2013க்கு பிறகு சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. 7 பேர் வரை பலி.. மீட்புப் பணிகள் தீவிரம்

International oi-Halley Karthik பெங்ஜிங்: சீனாவில் சிச்சுவான் நகரத்தில் 6.8 எனும் ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. கடந்த 2013க்கு பிறகு உணரப்பட்ட சக்தி வாய்ந்த இந்த நிலநடுக்கத்தில் 7 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. சிச்சுவானின் தலைநகர் செங்டுவில் இருந்து தென்மேற்கே 180 கிமீ தொலைவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளிலிருந்து மக்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. … Read more

குலதெய்வ கோயில் கும்பாபிஷேகம்! உருகி வேண்டிய துர்கா ஸ்டாலின்! எவ்ளோ சிம்பிளா இருக்காங்க பாருங்களேன்!

Tamilnadu oi-Mohan S மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் கீழப்பெரும்பள்ளத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், கொடியசைத்து தொடங்கி வைத்தார். கும்பாபிஷேக நிகழ்ச்சியில், முதல்வரின் குடும்பத்தினரும் பங்கேற்றனர். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் பழமை வாய்ந்த அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோயில் அம்மன், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்களுக்கு குலதெய்வமாக விளங்கி வருகிறது. அந்த வகையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் மனைவி … Read more

ரேஷனில் பொருள் வாங்குவது போல.. எம்எல்ஏக்களை வாங்கும் பாஜக.. நம்பிக்கை வாக்கெடுப்பில் விளாசிய சோரன்

India oi-Halley Karthik ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றுள்ள நிலையில், பாஜகவுக்கு எதிராக அம்மாநில முதலமைச்சர் ஹேமந் சோரன் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தற்போது இம்மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் மீது சட்ட விரோதமாக சுரங்கம் குத்தகை எடுத்ததாக குற்றச்சாட்டு மேலெழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ஹேமந்த் சோரன் மீது நடவடிக்கை எடுக்க மாநில ஆளுநருக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரைத்திருந்து. இந்நிலையில் … Read more

பீகாருக்கு பின்.. மபி பாஜக அரசுக்கு சிக்கல்! சிந்தியா ஆதரவாளர்கள் போர்க்கொடி! ஆபரேசன் தாமரைக்கு அடி

India oi-Noorul Ahamed Jahaber Ali போபால்: மத்திய பிரதேசத்தில் ஆளும் பாரதிய ஜனதா அரசுக்கு எதிராக அந்த கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களே போர்க்கொடி தூக்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மத்திய பிரதேசத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் நூலிழையில் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. அதில் முதலமைச்சராக ஜோதிர் ஆதித்ய சிந்தியா அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் மூத்த தலைவரான கமல்நாத் முதலமைச்சராக அறிவிக்கப்பட்டார். அன்றிலிருந்து தொடங்கிய … Read more

ஹலோ பிரபா ஒயின் ஷாப் ஓனரா.. கடையை எப்போ திறப்பீங்க! கும்மிடிப்பூண்டியில் சிக்கிய சிரிப்பு திருடர்கள்

Tamilnadu oi-Jackson Singh கும்மிடிப்பூண்டி: டாஸ்மாக் கடைக்குள் பக்காவாக ஸ்கெட்ச் போட்டு நுழைந்து பணத்தை திருடிய கொள்ளையர்கள், அங்கேயே மது அருந்தியதால் போலீஸாரிடம் சிக்கினர். ஒரு திரைப்படத்தில் ஒயிஷ் ஷாப்புக்குள் வடிவேலு கொள்ளையடிக்க செல்வார். ஆனால் அவர் இருப்பது தெரியாமலேயே கடையை ஊழியர்கள் பூட்டிவிட்டு சென்று விடுவர். பின்னர் அங்கு இருக்கும் மதுபானங்களை குடிக்கும் வடிவேலு, போதை தலைக்கேறியதும் கடை உரிமையாளருக்கே ஃபோன் செய்து ‘பிரபா ஒயின் ஷாப் ஓனரா.. கடைய எப்ப சார் திறப்பீங்க..’ என … Read more

யாருமே என்கிட்ட பேசல! தோனி மட்டும்தான்.. கேப்டன் பதவிய உதறித்தள்ளிய தருணம் பற்றி கோலி உணர்ச்சிகரம்

