பவன் கல்யாணும், அவரது மகளும் பத்திரத்தில் கையெழுத்து போடும் புகைப்படங்கள் ஜனசேனா கட்சியின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. Source Link

எங்களை தொட்டா.. இஸ்ரேல்னு சொல்லிக்க எதுவும் இருக்காது! ஈரான் கடும் எச்சரிக்கை

தெஹ்ரான்: இஸ்ரேல் மீது ஈரான் நடத்தியுள்ள தாக்குதல் சர்வதேச அளவில் பெரும் விவாதங்களை கிளப்பியிருக்கிறது. இதற்கு பதிலடியை நாங்கள் நிச்சயம் கொடுப்போம் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவித்திருக்கிறார். அப்படி மட்டும் ஏதாவது நடந்தால், அப்புறம் இஸ்ரேல் என சொல்லிக்கொள்ள மிச்சம் மீதி எதுவும் இருக்காது என்று ஈரான் எச்சரித்திருக்கிறது. பாலஸ்தீன விடுதலை அமைப்பான ஹமாஸுக்கு பயிற்சி Source Link

லஞ்சம் கேட்டு விவசாயிக்கு டார்ச்சர்.. முதல் தவணை 5 ஆயிரம் போதும்.. வசமாக சிக்கிய அதிகாரி

தென்காசி: தென்காசியில் பூந்தோட்டத்திற்கு புதிய மின் இணைப்பு கொடுக்க முதல் தவணையாக 5 ஆயிரமும், மீதி தொகையை பிறகும் கொடுக்குமாறு விவசாயியிடம் கறாராக கூறிய மின் செயற்பொறியாளர் உள்பட இரண்டு பேரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம், சிவகிரி தாலுகாவில் உள்ள தெற்குசத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் வண்டிக்கார மாரிமுத்து Source Link