தூக்கில் தொங்கிய தாய், குழந்தைகள்! \"இப்படி பண்ணிட்டீங்களே..\" கதறும் லேத் பட்டறை உரிமையாளர்

Tamilnadu oi-Noorul Ahamed Jahaber Ali விருத்தாச்சலம்: குடும்ப பிரச்சனை காரணமாக ஒரே வீட்டில் தாய், மகன், மகள் ஆகிய மூவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் எஜமான் நகரை சேர்ந்தவர் குமார். இவர் சொந்தமாக லேத் பட்டறை ஒன்றை நடத்தி வருகிறார். இவர் சகீராபானு (வயது 40) என்ற மனைவியும், 7 ஆம் வகுப்பு படிக்கும் மகன் பரத் (வயது 12), 5 ஆம் வகுப்பு … Read more

கொடூரம்.! பெண்ணை பலாத்காரம் செய்து மிரட்டி.. மற்ற ஆண்கள் உடனும்.. இதில் அம்மா வேறு உடந்தையாம்

India oi-Vigneshkumar இந்தூர்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் டீன் ஏஜ் சிறுமி ஒருவருக்கு நேர்ந்த கொடூரம் அதிர வைப்பதாக உள்ளது. இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சமீப காலத்தில் பல மடங்கு அதிகரித்து உள்ளது. இதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகளும் பெரியளவில் பலன் அளிப்பதாக இல்லை. இந்தச் சூழலில் மத்தியப் பிரதேசத்தில் நடந்த சம்பவம் அனைவரும் அதிரச் செய்வதாக உள்ளது. மத்திய … Read more

தமிழ் அரசியல் கைதிகளை 4 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த உறவினர்கள்

International bbc-BBC Tamil BBC இலங்கை தமிழ் அரசியல் கைதிகளை 4 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த உறவினர்கள் இலங்கையில் நடந்த 30 வருட உள்நாட்டு யுத்த காலப் பகுதி மற்றும் அதனை அண்மித்த காலப் பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை சந்திக்க 4 வருடங்களின் பின்னர் அவர்களின் உறவினர்களுக்கு நேற்று(செப்டெம்பர் – 11) வாய்ப்பு வழங்கப்பட்டது. கொழும்பு – மெகசீன் சிறைச்சாலையில் தடுத்து … Read more

கிராமத்தை வெள்ளம் சூழ்ந்தது.. இந்து கோவிலில் தங்கிய முஸ்லிம் மக்கள்.. பாகிஸ்தானில் நெகிழ்ச்சி!

International oi-Mani Singh S இஸ்லாமபாத்: பாகிஸ்தானின் கனமழையால் கிராமம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், அங்குள்ள முஸ்லிம் மக்கள் பலரும் மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் அருகில் உள்ள இந்து கோவிலில் தங்கியிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாதம் பெய்ய தொடங்கிய பருவமழை தொடர்ந்து இன்னும் விடாமல் பெய்து வருகிறது. இதனால் பாகிஸ்தான் நாட்டில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல இடங்கள் … Read more

நடுவானில் திக் திக் நொடிகள்! இம்ரான் கான் பயணித்த விமானம் அவசரமாக தரையிறக்கம்! என்ன காரணம்?

International oi-Rajkumar R இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் பயணித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்ட நிலையில் விமான விபத்தில் இருந்து அவர் தப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. பாகிஸ்தான் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து வருவதால் விலைவாசி கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதன் காரணமாக அந்நாட்டு மக்கள் துயரங்களை சந்தித்து வருகின்றனர். இதனால் நாட்டின் அப்போதைய பிரதமரான இம்ரானுக்கு நெருக்கடி அதிகரித்தது. பொருளாதாரம் சீர்குலைந்து வருவதை தடுப்பதற்காக எவ்வித முயற்சிகளையும் … Read more

