‘ஸ்கைப்’ இணைய வழி அழைப்புச் சேவையை மூட மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவு…

‘ஸ்கைப்’ இணைய வழி அழைப்புச் சேவையை மூட மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. 2003 இல் தொடங்கப்பட்ட ஸ்கைப், அதன் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகள் மூலம் 2000த்தின் தொடக்கத்தில் லேண்ட்லைன் தொலைபேசி சேவையை திணறடித்து கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்ட ஒரு வீட்டுப் பெயராக மாறியது என்றால் அது மிகையாகாது. ஆனால் சமீப ஆண்டுகளில் ஜூம் மற்றும் ஸ்லாக் போன்ற பயன்படுத்த எளிதான மற்றும் நம்பகமான போட்டியாளர்களுடன் போட்டியிட இந்த தளம் போராடிவருகிறது. ஏனெனில், ஸ்கைப்பின் அடிப்படை தொழில்நுட்பம் … Read more

அதிபர் டிரம்பிடம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மன்னிப்பு கேட்க வேண்டும்… அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர்

வெள்ளை மாளிகையில் வெள்ளிக்கிழமை அன்று சர்வதேச தொலைகாட்சி மற்றும் ஊடகங்கள் முன் அமெரிக்கா மற்றும் உக்ரைன் நாட்டு அதிபர்கள் வார்த்தை மோதலில் ஈடுபட்டனர். ரஷ்யா உடனான போரில் உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா ராணுவ தளவாடங்களை வழங்கி உதவி செய்த நிலையில் உக்ரைன் அதற்கான நன்றி விசுவாசத்தை காட்டவில்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் துணை அதிபர் வான்ஸ் ஆகியோர் குற்றம்சாட்டினர். அமெரிக்க அதிபரின் விருந்தினராக அங்கு சென்ற ஜெலன்ஸ்கிக்கு வான்ஸ் குறிப்பிட்ட சில கடந்த கால … Read more

முதல்வர் முக ஸ்டாலினுக்கு தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்து

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு  பல தலைவர்கள்  வாழ்த்து தெரிவித்துள்ளனர். இன்று தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடி வருவதைய்டொட்டி பல்வேறு கட்சித் தலைவர்களும் முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் : “தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், இனமானப் பேராசிரியர் வழியில், கழகத்தை வழிநடத்தும் கழகத்தலைவர், தமிழ்நாட்டு மக்களின் பேரன்பைப் பெற்று, திராவிட மாடல் நல்லாட்சி நடத்துவதுடன் … Read more

90 செகண்டில் அமெரிக்கா கட்டிவைத்திருந்த பிம்பத்தை அசைத்துப் பார்த்த ஜெலன்ஸ்கி… உக்ரைனுக்கு ஆதரவாக ஒன்று திரண்ட EU

கொஞ்சம் கூட நன்றி விசுவாசம் இல்லை… ராஜதந்திரம் என்ன ராஜதந்திரம்…. எங்க எதிர்க்கட்சி காரங்ககூட சரசம் பண்ணது நீதானே ?… 2014ல் இருந்து இப்பவரை ரஷ்ய தாக்குதல் தொடருது எங்களைக் காப்பாற்ற என்ன பண்ணீங்க ? இப்போ நிலைமையே வேற நாங்க நிறுத்தறோம்… நிறுத்திக் காட்டுறோம்… என்ன உத்தரவாதம் ? என்ன உத்தரவாதம் தரமுடியும்… இந்த நிமிஷம் தலைமேல் குண்டு விழாதுன்னு நிச்சயம் இல்லை… இவை, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையே … Read more

