மே.வங்கத்தில் உள்ள மத்திய அரசு அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை நடத்துவேன்.. பாஜகவை மிரட்டும் மம்தா!

India oi-Mani Singh S கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் உள்ள மத்திய அரசு அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை நடத்துவேன் என மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியில் ஆளும் பாஜக அரசுடன் கடுமையான மோதல் போக்கை கடைபிடித்து வருபவர் மம்தா பானர்ஜி. பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோரையும் சகட்டுமேனிக்கு விமர்சிக்கும் மம்தா பானர்ஜி, வரும் 2024- ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவுக்கு எதிரான அணியை திரட்டுவதில் ஆர்வம் காட்டி வருகிறார். … Read more

கனடா வீதிக்கு ஏ.ஆர். ரஹ்மான் பெயர்.. இன்னும் அதிக தூரம் கடக்கணும்.. தன்னடக்கத்துடன் ஆஸ்கர்

International oi-Vishnupriya R ஒட்டாவோ: கனடா நாட்டின் மார்க்கம் நகரில் உள்ள தெருவிற்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஆஸ்கர் , கோல்டன் குளோப் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வாங்கி உலகளவில் தமிழகம் குறித்து பேச வைக்கப்பட்டவர் ஏ.ஆர்.ரஹ்மான். இவர் பல்வேறு மொழி படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அண்மையில் இணைப்பு மொழி ஆங்கிலம் என மத்திய அமைச்சர் அமித்ஷா சொன்னதை அடுத்து அவருக்கு பதிலடி தரும் வகையில் இணைப்பு மொழி தமிழ்தான் என பெருமை பொங்க … Read more

கள்ளக்குறிச்சி கலவரத்தில் மாடா திருடுறீங்க மாடு.. 4 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்.. கலெக்டர் அதிரடி!

Tamilnadu oi-Mohan S கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் ஏற்பட்ட கலவரத்தின் போது, மாடு திருடியதாக கைது செய்யப்பட்ட 4 பேரை, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஜூலை 13ஆம் தேதி பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, மாணவியின் மரணத்திற்கு நீதிகேட்டு, ஜூலை 17ஆம் தேதி … Read more

\"பயங்கரவாதிகள் புகலிடம்! மதராஸாவை அதனால் தான் இடித்தோம்..!\" சர்ச்சையை கிளப்பிய அசாம் முதல்வர்

India oi-Vigneshkumar கவுஹாத்தி: அசாம் மாநிலத்தில் தனியார் மதராஸா இடிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியுள்ள கருத்துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் இப்போது ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜக அரசு ஆட்சியில் உள்ளது. அவர் இப்போது கூறியுள்ள கருத்துகளை பெரும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. அசாம் மாநிலம் பர்பேட்டா மாவட்டத்தில் உள்ள தனியாருக்குச் சொந்தமான மதராஸா இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், … Read more

கிளாஸ்ரூமிலேயே.. பட்டப்பகலில் நடந்த அட்டூழியம்.. தலைமுடியை பிடித்த 3 பெண்கள்.. காரணம் தெரியுமா?

India oi-Hemavandhana கான்பூர்: கான்பூர் பள்ளி மாணவிகள் ஒருவரையொருவர் அடித்து முடியை இழுத்து சண்டைபோடும் வீடியோ ஒன்று வெளியாகி, அதிர்ச்சியை கூட்டி வருகிறது. சமீபகாலமாகவே பள்ளி மாணவிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அரங்கேறி வருகிறது.. இதில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் கைதாகியும் வருகிறார்கள். அதேசமயம், சில பள்ளிகளில் மாணவிகளே அத்துமீறும் தரக்குறைவான செயல்பாடுகளில் ஈடுபடும் செயல்களும் நடக்கின்றன.. அதிலும் சில அரசு பள்ளி மாணவர்களின், அட்டூழியங்களும், அமர்க்களங்களும் எல்லைமீறி வருகின்றன.. அந்த வீடியோக்களும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன. … Read more

காதலிக்க மறுத்த பள்ளி மாணவி! எரித்து கொன்ற கொடூரன்! சிரித்து கொண்டே போலீஸ் காரில் சென்ற பகீர் வீடியோ