ராணி இரண்டாம் எலிசபெத் மற்றும் ஆப்ரிக்கா: நீண்டகால உறவு

India bbc-BBC Tamil Getty Images 1961இல் அக்கராவில் ராணி எலிசபெத் கானாவின் முன்னாள் அதிபர் குவாமே நக்ருமாவுடன் நடனமாடினார். ராணி இரண்டாம் எலிசபெத் இதயத்தில் ஆப்பிரிக்காவுக்கு எப்போதும் ஒரு தனி இடம் உண்டு என்று கூறப்படுவதுண்டு. தமது வாழ்வின் சில முக்கியத் தருணங்களில் ராணி ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்துள்ளார். அவரது தந்தை ஆறாம் ஜார்ஜ் அரசர் லண்டனில் இறந்ததைத் தொடர்ந்து, உடனடியாக 25 வயதில் இளவரசி எலிசபெத், ராணி இரண்டாம் எலிசபெத் ஆனபோது அவர் கென்யாவின் … Read more

மத்திய அரசு மீது விமர்சனம்.. ராகுல் காந்திக்கு பாராட்டு: போட்டு தாக்கும் மேகலாய கவர்னர் சத்யபால் மாலிக்

India oi-Mani Singh S ஷில்லாங்: ”மத்திய அரசுக்கு எதிராக பேசுவதை நான் நிறுத்தினால் துணை ஜனாதிபதி பொறுப்பு வழங்கப்படும் என்றும், ஆனால் நான் அதை ஏற்கவில்லை என்றும்” மேகாலயா மாநில கவர்னர் சத்யபால் மாலிக் கூறியுள்ளார். மேகாலய மாநித்தின் ஆளுநராக இருப்பவர் சத்யபால் மாலிக். ஜம்மு காஷ்மீர் ஆளுநராக சத்யபால் மாலிக் இருந்த சமயத்தில் தான் அந்த மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு கோவா மாநில ஆளுநராக நியமிக்கப்பட சத்யபால் … Read more

அவ்வளவு தான்! இனி யார் நினைச்சாலும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்காது.. குலாம் நபி ஆசாத் பரபர

International oi-Vigneshkumar ஸ்ரீநகர்: விரைவில் தனிக் கட்சியை ஆரம்பிக்க உள்ள குலாம் நபி ஆசாத், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து குறித்துக் கூறியுள்ள சில கருத்துகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஒரு காலத்தில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஆண்ட காங்கிரஸ் கட்சி இப்போது இக்கட்டான சூழலில் உள்ளது. 2014 முதலே தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியால் பெரியளவில் வெல்ல முடியவில்லை. 2014க்கு பின்னர் பல்வேறு மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடந்துள்ள போதிலும், காங்கிரஸ் அதில் பெரும்பாலும் தோல்வியையே அடைந்துள்ளது. காங்கிரஸ் … Read more

பாதாம் பருப்பை எடுத்ததால் ஆத்திரம்.. சிறுவனை மரத்தில் கட்டிவைத்து அடித்த அர்ச்சகர்.. பரபர வீடியோ!

India oi-Yogeshwaran Moorthi போபால்: கோயில் இருந்து பாதாம் பருப்பை திருடியதாக கூறி, சிறுவனை ஒருவரை அர்ச்சகர் மரத்தில் கட்டிவைத்து அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. சமூக வலைதளங்களில் மரத்தில் கட்டப்பட்டிருந்த சிறுவன் அழுதுகொண்ட தன்னை விடுவிக்கும்படி கெஞ்சும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது. இந்த வீடியோ குறித்து விசாரிக்கையில், அந்த வீடியோவில் இருப்பது மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 11 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது. சமூக வலைதள … Read more

ஆமை வேகத்தில் திமுக ஆட்சி.. மக்களின் கனவு காணல் நீராக போய்விட்டது.. அவினாசியில் கொந்தளித்த இபிஎஸ்!

Tamilnadu oi-Yogeshwaran Moorthi திருப்பூர்: திமுக ஆட்சி ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். திருப்பூர் மற்றும் கோவையில் அதிமுக சார்பில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்கிறார். இந்த நிலையில் அவினாசியில் நடைபெற்ற கூட்டத்தில் தொண்டர்களுக்கு மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசினார். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், எண்ணற்ற தடைகளை கடந்து உங்களின் துணையுடனும், நிர்வாகிகளின் துணையுடனும் இடைக்கால … Read more