மத்தியஅரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கான எம்.பி.க்கள் கோட்டா ரத்து!

சென்னை: மத்தியஅரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கான எம்.பி.க்களின் கோட்டாவை  நிறுத்தி வைக்க மத்தியஅரசு பள்ளி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டு உள்ளது. மத்தியஅரசின் கேந்திர வித்யாலாயா பள்ளிகள்  நாடு முழுவதும் செயல்படுகின்றன. ராணுவத்தினர், மத்திய, மாநில அரசின் அலுவலர், ஊழியர்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனத்தினர் ஆகியோரின் பிள்ளைகளுக்கு, முன்னுரிமை அளித்து, மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. மேலும்,  ஒவ்வொரு எம்.பி.க் களுக்கும் முதலில் 6 சீட்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. பின்னர் கடந்த 2016ம் ஆண்டு 10 ஆக … Read more

மீனவர்களுக்கென தனி கூட்டுறவு வங்கி- நவீன மீன் சந்தைகள் – வண்ண மீன்காட்சியம்! சட்டப்பேரவையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

சென்னை: மீனவர்களுக்கென தனி கூட்டுறவு வங்கி- நவீன மீன் சந்தைகள் – வண்ண மீன்காட்சியகம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளது. தமிழக சட்டப்பேரவையில் இன்று மீன்வளத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, விவாதத்துக்கு பதில் அளித்து பேசிய   மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஏராளமான அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், மதுரையில் ரூ.50 கோடியில் நவீன மீன் சந்தைகள் நிறுவப்படும். அயிரை மீன் வளர்ப்பை … Read more

சித்ரா பவுர்ணமி கிரிவலம்: கட்டணமில்லா பேருந்து, ஆட்டோ கட்டணம் உள்பட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட திருவண்ணாமலை கலெக்டர்…

திருவண்ணாமலை: சித்ரா பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக 66 கட்டணமில்லா பேருந்துகள் இயக்கப்படுவதுடன், ஆட்டோக்களுக்கான தனிநபர் கட்டணத்தை நிர்ணயம் உள்பட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு இருப்பதாக  திருவண்ணாமலை மாவட்ட  ஆட்சியர் முருகேஷ் அறிவித்து உள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா தொற்று குறைந்து, கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதால்,  இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமிக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்ல வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி கிரிவலம், நாளை மறுதினம் (15-ம் தேதி) தொடங்கி … Read more

சமத்துவ விருந்து, அயோத்தியா மண்டபம் குறித்து முதல்வரின் பதிலை வரவேற்கும் கார்டூன் – ஆடியோ

சமத்துவ விருந்து, அயோத்தியா மண்டபம் குறித்து முதல்வரின் பதிலை வரவேற்கும் வகையில் இன்றைய கார்டூன் அமைந்துள்ளது. சமபந்தி போஜனம் என்று இருந்து வந்த நிலையில், போஜனம் என்ற சமஸ்கிருத வார்த்தை மாற்றப்பட்டு சமத்துவ விருந்து என பெயரிடப்பட்டு உள்ளது.

ஆளுநரின் டீ பார்ட்டி அழைப்பை நிராகரிப்பதாக சு. வெங்கடேசன் எம்.பி. ட்வீட்… சி.பி.எம். கலந்துகொள்ளாது என மாநில செயலாளர் அறிக்கை…

தமிழ் புத்தாண்டை ஒட்டி தமிழக ஆளுநர் ஆர். என். ரவி நாளை மாலை தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதற்கான அழைப்பு தமிழ் நாட்டைச் சேர்ந்த அனைத்து எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இந்த தேநீர் விருந்தில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று சி.பி.எம். மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார். இந்நிலையில், சி.பி.எம். கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் பதிவிட்டுள்ள டீவீட்டில், “தமிழக சட்டமன்ற தீர்மானங்களை நிறுத்திவைத்து, தமிழக மக்களின் உரிமையை அவமதிக்கும் ஆளுநரின் தேநீர் … Read more

‘வெரிகோஸ் வெயின் சிகிச்சை’ குறித்து அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் எளிமையாக விளக்கும் கோவை ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை…

