குளிப்பதற்கு தகுதியற்ற திரிவேணிசங்கம நீர் : தேசிய பசுமை தீர்ப்பாயம்

பிரயாக்  ராஜ் திரிவேணி சங்கம நீர் குளிக்க தகுதியற்றது என தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவித்துள்ளது. கடந்த மாதம் 13-ம் தேதி தொடங்கிய உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளாவில், நாள்தோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, 3 நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.   55 கோடி பேர் இதுவரை புனித நீராடியுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இங்கு மேலும் பலர் புனித நீராட வருவார்கள் என்று எதிர்பார்ப்பதால், … Read more

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் மகனுடன் சேர்ந்து விளையாட ஓய்வு முடிவை திரும்ப பெற்றார்

காபூல் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது நபி தனது மகனுடன் விளையாட விரும்புவதால் ஓய்வு முடிவை  திரும்ப பெற்றுள்ளார். ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான முகமது நபி, எதிர் வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடருடன் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். தற்போது ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆடி வரும் முகமது நபி தனது ஓய்வு முடிவை … Read more

பிரதமர்  மோடி சத்ரபதி சிவாஜிக்கு புகழாரம்

டெல்லி பிரதமர் மோடி  சத்ரபதி சிவாஜிக்கு புகழாரம் சூட்டி உள்ளார். தென்னிந்திய வரலாற்றின் பொற்காலம் என  முகலாயர்களுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் சவாலாக திகழ்ந்த மராட்டிய மாமன்னன் சத்ரபதி சிவாஜியின் ஆட்சிகாலம்  போற்றப்படுகிறது. இன்று  சத்ரபதி சிவாஜியின் 395 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.  பிரதமர்மோடி சத்ரபதி சிவாஜியின் பிறந்தநாளையொட்டி அவரை மிகவும் புகழ்ந்துள்ளார். பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில், “சத்ரபதி சிவாஜியின் வீரமும் தொலைநோக்குத் தலைமையும் சுயராஜ்யத்திற்கு அடித்தளமிட்டன, தைரியம் மற்றும் நீதியின் மதிப்புகள் பல தலைமுறைகளை ஊக்கப்படுத்தியது. … Read more

மகா கும்பமேளா : ரூ.3 லட்சம் கோடி மதிப்பிலான வணிகத்தை உருவாக்கும்: வர்த்தக அமைப்பு CAIT மதிப்பீடு

புனித நகரமான பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளாவில் பொருட்கள் மற்றும் சேவைகள் மூலம் ரூ.3 லட்சம் கோடி (USD 360 பில்லியன்) வர்த்தகம் நடந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது இந்தியாவின் மிகப்பெரிய பொருளாதார நிகழ்வுகளில் ஒன்றாக அமைந்துள்ளது என்று அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பின் (CAIT) பொதுச் செயலாளர் மற்றும் சாந்தினி சௌக் எம்.பி. பிரவீன் கண்டேல்வால் தெரிவித்தார். 144 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் மகா கும்பமேளா ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26 வரை பிரயாக்ராஜில் நடைபெறுகிறது, … Read more

இந்தியாவின் புகழ்பெற்ற காம்பா கோலாவை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அறிமுகப்படுத்தியது ரிலையன்ஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் FMCG கிளையாக செயல்படும் ரிலையன்ஸ் நுகர்வோர் தயாரிப்புகள் லிமிடெட் (RCPL), புகழ்பெற்ற இந்திய குளிர்பான பிராண்டான காம்பா கோலாவை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE) அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது, இந்திய சந்தையில் கோகோ கோலா மற்றும் பெப்சிக்கு தடைவிதிக்கப்பட்டிருந்த 1980 காலகட்டத்தில் இந்தியாவில் காம்பா-கோலா மற்றும் தம்ஸ் அப் பிரபலமாக இருந்தன. காம்பா கோலா, காம்பா எலுமிச்சை, காம்பா ஆரஞ்சு மற்றும் பூஜ்ஜிய சர்க்கரை விருப்பமான கோலா ஜீரோ உள்ளிட்ட நான்கு விதமான குளிர்பானங்களை UAE … Read more

30லட்சம் மாணவர்கள் மும்மொழி கற்பதாக அண்ணாமலை தகவல் – ‘தவறான தகவல்’ என தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் பதில்….

