தற்காலிகமாக தப்பிய இம்ரான் கான்.. முன் ஜாமீனை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்தது பாகிஸ்தான் கோர்ட்!

International oi-Mani Singh S இஸ்லாமபாத்: பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு செப்டம்பர் மாதம் 1-ம் தேதி வரை ஜாமீன் வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதனால் அவர் கைது நடவடிக்கையில் இருந்து தற்காலிகமாக தப்பியுள்ளார். பாகிஸ்தானின் பிரதமராக இம்ரான் கான் இருந்போது நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவியது. இந்த பொருளாதார நெருக்கடிக்கு இம்ரான் கான் ஆட்சியின் சரியான நிர்வாகத் திறமையின்மையே காரணம் என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டதோடு, கட்சிகள் அவருக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப்பெற்றன. … Read more

தேர்தல் வரட்டுங்க.. அப்போ பார்த்துக்கலாம்.. பரூக் அப்துல்லா கொடுத்த முக்கிய அப்டேட்

India oi-Mani Singh S ஸ்ரீநகர்: தீர்மனங்கள் நிறைவேற்ற கட்சியினருக்கு உரிமை உள்ளது என்றும், ஆனால், இது குறித்த இறுதி முடிவு தேர்தல் நடக்கும்போதுதான் முடிவு செய்யப்படும் என்றும் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த 2019- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து அந்த மாநிலத்தை இரண்டாக பிரித்த மத்திய அரசு, சட்ட சபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு … Read more

வரலாறு காணாத வறட்சி.. தண்ணீருக்கு திண்டாடும் சீனா.. 37 கோடி மக்கள் பாதிப்பு.. உணவு உற்பத்தி பாதிப்பு

International oi-Mani Singh S பீஜிங்: இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான சீனாவில் பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் வரலாறு காணாத அளவுக்கு வறட்சி நிலவுவதாகவும், இதனால் 37 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தற்போது கடும் வெப்ப அலை வீசி வருகிறது. வெப்ப நிலை உயர்வின் காரணமாக சீனாவின் பல இடங்களில் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதிலும் கடந்த ஒரு மாதமாக சீனாவில் வெப்பநிலை அதிகரித்து வருவதால், முக்கிய நீர்நிலைகள் கூட தண்ணீர் இல்லாமல் வறண்டு … Read more

பாகிஸ்தான் ரூ.30,000 கொடுத்தாங்க.. இந்திய ராணுவத்தினரை தாக்க வந்தோம்.. பிடிபட்ட தீவிரவாதி வாக்குமூலம்

India oi-Jackson Singh ஸ்ரீநகர்: இந்தியாவில் பயங்கர தாக்குதல் நடத்த பாகிஸ்தான் உளவு அமைப்பு அனுப்பி வைத்த தீவிரவாதியை நமது ராணுவத்தினர் சுட்டுப் பிடித்துள்ளனர். இதில் அவர் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார். மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தது முதலாக தீவிரவாதிகள் மூலம் இந்தியாவுக்கு அதிக குடைச்சலை பாகிஸ்தான் தந்துக் கொண்டிருந்தது. இதன் உச்சக்கட்டமாக, கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் காஷ்மீருக்குள் ஊடுருவிய தீவிரவாதிகள் உரி ராணுவத் தளத்தில் பயங்கர தாக்குதலை நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த … Read more

ரூ.4 லட்சம் வரதட்சணைக்காக இளம்பெண்ணை உயிருடன் எரித்த குடும்பம்.. மயிலாடுதுறையில் பயங்கரம்

Tamilnadu oi-Jackson Singh மயிலாடுதுறை: ரூ. 4 லட்சம் வரதட்சணைக்காக இளம்பெண்ணை மாப்பிள்ளை வீட்டார் உயிருடன் எரித்துக் கொன்ற சம்பவம் மயிலாடுதுறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகரீகமும், பண்பாடும் எவ்வளவு மேம்பட்ட போதிலும், சில மனிதர்களிடம் இன்னமும் பல கீழ்த்தரமான பழக்கவழக்கங்கள் இருக்கவே செய்கின்றன. அதில் முக்கியமானது வரதட்சணை. திருமண பந்தத்தை ஏதோ சந்தைக் கடை வியாபாரம் போல பேரம் பேசும் வரதட்சணை பழக்கம், இன்னும் நம் நாட்டில் தொடரவே செய்கிறது. ஏழை, செல்வந்தர் என எந்த வித்தியாசமும் … Read more

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் மேலும் 3 பேர் அரெஸ்ட் – கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை 355 ஆக அதிகரிப்பு!

