கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு.. வாழை தோட்டத்துக்குள் தண்ணீர் புகுந்தது

Tamilnadu oi-Mohan S தஞ்சை: கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு ஒரு லட்சத்து 88 ஆயிரம் கன அடி தண்ணீர் செல்வதால், கரையோர கிராமங்களில் உள்ள வாழை தோட்டத்துக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால், 200 ஏக்கர் பரப்பளவிலான வாழை மரங்கள், தண்ணீரில் மூழ்கியும், சாய்ந்தும் மிதப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஆறு, குளம் உள்ளிட்டவைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது, தஞ்சை கொள்ளிடம் ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் பெய்து … Read more

கடும் காய்ச்சல்.. பார்க்க மருத்துவர்கள் இல்லை.. தாயின் மடியிலேயே மரித்த குழந்தை! அதிர்ச்சி சம்பவம்!

India oi-Jackson Singh போபால்: காய்ச்சலுடன் வந்த 5 வயது குழந்தைக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் தாயின் மடியிலேயே அந்தக் குழந்தை உயிரிழந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா வளர்ந்த நாடு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இந்த வளர்ச்சியின் பலன்கள் என்னவோ வசதி படைத்தவர்களுக்கே அதிகம் கிடைக்கிறது. கல்வி, மருத்துவத்திலும் கூட ஏழை, பணக்காரர்கள் என்ற பாரபட்சம் இருப்பதுதான் கொடுமையிலும் கொடுமை. பணம் இருந்தால் உங்களால் சிறந்த … Read more

அடக்கொடுமையே! 6ஆம் மாதத்திலேயே அவசரமாக ஆப்ரேஷன்! குழந்தையை மீண்டும் வயிற்றில் வைத்து தைத்த டாக்டர்

India oi-Vigneshkumar கவுஹாத்தி: அசாம் மாநிலத்தில் பிரசவத்திற்காக மருத்துவமனை சென்ற கர்ப்பிணிப் பெண்ணுக்கு மருத்துவர் செய்த ஆப்ரேஷன் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. முன்பெல்லாம் பெரும்பாலான பிரசவங்கள் வீடுகளிலேயே தான் நடைபெறும். இருப்பினும், முறையான பயிற்சி பெறாதவர்கள் பிரசவம் பார்க்கும் போது சில நேரங்களில் தாயும் சேயும் உயிரிழக்கும் சூழல் கூட உருவாகும். அரசு மற்றும் தன்னார்வ அமைப்புகள் தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்தியதால் இப்போது பிரசவத்திற்கு மருத்துவமனை செல்லும் பழக்கம் அதிகரித்து உள்ளது. அசாம் இந்தச் சூழலில் அசாம் … Read more

பி.டி.ஆர். – அண்ணாமலை ட்விட்டரில் சொற்போர்: தமிழ்நாட்டின் சாபக்கேடு VS செருப்புக்குக்கூட சமமில்லை

India bbc-BBC Tamil தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனும் பா.ஜ.க. மாநிலத் தலைவர் கே. அண்ணாமலையும் ட்விட்டரில் தொடர்ந்து மோதி வருகின்றனர். இந்நிலையில், நேற்று நிதியமைச்சர் தனது செருப்புக்குக்கூட சமமானவரில்லை என அண்ணாமலை பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனுக்கும் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும் இடையிலான சொற்போர் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் நேற்று மாலை ஐந்தேகால் மணியளவில் ஆங்கிலத்தில் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். பிடிஆர் தியாகராஜன் … Read more

ஒரே \"பேட்டர்ன்\".. 72 மணி நேரத்தில் அடுத்தடுத்த கொலைகள்! சிட்டிக்குள் \"சீரியல் கில்லர்\"? பதறிய மக்கள்

India oi-Shyamsundar I போபால்: மத்திய பிரதேசத்தில் கடந்த 72 மணி நேரத்தில் அடுத்தடுத்து நடைபெற்ற கொலைகள் போலீசார் இடையே பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது. அமெரிக்க படங்களில் காட்டுவது போல இந்தியாவிலும் பல சீரியல் கில்லர்கள் இருந்துள்ளனர். இந்தியாவில் தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் சீரியல் கில்லர்கள் இருந்துள்ளனர். தொடர் கொலைகள்.. ஒரே மாதிரி ஸ்டைலில் கொலை செய்யும் ஆட்கள் என்று பல சீரியல் கொலைகாரர்கள் இந்திய கிரைம் வரலாறு முழுக்க நிறைந்து கிடைக்கிறார்கள். இந்த … Read more

கனடாவில் முதலமைச்சர் ரேஸில் இருக்கும் மதுரையில் பிறந்த 90’ஸ் கிட்.. யார் இந்த அஞ்சலி அப்பாதுரை?

