20.03.2022 முன்பு கொரோனா தொற்றால் இறந்தவர்களின் குடும்பத்தினர் இழப்பீடுக்கு விண்ணப்பிக்கலாம்! தமிழகஅரசு

சென்னை: 20.03.2022 முன்பு கொரோனா தொற்றால் இறந்தவர்களின் குடும்பத்தினர் இழப்பீடுக்கு விண்ணப்பிக்கலாம் என  தமிழகஅரசு அறிவித்து உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.50ஆயிரம் மாநில அரசு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு, அதற்கான வழிகாட்டு தல்களையும் வெளியிட்டுள்ளது. அதைத்தொடர்ந்து,  கொரோனா இறப்புக்கான இழப்பீடு பெறுவது தொடர்பாக தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், கோவிட்19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டு இறந்த நபர்களின் வாரிசுகளுக்கு கருணைத் தொகை வழங்குவதற்கு www.tn.gov.in இணையத் தளம் மூலம் மனுக்கள் … Read more

தமிழகத்தில் 60நாள் மீன்பிடி தடைக்காலம் இன்று இரவு முதல் அமல்….

சென்னை: தமிழகத்தில் 60நாள் மீன்பிடி தடைக்காலம் இன்று இரவு முதல் அமலுக்கு வருகிறது. மீன்களில் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு இந்த தடைக்காலம் அறிவிக்கப்படுகிறது. தமிழ்நாடு மீன்வளத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கடலில் மீன் வளத்தை பெருக்கவும், பாதுகாத்திடும் வகையில் தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குப் படுத்தும் சட்டத்தின் படி மீன்பிடி தடைக்காலம் அறிவிக்கப்படுகிறது இதன்படி மீன்பிடி தடைகாலம் நாளை முதல் ஜூன் மாதம் 14-ந் தேதி வரை 61 நாட்கள் அமலுக்கு வருகிறது.. இதையொட்டி தமிழகத்தில் கிழக்கு கடலோர … Read more

கிண்டி ராஜ்பவனில் பாரதியார் சிலையை திறந்துவைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி – திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு…

சென்னை: கிண்டி ராஜ்பவனில் பாரதியார் சிலையை ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று மாலை திறந்து வைத்தார். இந்த நிகர்ச்சியில்  திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் புறக்கணித்தனர். தமிழ்ப்புத்தாண்டையொட்டி, கிண்டி ஆளுநர் மாளிகையில் வழக்கமாக நடைபெறும் தேநீர் விருந்துக்கு தமிழகஅரசு மற்றும் அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அத்துடன் ஆளுநர் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள பாரதியார் சிலை திறப்பு நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால், நீட் உள்பட தமிழகஅரசின் பல மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் இழுத்தடித்து வருவதால், ஆளுநர் … Read more

ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்க போவதில்லை! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி.

சென்னை: தமிழ்ப்புத்தாண்டையொட்டி,  இன்று மாலை தமிழக ஆளுநர் ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் தரும் தேநீர் விருந்தில் பங்கேற்கப் போவதில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியும் அறிவித்து உள்ளது. தமிழ்ப்புத்தாண்டையொட்டி ஆண்டுதோறும் வழக்கமாக அரசியல் கட்சிகளுக்கு ஆளுநர் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் ஆளுநர் தேநீர் விருந்துக்கு தமிழகஅரசு உள்பட அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், தமிழகஅரசுக்கு எதிரான மனநிலையில் ஆளுநர் செயல்படுவதாக கூறி முதலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேநீர் விருந்தை … Read more

தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு தமிழ் புத்தாண்டு வெற்றிகளையும், சந்தோ‌ஷங்களையும் தரட்டும்! பிரதமர் மோடி வாழ்த்து…

டெல்லி: தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு வரும் தமிழ் புத்தாண்டு வெற்றிகளையும், சந்தோ‌ஷங்களையும் தரட்டும் என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து தமிழில் டிவிட் பதிவிட்டுள்ளார். சித்திரை 1ந்தேதியான இன்று தமிழ்ப்புத்தாண்டு உலகம் முழுவதும் வாழும் தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அரசியல் கட்சித்தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பொதுமக்கள் ஆங்காங்கே உள்ள கோவில்களுக்கு சென்று தங்களுக்கு பிடித்தமான தெய்வங்களை வணங்கி வாழ்த்து பெற்று வருகின்றனர். இந்த நிலையில், பிரதமர் மோடி, தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து … Read more

