முற்றும் அரசியல் நெருக்கடி.. ஜார்கண்டில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு.. தப்புவாரா ஹேமந்த் சோரன்?

India oi-Vigneshkumar ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் பல்வேறு அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், நாளை (செப். 5) நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த 2019இல் நடந்த சட்டசபைத் தேர்தல் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்தன. இத்தனை மாதங்களாகக் கூட்டணியில் எவ்வித குழப்பமும் இல்லாமல் ஆட்சி நடந்து கொண்டிருந்த நிலையில், சில வாரங்களுக்கு முன்பு திடீரென அங்கு திடீரென சிக்கல் ஏற்பட்டது. ஜார்க்கண்ட் … Read more

ஜாதி வெறி.. அரசு பள்ளியில் தலித் மாணவிகள் வழங்கிய உணவு.. வன்மத்துடன் தூக்கி வீசக்கூறிய சமையல்காரர்

India oi-Nantha Kumar R உதய்ப்பூர்: ராஜஸ்தான் அரசு பள்ளியில் தலித் சிறுமி வழங்கியதாக கூறி உணவை தூக்கி எறியுமாறு மாணவர்களுக்கு சமையல்காரர் அறிவுறுத்திய வன்மமான செயல் நடந்துள்ளது. ஜாதிகள் பார்க்கக்கூடாது. பிறப்பால் அனைவரும் சமம். பிறப்பால் உயர்வு, தாழ்வு கிடையாது என பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு கல்வி போதிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் ஆங்காங்கே ஜாதிய வன்ம சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இத்தகைய சம்பவங்களை இன்று வரை முற்றிலுமாக ஒழிக்க முடியாதது வருத்தமான ஒன்றாக தான் உள்ளது. இந்நிலையில் … Read more

நம்புனாதான் சோறு.. இது அப்படியில்லை.. நிஜமாகவே சிறுத்தையை சண்டை போட்டு கொன்ற இளைஞன்.. கேரளாவில் பரபர

India oi-Jackson Singh இடுக்கி: தன்னை தாக்க வந்த சிறுத்தை புலியிடம் (Leopard) தீரத்துடன் சண்டை போட்டு கொன்ற இளைஞர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் மண்குளம் என்ற கிராமம் உள்ளது. சுற்றிலும் மலைகளும், வனங்களும் சூழ்ந்திருப்பதால் அடிக்கடி புலி, சிறுத்தை போன்ற காட்டு விலங்குகள் ஊருக்குள் வருவது வழக்கம். இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு மண்குளம் கிராமத்துக்குள் சிறுத்தை புலி ஒன்று புகுந்துவிட்டது. மேய்ச்சலுக்கு செல்லும் ஆடுகள், மாடுகள், வீட்டில் … Read more

\"எங்ககிட்டயே பணம் கேக்குறியா?\" ஓட்டலில் தகராறு செய்த இந்து முன்னணி நிர்வாகி கைது

Tamilnadu oi-Jackson Singh உளுந்தூர்பேட்டை: சாப்பிட்ட உணவுக்கு பணமும் கொடுக்காமல், மாமூல் கேட்டு ஓட்டலில் தகராறில் ஈடுபட்ட இந்து முன்னணி நிர்வாகி உட்பட 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். எந்த தொழில் வேண்டுமானாலும் செய்யலாம், ஆனால் ஓட்டல் தொழில் மட்டும் வேண்டவே வேண்டாம் எனக் கூறும் அளவுக்கு நம் நாட்டில் நிலைமை சென்று கொண்டிருக்கிறது. எந்த நேரத்தில் யார் வந்து தகராறு செய்வார் எனத் தெரியாத அளவுக்கு ஓட்டல் உரிமையாளர்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர். மது அருந்தும் … Read more

6 வயதிலேயே இப்படியா? ஆச்சர்யத்தில் மூழ்க வைக்கும் ஆத்விக்! நேரில் அழைத்து பாராட்டிய ஆட்சியர்!

Tamilnadu oi-Mohan S நெல்லை: நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த 6 வயது சிறுவன், ஒன்றரை நிமிடத்தில், 12 ம் வகுப்பு பாடத்தில் உள்ள 10 தொகுப்புக்கான கனிம அட்டவணையில் உள்ள பெயர்களை கூறி ஆசிய புக் ஆஃப் ரெகார்ட்ஸில் இடம்பெற்று சாதனை படைத்துள்ளார். பல சாதனைகளை குவித்துள்ள சிறுவனை, மாவட்ட ஆட்சியர் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒவ்வொரு சிறுவர், சிறுமிகளுக்கும், பலவிதமான தனித் திறமைகள் இருக்கும். அந்த திறமைகளை வெளியே கொண்டு வர, பெற்றோர் … Read more

கேரளாவை மிரட்டும் 'ரேபீஸ்' – தடுப்பூசி செலுத்தியும் பாதிப்பு – தொடரும் திடுக் சம்பவங்கள்