International oi-Vignesh Selvaraj விக்டோரியா : கனடா நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் முதலமைச்சர் ரேஸில் இருக்கிறார் தமிழ்நாட்டில் பிறந்த அஞ்சலி அப்பாதுரை என்ற இளம்பெண். கனடா நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண முதலமைச்சரான ஜான் ஹோர்கன் கட்சித் தலைவர் மற்றும் முதலமைச்சர் பதவிகளில் இருந்து விலக இருப்பதால், தேர்தல் நடைபெற உள்ளது. இதில், தமிழ்நாட்டின் மதுரையை பூர்வீகமாகக் கொண்ட 90’எஸ் கிட்டான அஞ்சலி அப்பாதுரை போட்டியிடவுள்ளார். இது கனடாவில் வசிக்கும் தமிழர்கள் மட்டுமல்லாது, உலகத் தமிழர்களின் … Read more

எல்லை பதற்றத்தை தணிக்க கிழக்கு லடாக்கில் இந்தியா-சீனா ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை

India oi-Mathivanan Maran ஶ்ரீநகர்: எல்லைகளில் பதற்றத்தை தணிப்பது தொடர்பாக கிழக்கு லடாக் பிராந்தியத்தில் இந்தியா, சீனா ராணுவ உயர் அதிகாரிகள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். லடாக் எல்லை உள்ளிட்ட இந்திய எல்லைகளில் சீனா தொடர்ந்து வாலாட்டி வருகிறது. இந்திய எல்லைப் பகுதிகளில் சீனா கிராமங்களை நவீன வசதிகளுடன் கட்டமைத்து குடியேற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. சீனாவின் இத்தகைய நடவடிக்கைகளால் எல்லைகளில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. இந்தப் பதற்றத்தை தணிக்க பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகளை இருதரப்பும் மேற்கொண்டு வருகிறது. … Read more

சாலை, பாலம், கோபுரம்.. இந்தியாவில் வேற லெவலில் ரெடியாகும் நகரம்! அங்கதான் “டுவிஸ்ட்” – அமைப்பது சீனா

India oi-Noorul Ahamed Jahaber Ali லடாக்: இந்தியாவின் எல்லைக்கு உட்பட்ட பகுதியை சீனா ஆக்கிரமித்து சாலைகள், பாலங்கள், கோபுரங்களை அமைத்து புதிய நகரத்தை வேகமாக கட்டமைத்து வருகிறது செயற்கோள் படங்களின் வாயிலாக தெரியவந்து இருக்கிறது. அருணாச்சல பிரதேச மாநிலத்தில் இந்திய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சீனா ஆக்கிரமித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக குடியிருப்புகள், சாலைகளை கட்டியது. இந்த புகைப்படங்கள் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக லடாக்கின் … Read more

எடு “புல்டோசர”.. உண்மையா இருந்தா இடிச்சுத் தள்ளுங்க! மம்தா பானர்ஜி போட்ட ஆர்டர் -ஆடிப்போன அதிகாரிகள்

India oi-Noorul Ahamed Jahaber Ali கொல்கத்தா: தாங்கள் அனைவரும் குத்தகைக்கு வீடு எடுத்து வசித்து வருவதாகவும், அது ஆக்கிரமிப்பு நிலமாக இருந்தால் புல்டோசரை எடுத்துசென்று இடிக்குமாறும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டு உள்ளார். மேற்கு வங்க முதலமைச்சராக உள்ள திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் பாஜகவினர் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர். அதேபோல் மேற்கு வங்க மாநில அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், திரிணாமூல் … Read more

மாறி மாறி அட்டாக்.. போரில் சண்டையிட்டுக்கொள்ளும் ரஷ்ய – உக்ரைன் வீரர்கள்.. விடாத மோதல்!

International oi-Halley Karthik கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கைகளை தொடங்கி ஏறத்தாழ 6 மாதங்கள் ஆகிவிட்டன. போர் இன்னமும் நடந்துகொண்டிருக்கக்கூடிய நிலையில் தற்போது போர் குறித்த வீடியோ கட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த போர் காரணமாக உக்ரைன் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. பள்ளிக்கூடங்கள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள் என அனைத்தும் நிர்மூலமாக்கப்பட்டுள்ளன. ஆனாலும் போர் இன்னும் முடிவுறா நிலையில், ரஷ்ய வீரர்களும் உக்ரைன் வீரர்களும் மாறி மாறி சண்டையிடும் காட்சிகள் வீடியோவாக வெளியாகியுள்ளன. சோவியத் … Read more