பாஜகவின் மறைமுக மொழிக் கொள்கை மாநில மொழி வெறுப்ப்பு : முதல்வர் ஸ்டாலின்

சென்னை தமிழக முதல்வர் மு  க ஸ்டாலின் மாநில மொழி வெறுப்பே பாஜகவின் மறைமுக மொழிக் கொள்கை எனத் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு க ஸ்டாலி இந்தி திணிப்பை எப்போதும் எதிர்ப்போம் என்ற தலைப்பில் எழுதிய கடிதத்தில், ”மாநில மொழிகளை வளர்ப்பதற்கும், பரவச் செய்வதற்கும்தான் தேசிய கல்விக் கொள்கை மூலம் மும்மொழித் திட்டத்தைச் செயல்படுத்துகிறோம் என்று பா.ஜ.க. அரசு சொல்வது பச்சைப் பொய் என்பதை பஞ்சாப், தெலுங்கானா மாநிலங்கள் அம்பலப்படுத்தியுள்ளன. மத்திய அரசின் பாடத்திட்டத்தின் கீழ் … Read more

டெல்லி : தமிழ்நாடு இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

டெல்லி தலைநகர் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இன்று டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டு மிரட்டலால் தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த சுப்ரீம்கோர்ட்டு நீதிபதி மகாதேவன் உள்பட அனைத்து விருந்தினர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இந்த வெடிகுண்டு மிரட்டல் இமெயில் மூலம் விடுக்கப்பட்டுள்ளது/ தொடர்ந்து மோப்ப நாய்கள் உதவியுடன் டெல்லி போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதியில் ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. இதுவரை … Read more

கடும் பனிச்சரிவால் உத்தரகாண்டில் 4 பேர் பலி – 50 பேர் மீட்பு

சமோலி உத்தரகாண்ட் மாநிலத்தில் கடும் பனிச்சரிவு ஏற்பட்டு இதுவரை 50 பேர் மீட்கப்பட்டு 4 பேர் உயிரிழந்துள்ளனர்/ நேற்று அதிகாலை உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் உள்ள மனா மற்றும் மனா பாஸ் இடையேயான பகுதியில் ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் எல்லை சாலைகள் அமைப்பு தொழிலாளர்கள் தங்கியிருந்த ஒரு முகாம் மீது பனிக்குவியல் விழுந்தது. முகாமில் இருந்த 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரோடு பனியில் புதைந்தனர். எனவே  அங்கு பெரும் பதற்றமும், பீதியும் உருவானது. தகவல் கிடைத்ததும் … Read more

இரு பள்ளி மாணவர்கள் மோதலில்  10 ஆம் வகுப்பு மாணவர் பலி

கோழிக்கோடு கேரளாவில் 2 பள்ளி மாணவர்களுக்கிடையே நடந்த மோதலில் 10 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கேரவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள எம்ஜே மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்த முகமது ஷாபாஸ் (15 கீழக்கோத் கிராமத்தில் உள்ள தனியார் டியூசன் சென்டரில் பயிற்சி பெற்று வந்துள்ளார். இந்த டியூசன் சென்டரில் பிப்.23ஆம் தேதி பிரியாவிடை நிகழ்ச்சி நடந்துள்ளது. இந்நிகழ்ச்சியில் அங்கு பயின்று வரும் எம் ஜே மேல்நிலைப்பாள்ளி மற்றும் தாமரச்சேரி ஜி வி … Read more

6 பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட்ட ரயில்கள்

சென்னை தெற்கு ரயில்வே பயணிகள் வசதிக்காக ஒரு சில ரயில்களில் கூடுதல் பெட்டிக்ள் இணைக்க உள்ளது.   தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், :பயணிகள் வசத்க்காக பின்வரும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தற்காலிகமாக கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும்: தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு (வண்டி எண்: 22681) புதன், வெள்ளி, சனி ஆகிய தினங்களில் இயக்கப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதலாக 6 பெட்டிகள் இணைக்கப்படுகிறது. அதில் ஒரு ஏசி இரண்டு அடுக்கு பெட்டி, இரண்டு ஏசி மூன்று அடுக்கு … Read more

கடந்த மாதம் சென்னை மெட்ரோவில் 86.65  லட்சம் பேர் பயணம்

சென்னை சென்னைமெட்ரோ ரயில்களில் சென்ற மாதம் 86.65 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், ”சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரெயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 86,65,803 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் 86,99,344 பயணிகள் … Read more