International oi-Noorul Ahamed Jahaber Ali ஷார்ஜா: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விராட் கோலி, தான் கேப்டன் பதவியிலிருந்து விலகிய பிறகு தோனி மட்டுமே தன்னிடம் பேசியதாக தெரிவித்து இருக்கிறார். ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றன. டி20 உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு கடந்த வாரம் நீண்ட இந்தியா – பாகிஸ்தான் அணிகள் ஆசியக்கோப்பை தொடரில் நேருக்கு நேர் மோதின. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற அந்த … Read more

ஜார்க்கண்ட் சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு.. பாஜக பிளானை நொறுக்குவாரா ஹேமந்த் சோரன்?

India oi-Shyamsundar I ராஞ்சி: ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் எம்எல்ஏ பதவி குறித்த கேள்வி நிலவி வரும் நிலையில், இன்று அவர் தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க உள்ளது. ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் உள்ளது. ராஞ்சியில் உள்ள சுரங்கத்தை இவர் தனது முதல்வர் பதவியை பயன்படுத்தி சட்ட விரோதமாக குத்தகைக்கு எடுத்ததாக புகார் உள்ளது. இந்த குத்தகை மூலம் இவர் ஆதாயம் அடைந்ததாக வைக்கப்பட்ட புகாரில் பாஜக … Read more

கண்ணில் தென்பட்டவர்களை சரமாரியாக கத்தியால் குத்திய 2 பேர்.. 10 பேர் உயிரிழப்பு.. கனடாவில் பயங்கரம்

International oi-Mani Singh S ஒட்டாவா: வட அமெரிக்க நாடுகளில் ஒன்றான கனடாவில் கண்ணில் தென்பட்டவர்களை சரமாரியாக கத்தியால் குத்திய 2 நபர்களால் நாட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். பெரிய அளவில் நடைபெற்ற கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. சரமாரியாக கண்ணில் தென்பட்டவர்களை இரண்டு நபர்கள் கத்தியால் குத்தியதாகவும் இதில் 10 பேர் கொல்லப்பட்டதாகவும் 12-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். கனடாவின் ஜேம்ஸ் ஸ்மித் க்ரீ நேஷன் மற்றும் … Read more

பொருட்காட்சியில் சரசரவென சரிந்த டவர் கோபுரம்..! குழந்தைகள் உட்பட பலர் காயம்.. பதற வைக்கும் வீடியோ

India oi-Vigneshkumar மொஹாலி: பஞ்சாபில் பொருட்காட்சி ஒன்றில் ராட்டினம் அந்திரத்தில் இருந்து விழுந்த மோசமான விபத்து ஏற்பட்டுள்ளது. பஞ்சாபின் மொஹாலியில் பொருட்காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் பல்வேறு கடைகளும் அமைக்கப்பட்டு இருந்தது. அதேபோல அங்கு பல பொழுதுபோக்கு விளையாட்டுகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதன்படி அங்கு அமைக்கப்பட்டு இருந்த ராட்டினத்தில் பலரும் விளையாடிக் கொண்டு இருந்தனர், குழந்தைகள் உட்பட பலர் அதில் இருந்தனர். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக மேலே இருந்து அந்த ராட்டினம் … Read more

லண்டனில் திருடப்பட்ட ரூ.2.39 கோடி மதிப்புள்ள கார்.. தேடிப்பார்த்த போலீசுக்கு.. காத்திருந்த அதிர்ச்சி

International oi-Halley Karthik இஸ்லாமாபாத்: லண்டனில் திருடப்பட்ட உயர் ரக கார் ஒன்று பாகிஸ்தானின் கராச்சியில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் ரூ.2.39 கோடி மதிப்பு கொண்ட இந்த கார், உலகின் மிகவும் பிரபலமான பென்ட்லி முல்சேன் நிறுவனத்தின் பிரத்யேக தயாரிப்பாகும். இந்த கார் பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள ஓர் ஆடம்பர பங்களாவிலிருந்து சுங்கத்துறை அதிகாரிகள் மீட்டெடுத்துள்ளனர். பென்ட்லி முல்சேன் பென்ட்லி மோட்டார்ஸ் நிறுவனம் உலகின் தலைசிறந்த கார்களை 201-2020 வரை உற்பத்தி செய்தது. … Read more