கோயமுத்தூர்:  வெரிகோஸ் வெயின்   (Varicose Vein) மற்றும் அதன் சிகிச்சை பற்றி  பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன என்பது குறித்து கோவை ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை எளிய முறையில் விளக்கம் கொடுத்துள்ளது. கோயம்புத்தூரில் பொதுமக்களுக்கு சிறந்த முறையிலான மருத்துவ சேவை வழங்கி வருவதில் ஸ்ரீராமகிருஷ்ணா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சிறப்பிடம் வகிக்கிறது. வெரிகோஸ் வெயின் ஒரு இரத்த குழாய்களில் ஏற்படும் புடைப்பு சுருள் பிரச்சனையாகும். இந்த நோய் ஏற்பட பரம்பரை, வயது, உடல் பருமன் இவைகள் காரணமாக … Read more

அரசு பள்ளியில் மாணவிகளை கிறிஸ்தவ மதத்துக்கு மாற வலியுறுத்தல்! கன்னியாகுமரியில் ஆசிரியை  சஸ்பெண்ட்!

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் கண்ணாட்டுவிளை அரசு மேல்நிலைப் பள்ளியில் மதமாற்ற சர்ச்சையில் சிக்கிய அரசு ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார். இந்த விவகாரத்தில் மாநில அரசு சரியான முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், பாஜக தலையிடும் என மாநில தலைவர் அண்ணா மலை கூறியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி ஆசிரியை ஒருவர் மாணவியிடம் மதம்மாற சொல்லி வலியுறுத்துவது தொடர்பான விசாரணை விடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், அந்த ஆசிரியை கல்வித்துறை தற்காலிக இடைநீக்கம் செய்து நடவடிக்கை … Read more

10 சிறந்த கைவினைஞர்களுக்கு “வாழும் கைவினைப் பொக்கிஷம்” விருது வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாடு கைத்திறன் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில், கைவினைத் தொழிலுக்காகவே தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட 65 வயதுக்கு மேற்பட்ட 10 சிறந்த கைவினைஞர்களுக்கு வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதுகளை  முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,  2021-22-ம் ஆண்டிற்கான “வாழும் கைவினைப் பொக்கிஷம்’’ விருதுகள் ஜி.மாரிமுத்து (தஞ்சாவூர் கலைத் தட்டு), என்.மாரியப்பன் (தஞ்சாவூர் ஒவியம்), ஜி.தங்கராஜு- (வீணை கைத்திறத் தொழில்), பொன். விசுவநாதன் (பஞ்சலோக சிற்பம்), எம்.ராமலிங்கம் … Read more

வாகன ஓட்டிகளுக்கு தெரியாமலேயே பல ஆயிரம் வழக்குகள் பதிவு! போக்குவரத்து காவல்துறையினரின் அடாவடி….

சென்னை:  வாகன ஓட்டிகளுக்கு தெரியாமலேயே பல ஆயிரம் வழக்குகளை போக்குவரத்து காவல்துறையினர் அவர்களின் இஷ்டத்துக்கு பதிவு செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதுடன் வாகன ஓட்டிகள் கடும் அதிப்தி அடைந்துள்ளனர். மேலும் பல வழக்குகளில் வாகன என்கூட பதியாமல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள அவலங்களும் அரங்கேறி உள்ளன. போக்குவரத்து காவல்துறையினர் இதுபோன்ற மெத்தனமான நடவடிக்கை கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில், சென்னை மாநகர காவல்ஆணையர் சங்கர் ஜிவால், போக்குவரத்து விதிகளை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டவர்கள் … Read more

மேற்கு வங்கத்தில் சிறுமி பாலியல் வன்புணர்வு: பாஜக அமைத்துள்ள உண்மை கண்டறியும் குழுவில் வானதி, குஷ்புக்கு இடம்…

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில், கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதால் சிறுமி பலியான வழக்கில், திரிணமுல் காங்., கட்சி பிரமுகரின் மகன் கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதுதொடர்பான பாஜக தலைமை 5 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழு அமைத்துள்ளது. இந்த குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வானதி சீனிவாசன், நடிகை குஷ்பு இடம் பெற்றுள்ளனர். குஷ்பு மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் என குறிப்பிடப்பட்டு உள்ளது. மேற்கு வங்கத்தின், நாடியா … Read more