கிண்டி கவர்னர் மாளிகையில் இன்று மாலை பாரதியார் சிலை திறப்பு! முதல்வர் பங்கேற்பு…

சென்னை: தமிழ் புத்தாண்டையொட்டி சென்னை ராஜ் பவனில் இன்று (14-ந்தேதி) மாலை 5 மணிக்கு மகாகவி பாரதியார் சிலையை கவர்னர் ஆர்.என்.ரவி திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சியினர் பங்கேற்கின்றனர். இதுதொடர்பாக கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  தமிழ் புத்தாண்டையொட்டி சென்னை ராஜ் பவனில் நாளை (14-ந்தேதி) மாலை 5 மணிக்கு மகாகவி பாரதியார் சிலையை கவர்னர் ஆர்.என்.ரவி திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய … Read more

டிவிட்டர் பங்குளை வாங்கியதில் முறைகேடு – எலான் மஸ்க் மீது வழக்கு

வாஷிங்டன்: டிவிட்டர் பங்குளை வாங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக எலான் மஸ்க் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. டுவிட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை தான் வாங்கியதாக கடந்த 4-ந்தேதி எலான் மஸ்க் அறிவித்தார். இதையடுத்து அவர் டுவிட்டர் நிர்வாக குழுவில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதை மறுத்துவிட்டார். இந்த நிலையில் டுவிட்டர் நிறுவனத்தின் பங்குகளை வாங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி டுவிட்டர் நிறுவன பங்குதாரர் ஒருவர் எலான் மஸ்க் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். இது தொடர்பாக … Read more

ஏ.ஆர்.ரகுமானுக்கு நெருக்கடி தருவதா? – சீமான் எச்சரிக்கை

சென்னை: ஏ.ஆர்.ரகுமானுக்கு மதம், அரசியல் ரீதியாக நெருக்கடி தந்தால் கடும் எதிர்வினையை சந்திக்க நேரிடும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரித்துள்ளார். இந்தியாவின் இணைப்பு மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று அமித் ஷா கூறியிருந்தது தொடர்பாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு ‘தமிழ் தான் இணைப்பு மொழி ‘ என அவர் பதிலளித்தார். இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமானுக்கு மதம், அரசியல் ரீதியாக நெருக்கடி தந்தால் கடும் எதிர்வினையை சந்திக்க நேரிடும் என்று நாம் தமிழர் … Read more

இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நிலைமை இந்தியாவுக்கும் வரகூடிய அபாயம் – ப.சிதம்பரம் எச்சரிக்கை

புதுடெல்லி: இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நிலைமை இந்தியாவுக்கும் வரகூடிய அபாயம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் எச்சரிக்கை விடுத்துள்ளார். காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘தவறான பொருளதாரக் கொள்கைகளை இந்திய அரசு தொடர்ந்து பின்பற்றினால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நிலைமை நமக்கு வரக்கூடிய அபாயம் இருக்கிறது என்று எச்சரிக்கிறேன் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நிலைமை இந்தியாவுக்கு  வந்து விட்டது என்று கூறவில்லை. ஆனால் வரக்கூடிய அபாயம் இருக்கிறது … Read more

அங்காடிமங்கலம் அய்யனார் கோயில்

அங்காடிமங்கலம் அய்யனார் கோயில், நாகப்பட்டினம் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் இடம் பெற்றுள்ளது. திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோயில் திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடல் பெற்ற தேவாரத் திருத்தலம். இச்சிவாலயத்தின் மூலவர் அக்கினீசுவரர். இவர் தீயாடியப்பர் என்றும் அறியப்படுகிறார். அம்பாள் சௌந்தரநாயகி என்றும் அழகமர்மங்கை என்றும் அழைக்கப்படுகிறார். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள ஒன்பதாவது சிவத்தலமாகும். இத்தலத்தில் முற்கால சோழர் காலத்திய கல்வெட்டுகள் காணப்படுகின்றன. சுந்தர பாண்டியன், கோனேரின்மை கொண்டான் காலத்து கல்வெட்டுக்கள் உள்ளன. … Read more

வாசகர்களுக்கு பத்திரிகை.காம்-ன் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

வாசகர்கள், விளம்பரதாரர்கள் உள்பட அனைவருக்கும்  மனமார்ந்த  சுபகிருது  தமிழ் புத்தாண்டு  நல்வாழ்த்துக்கள்… இன்று பிறக்கும் சித்திரைத் திருநாள், நம் அனைவரது  வாழ்விலும் சுபத்தையும்,  மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும் அளிக்கட்டும் ….   உலகெங்கும் அமைதி பரவட்டும்… – ஆசிரியர்  

இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் அமைகிறது கடல்பாசி பூங்கா!

சென்னை: இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் மத்திய அரசுடன் இணைந்து கடல்பாசி பூங்கா அமைய இருப்பதாக தமிழகஅரசு சட்டமன்றத்தில் தெரிவித்து உள்ளது. தமிழக சட்டப்பேரவையில் மீன்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மீன்வளத்துறை சார்பில் கொள்ளை விளக்க குறிப்பேடு வெளியிடப்பட்டது. அதில்,  தமிழகத்தில் கடல்பாசி பூங்காவை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் கடல்பாசி வளர்ப்பை மீனவர்களுக்கான மாற்று வாழ்வாதார நடவடிக்கையாக ஊக்குவிக்க மீன்வளத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்திய … Read more

13/4/2022: தமிழ்நாட்டில் இன்று புதிதாக 29 பேருக்கு கொரோனா தொற்று

சென்னை: தமிழ்நாட்டில் இன்று புதிதாக 29 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. எந்தவித உயிரிழப்பு இன்றி 27 பேர் குணமடைந்துள்ளனர். தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று இரவு வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்று ஒரே நாளில், 19,714 சோதனை செய்துள்ளது. இதுவரை 6,58,72,549 சோதனைகள் செய்யப்பட்டு உள்ளன. இன்று நடத்தப்பட்ட சோதனையில் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 34,53,163 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24மணி நேரத்தில் எந்தவொரு கொரோனா … Read more

ஆளுநர் விருந்தில் விசிக பங்கேற்காது! கம்யூனிஸ்டு கட்சியைத் தொடர்ந்து திருமாவளவன் அறிவிப்பு

சென்னை: தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு, நாளை இரவு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய நபர்களுக்கு ஆளுநர் விருந்தளிப்பது வழக்கமான நடைமுறை. அதன்படி நாளை ஆளுநர் தரும் விருந்தில் விசிக பங்கேற்காது என அக்கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்து உள்ளார். தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நாளை தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்துகொள்ளும்படி முக்கிய அரசியல் கட்சி தலைவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, அவரது மனைவி லட்சுமி ரவி பெயரில் அழைப்பு விடுக்கப்பட்டது. … Read more

ஐபிஎல் 2022: பஞ்சாப் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெறும் மும்பை – பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பஞ்சாப் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 198 ரன்களை குவித்துள்ளது. மும்பை அணி தரப்பில் பசில் தம்பி அதிகபட்சமாக … Read more