காஷ்மீர் தேர்தல்.. திடீரென களத்தில் குதித்த தடை செய்யப்பட்ட அமைப்பு! உற்று பார்க்கும் அரசியல் தலைகள்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் இன்னும் சில வாரங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பணிகளை அங்குள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே அங்குத் தடை செய்யப்பட்ட ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பினர் தெற்கு காஷ்மீரின் பல தொகுதிகளில் சுயேச்சையாகப் போட்டியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது ஜம்மு-காஷ்மீரில் சட்டசபைத் தேர்தல் நடக்கிறது. Source Link

இப்படி ஒரு அதிசய கூட்டணியா? ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ்- தேசிய மாநாட்டு கட்சிகள் வினோத முடிவு!

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சிகள் வினோதமான கூட்டணியை அமைத்துள்ளன. காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சிகளிடையே தொகுதி உடன்பாடு எட்டப்படாத 5 தொகுதிகளிலும் இரு கட்சிகளிலும் நட்பு அடிப்படையில் பரஸ்பரம் போட்டியிட்டுக் கொள்வது என்றும் எஞ்சிய 85 தொகுதிகளில் மட்டுமே கூட்டணி எனவும் இரு கட்சிகளும் முடிவு செய்துள்ளன. Source Link

காஷ்மீர் தேர்தலில் \"கண் வைக்கும்\" அமெரிக்கா! உமர் அப்துல்லாவுடன் தூதரக அதிகாரிகள் குழு சந்திப்பு

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதரக உயர் அதிகாரிகள் நேற்று முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சியின் தேசிய துணைத் தலைவருமான உமர் அப்துல்லாவை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதை பாஜக ஆதரவு நெட்டிசன்கள் கடுமையாக விமர்சிக்கிறார்கள். இந்த ஆலோசனையின் போது, ஜம்மு காஷ்மீருக்கு பயணம் மேற்கொள்ள Source Link

மமதா ராஜினாமா செய்தாகனும்.. தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் மருத்துவ மாணவர்களின் பிரம்மாண்ட பேரணிகள்!

       கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தமது பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி இன்று கொல்கத்தாவில் தலைமைச் செயலகத்தை மருத்துவ மாணவர்கள் முற்றுகையிடுகின்றனர். கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முதல்வர் மமதா  பானர்ஜி ராஜினாமா செய்ய வேண்டும் என்பது போராடும் மாணவர்களின் Source Link

கொல்கத்தா மருத்துவர் கொலை.. மூக்கு முட்ட குடி! ரெட் லைட் ஏரியாவிலும் அடங்காத ஆசை.. கொலையாளி பகீர்

கொல்கத்தா: கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கொலையாளி என சந்தேகிக்கப்படும் சஞ்சய் ராயிடம் சிபிஐ அதிகாரிகள் உண்மை கண்டறியும் சோதனை நடத்தியுள்ளனர். இந்நிலையில் கொலையாளி மதுகுடித்து விட்டு ரெட் லைட் ஏரியாவுக்கு சென்றதாகவும், பின்னர் மருத்துவமனைக்கு வந்து மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறியதாக Source Link

பாஜகவில் இணைகிறார் ஜார்க்கண்ட் Ex முதல்வர் சம்பாய் சோரன்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு! நள்ளிரவில் பரபர

ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையே ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், ஆளும் ஜேஎம்எம் கட்சியின் மூத்த தலைவருமான சம்பாய் சோரன் வரும் ஆகஸ்ட் 30ம் தேதி பாஜகவில் இணைகிறார். இதை அசாம் முதல்வரும் ஜார்கண்ட் பாஜக தேர்தல் பொறுப்பாளருமான ஹிமந்தா பிஸ்வா சர்மா உறுதி செய்துள்ளார். ஜார்க்கண்ட்டில் இந்தாண்டு Source Link

காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ் தொகுதி பங்கீடு ஓவர்! ஆனா 5 இடங்களில் 2 கட்சிகளும் போட்டி

ஸ்ரீநகர்: காஷ்மீரில் அடுத்த மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், அங்குப் போட்டியிடும் தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் காங்கிரஸ் இடையே இப்போது தொகுதிப் பங்கீடு இறுதியாகியுள்ளது. முதலாம் கட்ட தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய 2 நாட்கள் மட்டுமே கால அவகாசம் இருக்கும் நிலையில், தொகுதிப் பங்கீடு இப்போது நிறைவடைந்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சுமார் பத்தாண்டுகளுக்குப் Source Link

கொல்கத்தா மருத்துவர் கொலை! \"நான் செமினார் ஹால் சென்ற போதே அவர் செத்து கிடந்தார்..\" கைதான நபர் பகீர்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் உள்ள ஆர் ஜி கார் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள சஞ்சய் ராய், உண்மையைக் கண்டறியும் சோதனையில் கூறிய சில தகவல்கள் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கார் மருத்துவமனையில் கடந்த ஆக. Source Link

உச்ச கட்டத்தில் போர்.. தீவிரம் காட்டும் இஸ்ரேல்! பாலஸ்தீன பலி எண்ணிக்கை 40,000ஐ கடந்தது

காசா: பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், காசாவில் போரால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40,000ஐ கடந்திருக்கிறது. இதனையடுத்து போர் நிறுத்தம் குறித்த கோரிக்கைகள் வலுவடைந்து வருகின்றன. கடந்த 2007ம் ஆண்டு முதல் பாலஸ்தீனத்தின் காசா பகுதி இஸ்ரேலிய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து, ஹமாஸ் எனும் பாலஸ்தீன விடுதலை அமைப்பானது கடந்த Source Link

திடீர் வௌ்ளத்தில் சிக்கி 19 பேர் பலி.. பலர் மாயம்! இந்தோனேசியாவில் ஷாக்! மீட்பு பணிகள் தீவிரம்

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் திடீரென ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் 19 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் பலர் காயமடைந்துள்ளனர். மீட்பு பணிகள் தீவிரமடைந்து வருகின்றன. இந்தோனேசியாவின் வடக்கு மலுகுவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. இதனையடுத்து, நேற்று திடீரென்று காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் ஏராளமான வீடுகள் மூழ்கின. பல Source Link