India oi-Vigneshkumar ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் 19 வயது இளம் பெண் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, 12 ஆம் வகுப்பு படிக்கும் 19 வயது இளம்பெண் ஒருவர் 90 சதவீத தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். இருப்பினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். என்ன … Read more

90 தொகுதியிலும் போட்டி: ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஆவார் குலாம் நபி ஆசாத்..அடித்து சொல்லும் ஆதரவாளர்கள்

India oi-Mani Singh S ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என கூறப்படும் நிலையில், அங்கு குலாம் நபி ஆசாத் தலைமையில் புதிய கட்சி அனைத்து தொகுதியிலும் போட்டியிடும் என்றும், இதில் வெற்றி பெற்று ஜம்மு காஷ்மீர் முதல்வராக குலாம் நபி ஆசாத் பதவியேற்பார் என்றும் முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்து அடுத்தடுத்து முக்கிய தலைவர்கள் வெளியேறி வருகின்றனர். குறிப்பாக மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர முகமாக … Read more

தாயை பார்த்து ஆபாச கமெண்ட் அடித்த ரவுடியை அடித்தே கொன்று அம்மா காலடியில் கிடத்திய மகன்! பரபர ஆந்திரா

India oi-Jackson Singh விசாகப்பட்டினம்: தனது தாயை கிண்டல் செய்த ரவுடியை அடித்துக் கொன்ற இளைஞரை ஆந்திரா போலீஸார் தேடி வருகின்றனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் சீனு (45). பெயிண்ட்டரான அவர், அப்பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்திருக்கிறார். இவர் தினமும் காலையில் தனது கூட்டாளிகளுடன் அங்குள்ள கடைத்தெருவில் அமர்ந்து கொண்டு மது அருந்துவது வழக்கம். அதேபோல, அங்கு சென்று வருபவர்களை ஆபாசமாக பேசுவதும், சில சமயங்களில் அவர்களை தாக்குவதும் கூட சீனுவின் வாடிக்கையாக இருந்து … Read more

பாகிஸ்தானில் கனமழைக்கு 1,000க்கும் அதிகமானோர் பலி.. பருவம் தவறிய மழைக்கு காலநிலை மாற்றம் காரணமா?

International oi-Halley Karthik இஸ்லாமாபாத்: பாகிஸ்தாானில் கடந்த ஜூன் மாத்திலிருந்து தொடர்ந்து வரும் கனமழையின் காரணமாக தற்போது வரை 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிந்துள்ளனர். இந்நிலையில் “பாகிஸ்தான் தீவிரமான காலநிலை பேரழிவை எதிர்கொள்கிறது” என அந்நாட்டு மத்திய அமைச்சர் செனட்டர் ஷெர்ரி ரெஹ்மான் கூறியுள்ளார். இந்த மழை காரணமாக தற்போது வரை அந்நாட்டில் சுமார் 3 கோடிக்கும் அதிகமானோர் கடுமையான பாதிப்புகளை எதிர்க்கொண்டுள்ளனர். லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர். கனமழை பாகிஸ்தான் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக … Read more

இந்தியா எதுக்கு தலையிடனும்? இலங்கையில் இனப்பிரச்சனை இல்லையே! சொல்வது 'சீனா வாய்ஸ்' டக்ளஸ் தேவானந்தா

Srilanka oi-Mathivanan Maran யாழ்ப்பாணம்: இலங்கையில் ஈழத் தமிழருக்கு இனப் பிரச்சனை என்பதே இல்லை என்கிற போது இந்தியா ஏன் தலையிட வேண்டும் என்று இலங்கை அமைச்சரும் சீனாவின் ஆதரவாளருமான டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக டக்ளஸ் தேவானந்தா கூறியதாவது: ஈழத் தமிழ் மக்களுக்கு இன ரீதியான பிரச்னைகள் இலங்கையில் இருப்பதாக நான் கருதவில்லை. நியாயமான பிரச்னைகள் இருந்தால் அவற்றுக்கு உரிய தீர்வுகள் வழங்கப்பட வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கும் போது … Read more