தமிழ்நாட்டில் ஒட்டகங்களை பலியிடக்கூடாது! உயர்நீதி மன்றம்…

சென்னை: தமிழ்நாட்டில் ஒட்டகங்களை பலியிடக்கூடாது என்றும், மீறி தமிழகத்திற்கு கொண்டுவந்து பலியிட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்துக்கு சட்டவிரோதமாக ஒட்டகங்களை கொண்டு வருவதையும், பலியிடுவதையும் தடுக்க உத்தரவிடக் கோரி கால்நடைகளுக்கான இந்திய மக்கள் அமைப்பு சார்பில் 2015ம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில்,  சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி … Read more

 வார ராசிபலன்: 15.4.2022  முதல் 21.4.2022 வரை! வேதா கோபாலன்

மேஷம் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் சமீப காலம் வரைக்கும் பேச்சினால் பிரச்னைங்க வந்துக்கிட்டிருந்தது  இல்லையா? இனி வாக்கு வன்மையால தொழில்/ பிசினஸ் நல்லாவே நடைபெறும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பாங்க. நீங்க வெளியில் கொடுத்திருந்த கடன் பாக்கிகள் வசூலாகும். நீங்க அப்ளை செய்திருந்த கடன் வசதி கிடைக்கும். உத்தியோகத்தில உள்ளவங்களுக்கு வேலைச் சுமை ஓரளவு குறையும். நீங்க எப்பவோ செய்த முயற்சிங்களுக்கு சாதகமான பலன் கெடைக்கும். கடினமாக காரியங்களையும், திறமையாகச் செய்து முடிச்சு நிம்மதிப் பெருமூச்சு விடுவீங்க. ஃபேமிலியில் … Read more

இலங்கயில் அதிபர் பதவி விலக கோரி 7வது நாளாக போராட்டம்

கொழும்பு: இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு காரணமான அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக் கோரி கொழும்பு நகரின் பல பகுதிகளில் மிகப் பிரம்மாண்டமான அளவில் போராட்டம் நடைபெற்றது. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதால் உணவுப் பொருட்கள் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. பெட்ரோலியப் பொருட்களுக்கும் மின்சாரத்துக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.இலங்கையில் புத்தாண்டு தொடங்கிய மகிழ்ச்சியைக் கூட மக்கள் கொண்டாடவில்லை. இந்நிலையில் கொழும்பு நகரில் பிரம்மாண்டமான அளவில் போராட்டம் தீவிரம் அடைந்தது. பெருமளவில் மக்கள் திரண்டு … Read more

உலகம் முழுவதும் இன்று புனித வெள்ளி கடைபிடிப்பு

சென்னை: உலகம் முழுவதும் இன்று புனித வெள்ளி இன்று கடைபிடிக்கப்படுகிறது. சென்னையில் அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற உள்ளது. புனித வெள்ளி, என்பது ஒரு துக்க நாள். கல்வாரி மலையில் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாள். புனித வெள்ளி இயேசு மீண்டும் உயிர்பெற்றெழுந்த தினமான ஈஸ்டர் ஞாயிறுக்கு முந்தைய வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. இன்று காலை முதல் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறும். முன்னதாக நேற்று மாலை ஆலயங்களில் பெரிய வியாழன் நிகழ்வு கடைபிடிக்கப்பட்டது. சென்னையில் … Read more

தொடர்ந்து 9-வது நாளாக மாற்றம் இல்லாமல் தொடரும் பெட்ரோல், டீசல் விலை

சென்னை: சென்னையில் பெட்ரோல் டீசல் விலை 9- வது நாளாக மாற்றம் இல்லாமல் ஒரே விலையிலேயே தொடர்கிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இதற்கிடையில், கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி தொடர்ந்து வருகிறது. இதன்படி, சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 110 ரூபாய் … Read more

முஸ்லிம் பெண்களை வன்புணர்வு செய்வோம் என மிரட்டிய உ.பி. சாமியார் கைது!