சென்னை: தமிழ்நாட்டில், 30 லட்சம் மாணவர்கள் மும்மொழி கற்பதாகவும், அதுபோல  52 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மும்மொழி கற்கும் வாய்ப்பு கிடைக்கக் கூடாதா? என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதற்கு, தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் பதில் அளித்ரதுள்ளது. அண்ணாமலை கூறிய தகவல் தவறானது, ஆதற்கான தரவுகள்  எதவும் இல்லை என்று கூறியிருப்பதுடன்,  தமிழ்நாட்டில் வெறும் 3.16 % பள்ளிகளில் மட்டுமே இந்தி கட்டாயம் என கூறி  நடத்தப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளது. மத்தியஅரசு, … Read more

இந்தியாவின் 26-வது தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்றார் ஞானேஷ் குமார்

டெல்லி: நாட்டின் 26-வது தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள ஞானேஷ் குமார் இன்று தனது அலுவலகத்தில் பதவியேற்றார். அதைத்தொடர்ந்து தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள விவேக் ஜோஷியும் பதவி ஏற்றார். இந்திய தலைமை தேர்தல் ஆணையராக இருந்த ராஜீவ் குமார்  பிப்ரவரி 18-ம் தேதி ஒய்வு பெற்றார். இதையடுத்து,  புதிய தலைமை தேர்தல் ஆணையராக  பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வுபெற்ற  ஞானேஷ் குமார் நியமனம் செய்யப்பட்டார். தேர்தல் ஆணையத்தின் (EC) உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான புதிய சட்டத்தின் கீழ், … Read more

அர்ஜெண்டினாவில் அதிபருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்

பியூனஸ் அயர்ஸ் அர்ஜெண்டினாவின் அதிபருக்கு எதிராக அந்நாட்டு எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உள்ளன. அர்ஜென்டினாவில் அதிபர் ஜேவியர் மிலே (வயது 54) தலைமையிலான வலதுசாரி லிபர்டி அட்வான்சஸ் கூட்டணி கட்சி ஆட்சி நடைபெறுகிறது. இவர் லிப்ரா என்ற கிரிப்டோகரன்சி குறித்து எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அதில் சிறு வணிகங்கள் மற்றும் தொடக்க நிறுவனங்களுக்கு நிதியளிக்க லிப்ரா உதவும் என குறிப்பிட்டு இருந்தார். மேலும் அதனை வாங்குவதற்கான இணைப்பையும் அதில் பகிர்ந்து கொண்டார். இதனால் அந்த … Read more

நேற்று திமுக கூட்டணி கட்சிகள் மத்திய அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் : முதல்வர் பாராட்டு

சென்னை நேற்று திமுக கூட்டணி கட்சிகள் ஆட்சியர் அலுவலகம் முன்பு மத்திய அரசை எதிர்த்து ஆர்ப்பாடம் நடத்தி உள்ளனர். மத்திய கல்வி அமைச்சர் மும்மொழி கொள்கையை அமல்படுத்தினால் தான் தமிழகத்திற்கு நிதி தருவோம் என்று கூறியதற்கு தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மத்திய பட்ஜெட், மும்மொழி கொள்கை, யு.ஜி.சி. விதி என எல்லாவற்றிலும் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்து வருவதாகவும் தி.மு.க. கூட்டணி கட்சிகள் தெரிவித்து வந்தன. எனவே நேற்று மாலை தமிழகத்தின் உரிமைகளை … Read more

புதிய தேர்தல் ஆணையர் நியமனம் : ராகுல் காந்தி கடும் விமர்சனம்

டெல்லி காங்கிரஸ் தலைவர்  ராகுல்காந்தி புதிய தேர்தல் ஆணையர் நியமனம் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர்ர் ராஜீவ் குமாருக்கு 65 வயது நிரம்பியதால் இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) பணி ஓய்வு பெறுகிறார்.  புதிய தலைமை தேர்தல் கமிஷனரை தேர்வு செய்வதற்காக பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக்குழு கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இக்குழுவில் உறுப்பினராக உள்ள உள்துறை மந்திரி அமித்ஷா, நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். புதிய … Read more