உச்சகட்ட யுத்த பதற்றம்- தைவான் ஜலசந்தியில் அமெரிக்கா, சீனா போர்க்கப்பல்கள் முற்றுகை!

International oi-Mathivanan Maran தைபே: தைவான் ஜலசந்தியில் அமெரிக்கா மற்றும் சீனா போர்க்கப்பல்கள் நிலை கொண்டிருப்பதால் அப்பிராந்தியத்தில் உச்சகட்ட போர் பதற்றம் உருவாகியுள்ளது. தைவான் நாடு தம்மை உண்மையான சீனா என்கிறது. ஆனால் சீனா, தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்கிறது. சர்வதேச விவகாரங்களில் 1970களில் கூட தைவான் தான் உண்மையான சீனா என அங்கீகரிக்கப்பட்டது. அதற்கு பிந்தைய சர்வதேச அரசியல் சூழ்நிலைகள் மாறின. சீனாவைப் பொறுத்தவரை ஒற்றை சீனா என்கிற கோட்பாட்டை முன்வைக்கிறது. இதில் … Read more

இன்னொரு சரத் பவார்? 20 நாளில் தனிக் கட்சி தொடங்கும் குலாம் நபி ஆசாத்- காஷ்மீர் முதல்வர் வேட்பாளர்!

India oi-Mathivanan Maran ஶ்ரீநகர்: காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத் அடுத்த 20 நாட்களில் தனிக் கட்சி தொடங்க உள்ளதாகவும் ஜம்மு காஷ்மீர் தேர்தலில் முதல்வர் வேட்பாளர் அவர்தான் என்றும் அம்மாநில முன்னாள் அமைச்சர் ஜி.எம். சரூரி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் குலாம் நபி ஆசாத். காங்கிரஸ் மேலிடத்தின் மிகவும் நம்பிக்கைக்குரிய வலதுகரமாக இருந்தார். மத்திய அமைச்சர் பதவிகளை வகித்தார். கடந்த … Read more

பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா.. உடனே வாழ்த்திய பிரதமர் மோடி! என்ன சொல்லி இருக்காரு தெரியுமா?

News oi-Noorul Ahamed Jahaber Ali டெல்லி: பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா கடைசி ஓவரில் வெற்றியை சுவைத்து இருக்கும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். இந்தியாவின் தேசிய விளையாட்டாக ஹாக்கி இருந்தாலும் இந்தியர்களின் ஆஸ்தான விளையாட்டாக இருப்பது கிரிக்கெட்தான். என்னதான் உலகக்கோப்பை, ஐபிஎல் என பல தொடர்களை ரசிகர்கள் கண்டுகளித்தாலும் அனைவரும் அதிகம் எதிர்பார்ப்பது ஒன்றே ஒன்றைதான். அதுதான் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டி. … Read more

பிளாஷ்பேக்:பாகிஸ்தான் போட்டி.. ஜடேஜாவால் கோபத்தில் கத்திய பாண்டியா! 5 ஆண்டு கழித்து அசத்திய அதே ஜோடி

News oi-Noorul Ahamed Jahaber Ali துபாய்: கடந்த 2017 சாம்பியன்ஸ் டிராபில் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் தோற்ற இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா – ஜடேஜா மீது மைதானத்திலேயே கோபப்பட்ட நிலையில், இன்று அதே இணை ஒன்றிணைந்து பாகிஸ்தானை வீழ்த்தி இருக்கிறது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை போன்ற தெற்காசிய நாடுகளை சேர்ந்த கோடிக்கணக்கான மக்களின் உயிர் மூச்சாக திகழ்கிறது கிரிக்கெட் போட்டி. என்னதான் உலகக்கோப்பை, ஐபிஎல் என பல தொடர்களை ரசிகர்கள் கண்டுகளித்தால் அனைவரும் … Read more

ஆளுநர் மாளிகையில் “ராமர் கதை” நிகழ்வு.. ஆர்எஸ்எஸ் முன்னாள் நிர்வாகி தலைமையில் ஏற்பாடு! மக்கள் ஷாக்

News oi-Noorul Ahamed Jahaber Ali ஜெய்பூர்: ராஜஸ்தான் ஆளுநர் மாளிகையில் ஆர்எஸ்எஸ் முன்னாள் நிர்வாகி தலைமையில் ராமர் கதை என்ற ஆன்மீக நிகழ்வு நடத்தப்பட்டு வருவது பலரை புருவம் உயர்த்த செய்துள்ளது. ராஜஸ்தான் மாநில ஆளுநராக இருந்து வருபவர் கல்ராஜ் மிஸ்ரா. பாரதிய ஜனதா கட்சியில் சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் மத்திய அமைச்சர் போன்ற பதவிகளில் இருந்தவர். இமாச்சல பிரதேச ஆளுநராக பதவி வகித்து பின்னர் ராஜஸ்தான் மாநில ஆளுநராக மாற்றப்பட்டவர். இவர் தெரிவித்து … Read more

2024 பொதுத் தேர்தலில் பாஜகவை தனிமைப்படுத்துவோம்! கோழிக்கோடு நிகழ்ச்சியில் திருமாவளவன் உறுதி!