India oi-Jackson Singh பத்தினம்திட்டா: கேரளாவில் நாய்களால் கடிக்கப்பட்டு 3 முறை தடுப்பூசி செலுத்திய பின்னரும் 12 வயது மாணவிக்கு ரேபீஸ் பாதிப்பு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சமீபகாலமாக, கேரளாவில் இதுபோன்று தடுப்பூசி செலுத்திய பின்னரும் ரேபீஸால் உயிரிழப்பு ஏற்படுவது பெரும் அச்சுறுத்தலையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. ‘நன்றியுள்ள ஜீவன்’, ‘மனிதர்களின் காவலன்’ என நாய்கள் அழைக்கப்பட்டாலும் அது பல நேரங்களில் மனிதர்களின் உயிருக்கே உலை வைத்து விடுகின்றன. நாய்களின் எச்சிலில் இருக்கும் … Read more

கனமழையால் கடல்போல் மாறிய நதி.. நோய் பரவும் அபாயம்.. பாகிஸ்தானுக்கு உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

International oi-Mani Singh S இஸ்லாமபாத்: பாகிஸ்தானில் பெய்து வரும் தொடர்மழையால் 400 குழந்தைகள் உள்பட 1100 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 3-ல் ஒருபங்கு வெள்ளத்தால் மிதப்பதால் நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் பாகிஸ்தானுக்கு ‘உயர்மட்ட அவசர எச்சரிக்கை’ விடுத்துள்ளது. பாகிஸ்தான் நாட்டில் கடந்த ஜூன் மாதம் பெய்யத் தொடங்கிய பருவமழையானது இன்னும் ஓய்ந்த பாடில்லை. இதனால் எப்போதும் விவசாயத்துக்கு கூட தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் பகுதிகள் கூட வெள்ளக்காடாக மாறியது. 400 … Read more

வாழைப்பழத்தை அமுக்கங்கய்யா! 50 வயது நபருக்கு காது குத்து! ஆசையை நிறைவேற்றி வைத்த சொந்த பந்தம்!

Tamilnadu oi-Mohan S கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே, குடும்ப ஏழ்மையின் காரணமாக சிறு வயதில் மொட்டை அடித்து, காது குத்தாமல் இருந்தவருக்கு, 50 வயதில் அவரது ஆசையை நிறைவேற்றி, உறவினர்கள் நெகிழ்ச்சி அடைய செய்தனர். இந்துக்களின் சாஸ்திர சம்பிரதாயப்படி, பிறந்த குழந்தைக்கு ஒரு குறிப்பிட்டகால பகுதியில் சொந்தபந்தங்கள் கூடி, குலதெய்வ கோயிலில் மொட்டை போடுதல் மற்றும் காதணி விழா நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த விழா பொதுவாக குழந்தைபிறந்த முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் … Read more

இரக்கமற்ற மனித இனம்.. நூற்றுக்கணக்கான பறவைகளின் அபய குரலோடு மரத்தை சாய்த்த ஜேசிபி! கண்டனங்களால் கைது

India oi-Jackson Singh மலப்புரம்: சாலை அமைப்பதற்காக பெரிய மரம் ஒன்று வெட்டி சாய்க்கப்பட்ட போது அதில் கூடுகட்டி வாழ்ந்து கொண்டிருந்த நூற்றுக்கணக்கான பறவைகள் உயிரிழந்த சம்பவம் காண்போரை கண் கலங்க வைத்துள்ளது. இந்த உலகத்திலேயே இயற்கையை அழிக்கும் ஓர் உயிரினம் இருக்கிறது என்றால் அது சந்தேகமே இல்லாமல் மனிதன் தான். ஆறுகளில் நீர்ப்பிடிப்புக்கு ஆதாரமாக இருக்கும் ஆற்று மணலை வரைமுறை இல்லாமல் எடுப்பது; தனது சுயநலத்துக்காக உயிர் வாயுவை கொடுக்கும் மரங்களை வெட்டுவது; மலைகளை உடைப்பது … Read more

உடல் முழுக்க தங்க நகைகளுடன் 65,000 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட பெண்! அதிர்ந்துபோன ஆய்வாளர்கள்

International oi-Jackson Singh புச்சாரெஸ்ட்: ருமேனியாவில் 6,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு கோடீஸ்வர பெண், உடல் முழுக்க தங்க நகைகளுடன் புதைக்கப்பட்டிருப்பதை அகழ்வாராச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமி எப்படி இருந்தது; மனிதர்கள் எப்போது தோன்றினார்கள் என்பன போன்ற பல மர்மங்களை உடைத்து வெளிப்படுத்தியது அகழ்வாராய்ச்சிகள் தான். பல லட்சம் கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் வாழ்ந்த பிரம்மாண்ட உயிரினமான டைனோசர்கள் கூட அகழ்வாராய்ச்சி மூலமே நமக்கு தெரியவந்தது. பழங்கால கல்லறைத் தோட்டம் … Read more