Tamilnadu oi-Mohan S கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளகனியாமூர் தனியார் பள்ளி வன்முறை சம்பவத்தில், வாட்ஸ் அப் குழு மூலம் வன்முறையைத் தூண்டியதாக 17 வயது சிறுவன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதன்மூலம், இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 355-ஆக அதிகரித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரிலுள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +2 மாணவி உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும், நீதி விசாரணை கோரியும் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். … Read more

பரிதா குழுமத்தில் 3-வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை.. முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதா?

Tamilnadu oi-Mani Singh S திருப்பத்தூர்: ஆம்பூரில் ஃபரிதா குழுமத்துக்கு சொந்தமான தோல், காலணி ஆலைகள் உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து 3-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையை தலைமையிடமாக கொண்ட பிரபல நிறுவனமான பரிதா குழுமம், ஷூ, பெல்ட் , தோல் பை உள்ளிட்ட தோல் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறது. இந்த குழுமத்தில் பரிதா ஷூஸ், பரிதா லெதர், உள்பட சுமார் 11 துணை … Read more

உ.பி. அரசால் சிறையில் அடைக்கப்பட்ட பத்திரிகையாளர் சித்திக் கப்பானின் ஜாமீன் மனு மீது நாளை விசாரணை

India oi-Mathivanan Maran டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் பலாத்கார சம்பவம் தொடர்பாக செய்தி சேகரிக்க சென்றதற்காக தேசவிரோத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட மலையாள பத்திரிகையாளர் சித்திக் கப்பானின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை நடைபெற உள்ளது. ஹத்ராஸில் பழங்குடி இனப் பெண், 4 பேர் கொண்ட கும்பலால் கடந்த ஆண்டு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். மேலும் 4 பேரும் அப்பெண்ணின் நாக்கை அறுத்து சாலையில் வீசினர். அப்பெண் … Read more

ஜார்க்கண்ட் சுரங்க முறைகேடு வழக்கு: முதல்வர் ஹேமந்த் சோரன் உதவியாளர் பிரேம் பிரகாஷ் கைது

India oi-Mathivanan Maran ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் சுரங்க முறைகேடு வழக்கில் முதல்வர் ஹேமந்த் சோரனின் உதவியாளர் பிரேம் பிரகாஷ் இன்று அதிரடியாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். முன்னதாக நேற்று பிரேம் பிரகாஷ் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் உள்ளிட்டவைகள் சிக்கின. 2021-ம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ஹேமந்த் சோரன், சுரங்க ஒதுக்கீடு பெற்றார். முதல்வர் எனும் அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தி சுரங்க உரிமம் பெற்றார் ஹேமந்த் சோரன் என்பது … Read more

உக்கிரமாகும் உக்ரைன் போர்! மீண்டும் கொடுக்கும் அமெரிக்கா! ட்ரோன்கள் உள்ளிட்ட 3 பில்லியன் டாலர் உதவி!

International oi-Rajkumar R கீவ் : உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து பல மாதங்கள் ஆகியுள்ள நிலையில், ரஷ்ய படையினருக்கு உக்ரைன் ராணுவம் இணையா பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் உக்ரைனுக்கு கூடுதலாக 3 பில்லியன் டாலர் மதிப்பிலான உதவிகளை வழங்க உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ரஷ்யா உக்ரைன் போர் தொடங்கிகிட்டத்தட்ட 6 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் உக்ரைன் நாட்டின் பல பகுதிகள் தொடர்ந்து ரஷ்ய ராணுவத்தினரின் குண்டுவீச்சுக்கு ஆளாகி வருகின்றன. இதனால் லட்சக்கணக்கான மக்கள் … Read more