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கண்காணிப்பு மையம், செங்கல்பட்டில் சர்வதேச யோகா, இயற்கை மருத்துவ கட்டிடம் திறப்பு! முதல்வர் ஸ்டாலின்

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஒருங்கிணைந்த கண்காணிப்பு மையத்தை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து, செங்கல்பட்டில் கட்டப்பட்டுள்ள சர்வதேச யோகா, இயற்கை மருத்துவ கட்டிடங்களையும் திறந்து வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். அதன்படி,  சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஒருங்கிணைந்த கண்காணிப்பு மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். ரூ.364 கோடியில் தீவிர சிகிச்சை படுக்கைகள், அதி நவீன கருவிகளுடன் … Read more

ஆளுநருடன் மோதல் உச்சக்கட்டம்: தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழகஅரசு அறிவிப்பு…

சென்னை:  நீட் உள்பட பல்வேறு மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க மறுத்துள்ளதால், ஆளுநருடன் தமிழக அரசின் மோதல் உச்சக்கட்டம் அடைந்துள்ளது. இதையடுத்து, இன்று ஆளுநர் அளிக்கும்  தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக அறிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் திமுக அரசு ஆட்சி செய்து வருவதால், தமிழக அரசு புறக்கணிப்பதாகவே கருதப்படுகிறது. தமிழ்ப்புத்தாண்டை ஒட்டி ஆளுநர் மாளிகையில் வழக்கமான தேநீர் விருந்து வழங்கப்படுவது வழக்கம். அதுபோல இன்றும் தேநீர் விருந்துக்கு தமிழகஅரசியல் கட்சிகளுக்கும், நீதிபதிகள் மற்றும் உயர்அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. … Read more

விமரிசையாக நடைபெற்றது மதுரை மீனாட்சியம்மன் – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்!

மதுரை: சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மதுரை மீனாட்சியம்மன் – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் என்று பக்தர்கள் புடைசூழ வெகு விமரிசையாக நடைபெற்றது. 12நாட்கள் நடைபெறும் மதுரை சித்திரை திருவிழா இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 5ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவுல்  இன்று முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது. மதுரை மீனாட்சியம்மன் – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று, சாமி தரிசனம் செய்தனர். நாளை  … Read more

கர்நாடக பாஜக அமைச்சர் மீது எழுந்துள்ள கமிஷன் புகார் குறித்து கார்ட்டுன் விமர்சனம்!

கர்நாடக பாஜக அமைச்சர் ஈஸ்வரப்பா மீது எழுந்துள்ள கமிஷன் புகார் குறித்து கார்ட்டுன் விமர்சனம் செய்துள்ளது. அமைச்சர் ஈஸ்வரப்பாவின் ஆதரவாளர்களின் கமிஷன் மிரட்டல் காரணமாக காண்டிராக்டர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு காண்டிராக்டர்களும் தங்களது பணிகளை நிறுத்தி வைப்பதாக அறிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர். ஆனால், பாஜக தலைமையோ நாங்கள் கங்கையைப் போல புனிதமானவர்கள் என்று கூறி வருகிறது. அதுபோல சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை … Read more

கோடை விடுமுறை: மேட்டுப்பாளையம் முதல் ஊட்டிவரை 16ந்தேதி முதல் ஒருவழிப் பாதையாக மாற்றம்!

கோவை: கோடை விடுமுறை மற்றும் ஊட்டி சீசனையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிவதால், மேட்டுப்பாளையம் முதல் ஊட்டிவரை வரும்  16ந்தேதி முதல் ஒருவழிப்பாதையாக மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொளுத்தும் வெயில் சுட்டெரிக்க தொடங்கி உள்ளதால், கோடை விடுமுறையை குளுகுளுவென கொண்டாட, ஏராளமானோர் ஊட்டி, கொடைக்கானல், ஏற்பாடு, டாப் சிலிப் என கோடை வாசஸ்தலங்களை நோக்கி பயணமாகத் தொடங்கி உள்ளனர். ஊட்டியில் சீசன் தொடங்கி உள்ளதால்,  நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான சூழலை அனுபவிக்க  தினசரி அங்கு … Read more