News oi-Arsath Kan கோழிக்கோடு: 2024 நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பாஜகவை தனிமைப்படுத்துவோம் என சூளுரைத்துள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன். கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடைபெற்ர சமூக சீர்த்திருத்தவாதி அய்யங்காளியின் 158வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர் இதனைக் கூறியிருக்கிறார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஜனநாயக முற்போக்கு சக்திகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும் என திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார். கேரளாவில் ஒரு காலத்தில் அமைதியாக கூட தாழ்த்தப்பட்ட மக்கள் நடக்கக்கூடாது … Read more

இந்தியா – பாகிஸ்தான் போட்டி.. மாணவர்களுக்கு என்ஐடி போட்ட “ஆர்டர்!” கடும் கட்டுப்பாடு! மீறினால் ஃபைன்

India oi-Noorul Ahamed Jahaber Ali ஸ்ரீநகர்: இன்று நடைபெறும் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான ஆசிய கோப்பை போட்டியை கும்பலாக அமர்ந்து பார்க்கக்கூடாது என்று ஸ்ரீநகர் தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (என்.ஐ.டி) உத்தரவிட்டு இருக்கிறது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை போன்ற தெற்காசிய நாடுகளை சேர்ந்த கோடிக்கணக்கான மக்களின் உயிர் மூச்சாக திகழ்கிறது கிரிக்கெட் போட்டி. இந்தியாவின் தேசிய விளையாட்டாக ஹாக்கி இருந்தாலும் இந்தியர்களின் ஆஸ்தான விளையாட்டாக இருப்பது கிரிக்கெட்தான். என்னதான் உலகக்கோப்பை, ஐபிஎல் என … Read more

கனமழைக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலி.. 20 லட்சம் ஏக்கர் பயிர்கள் நாசம்.. திணறும் பாகிஸ்தான்!

International oi-Mani Singh S இஸ்லாமபாத்: பாகிஸ்தானில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இதுவரை 1033 பேர் பலியாகியுள்ளதாகவும், 20 லட்சம் ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட பயிர்கள் நாசம் ஆகியுள்ளதாகவும், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளதாகவும் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் ஒருபுறம் கடும் பொருளாதார நெருக்கடி நிலை நிலவி வரும் நிலையில், மழையினால் மேலும் அந்நாட்டில் பலத்த சேதம் ஏற்பட்டு வருகிறது. கடந்த ஜூன் மாதம் தொடங்கிய பருவமழை தொடர்ந்து இன்னும் விடாமல் … Read more

வடமாநிலங்களில் வெளுத்து வாங்கும் மழை.. கங்கை நதியில் வெள்ளப்பெருக்கு.. 80 கிராமங்கள் மூழ்கின

News oi-Mani Singh S போபால்: வடமாநிலங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருவதன் காரணமாக கங்கை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அபாய கட்டத்தை தாண்டி நீர் ஓடும் நிலையில், கரையோரத்தில் உள்ள 80-க்கும் மேற்பட்ட கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியதால் மக்கள் பரிதவித்து வருகின்றனர். பீகார், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால், கங்கை நதியில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அபாய கட்டத்தை தாண்டி நீர் ஓடுகிறது. … Read more

சோனாலி பாகட் மரணம்.. அடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள்.. சிபிஐ விசாரிக்க முடிவா..கோவா முதல்வர் பதில்!

News oi-Mani Singh S பானாஜி: நடிகையும், பாஜகவை சேர்ந்தவருமான சோனாலி போகட் மர்ம மரணம் குறித்து அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல்கள் வெளிவரும் நிலையில், கோவா முதல்வர் இந்த வழக்கில் தேவைப்பட்டால் சிபிஐ விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். அரியானா மாநிலத்தைச் சேர்ந்த நடிகையும், பாஜனதாவை சேர்ந்தவருமான சோனாலி போகட் கடந்த 22-ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். கூட்டாளிகள் 2 பேருடன் கோவா சென்ற நிலையில் அங்கு நடந்த பார்டியின் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக … Read more