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் இஸ்லாமிய பெண்களுக்கு எதிராக பாலியல் மிரட்டல் விடுத்த சாமியாரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர் உத்தரப்பிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்து மத சாமியார் ஒருவர் ஜீப்பில் இருந்தவாறு பொதுமக்கள் இடையே உரை நிகழ்த்தினார்.  அப்போது, முஸ்லலிம் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்வேன் என மிரட்டினார். இந்த சர்ச்சைக்குரிய சாமியார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், 11 நாட்களுக்கு பிறகு இன்று கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சீதாப்பூர் மாவட்டத்தில் … Read more

வன்னியர் இடஒதுக்கீடு தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!

சென்னை: வன்னியர் இடஒதுக்கீடு தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச்செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். கடந்த அதிமுக ஆட்சியில் வன்னியர்களக்கு அரசு வேலைவாய்ப்பில் 10.5 விழுக்காடு சிறப்பு ஒதுக்கீடு செய்து சட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்கு மற்ற சாதிய  அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வழக்குகள் தொடர்ந்தன. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், வன்னியர் இடஒதுக்கீட்டை ரத்து செய்து தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கும் தள்ளுபடியானது. … Read more

100ஆண்டுகள் பழமையான கோவிலை ஆக்கிரமிப்பு என இடிக்க தமிழகஅரசு முடிவு! உயர்நீதி மன்றம் தடை….

சென்னை: திருப்பூர் மாவட்டத்தில் 100ஆண்டுகள் பழமைவாய்ந்த 2 கோயில்கள் இடிக்க தமிழக அரசு இடிக்க முனைந்த நிலையில், தமிழகஅரசின் உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தடை போட்டுள்ளது. தமிழ்நாட்டில் அரசு இடங்கள், நீர்நிலைககள், சாலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கோவில்கள், கட்டிடங்களை இடிக்க உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. அதையொட்டி, தமிழக அரசு ஏராளமான இந்து கோவில்களை இடித்து தள்ளுகிறது. அதே வேளையில், பல அரசு கட்டிங்கள் நீர் நிலைகளிலும், ஆக்கிரமிப்பு இடங்களிலும் உள்ளது. அதை தமிழகஅரசு கண்டுகொள்வதில்லை. … Read more

டெல்லியில் பிரதமர்கள் வாழ்க்கை வரலாறு அடங்கிய அருங்காட்சியகம்! பிரதமர் மோடி திறந்து வைத்தார்…

டெல்லி: தலைநகர் டெல்லியில் பிரதமர்கள் வாழ்க்கை வரலாறு அடங்கிய அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து பார்வையிட்டார். டெல்லியில் தீன் மூர்த்தி எஸ்டேட் வளாகத்தில் முந்தைய இந்திய பிரதமர்கள் பற்றிய விபரங்கள் அடங்கிய அருங்காட்சியகம்  ரூ.271 கோடி செலவில் 10,975.36 ச. மீ., பரப்பளவில்உருவாக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளே வியக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த மியூசியதில், முன்னாள் பிரதமர்களின் சிலைகள் உயிருடன் உள்ள சிலைகளைப்போல அமைக்கப்பட்டு உள்ளது. அத்துடன்  பிரதமர்களின் வாழ்க்கை மற்றும் பிரதமர்கள் பயன்படுத்திய பொருட்கள் … Read more

14/04/2022: தமிழ்நாட்டில் இன்று 25 பேருக்கு கொரோனாபாதிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் இன்று புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இவர்களில் ஒருவர் ஐக்கிய அரபு எமிரேட்டில் இருந்து தமிழகம் வந்தவர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று இரவு வெளியிட்டுள்ள  கொரோனா அறிவிப்பில், கடந்த 24மணிநேரத்தில், 18,716  சோதனை செய்யப்பட்டு உள்ளது. இதுவரை 6,58,91,265 சோதனைகள் செய்யப்பட்டு உள்ளன. இன்று  25 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 34,53,188 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24மணி … Read more