ரெய்காவிக் ஓபன்2022 செஸ் போட்டியில் தமிழக வீரர் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா வெற்றி!

 சென்னை: ரெய்காவிக் ஓபன்2022 செஸ் போட்டியில் தமிழக வீரர் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றுள்ளார். அவரது புதிய சாதனைக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற ஆன்லைன் ரேபிட் செஸ் போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்து அசத்தி,  உலக செஸ் அரங்கை மீண்டும் ஒருமுறை தன்பக்கம்  திருப்பிய பிரக்ஞானந்தா, தற்போது மேலும் ஒரு வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். தமிழ்நாட்டைச் சேர்த்வர்இந்திய கிராண்ட்மாஸ்டர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா. இவருடைய வயது 16.  தமிழகத்தின் … Read more

பாலியல் புகார்: இரண்டு ஐஐடி சென்னை பேராசிரியர்கள் முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்…

சென்னை: பாலியல் புகார் காரணமாக,  இரண்டு ஐஐடி சென்னை பேராசிரியர்கள் முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். சென்னை ஐ.ஐ.டி-யில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 29 வயது மாணவி ஆராய்ச்சி படிப்பை படித்து வந்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் அதே துறையில் ஆராய்ச்சிப் படிப்பு படித்த மாணவர்கள், துறையின் Co-Guides மற்றும்  பேராசிரியர் என 9 பேர் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்கொடுமைகளை செய்த தாக மாணவி அளித்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியது. … Read more

சசிகுமாரின் காரி பட பாடல்: ரசிகர்கள் நெகிழ்ச்சி

தனது முதல் படமான, சுப்ரமணியபுரம் திரைப்படத்திலேயே இயக்குனர் தயாரிப்பாளர் நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக  அசத்தியவர், எம். சசிகுமார். தொடர்ந்து  நாயகனாக, பல படங்களில் நடித்துள்ள சசிகுமாரின்,  பகைவனுக்கு அருள்வாய் மற்றும் நா நா ஆகிய திரைப்படங்கள் விரைவில் வெளிவர உள்ளன. இதற்கிடையே, சத்யசிவா இயக்கத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில்   சசிகுமார் நடித்துள்ள “காமன் மேன்” திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந் நிலையில் அடுத்ததாக அஞ்சல படத்தின் இயக்குனர் தங்கம்.பா.சரவணன் இயக்கத்தில் தயாராகும் புதிய … Read more

உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்

தஞ்சை: உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெற்றது. கடந்த 30-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், இன்று வெகுவிமரிசையாக தேரோட்டம் நடைபெற்றது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்றது. கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழும் இந்த ஆலயம் உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. பாரம்பரியம் கொண்ட இந்த ஆலயத்தைக் காண வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்த … Read more

யூடியூப் வலைதளம் திடீர் முடக்கம்: மன்னிப்பு கோரியது யூடியூப்

கலிபோர்னியா: உலக அளவில் யூடியூப் வலைதளம் திடீரென முடங்கியது. யூடியூப் முடங்கியது தொடர்பாக ஏறத்தாழ 10ஆயிரத்திற்கும் அதிகமான புகார்கள் வந்ததாக இணையதள சேவைகள் குறித்த தகவல்களை வழங்கும் Downdetector.com தெரிவித்துள்ளது. அதேநேரம் தடங்கல்களுக்கு மன்னிப்பு கோரிய யூடியூப் நிறுவனம், பயனர்கள் அடைந்த சிக்கல்களுக்கு வருந்துவதாகவும், தொழில்நுட்ப பிரச்சினைகளை விரைவில் தீர்வு காண்பதாகவும் ட்விட்டரில் தெரிவித்துள்ளது. அதிகளவிலான பயணர்கள் கணக்கின் உள் நுழைய முடியாமலும், நேவிகேஷன் பார் பகுதியை பயன்படுத்த முடியாமல் சிரமப்பட்டதாக தெரிவித்தது.

அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் – சசிகலா

சென்னை: அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று சசிகலா தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் சென்னை உயர்நீதிமன்ற சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றினை கூறியிருந்தது. அதன்படி 2017 ஆம் ஆண்டு அதிமுக கட்சியில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என்று நீதிபதி அறிவித்திருந்தார். இந்த உத்தரவு அதிமுக இடையே பெரும் சலசலப்பை உண்டாக்கியது. அதிமுகவில் மீண்டும் சசிகலா இணைக்கப்படுவார் என்று பலரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவ்வாறு சிறப்பு நீதிபதி அறிவித்தது குறிப்பிடத்தக்கது. அதோடு மட்டுமில்லாமல் டிடிவி தினகரன் … Read more

பெட்ரோல், டீசல் விலையில் 7வது நாளாக இன்றும் மாற்றமில்லை

சென்னை: சென்னை இன்று பெட்ரோல் 110 ரூபாய் 85 காசுகள், டீசல் விலை 100 ரூபாய் 94 காசுகள் என்ற விலையிலும் விற்பனை ஆகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இதற்கிடையில், கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி தொடர்ந்து வருகிறது. இதன்படி, சென்னையில் இன்றைய பெட்ரோல் … Read more

12/04/2022: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 22 ஆக குறைந்தது…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று புதிதாக 22 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதியான நிலையில், சென்னையில் மட்டும் 9 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் 17,045 மாதிரிகள் சோதனை நடத்தப்பட்டு உள்ளது. இன்று மேலும் 22 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், சென்னையில் 9 பேருக்கும், செங்கல்பட்டில் 6 பேருக்கும், கோவையில் ஒருவருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 34,53,134 … Read more

#தமிழால்_இணைவோம் : சிம்பு, அனிருத் ட்விட்டர் பதிவு…

இந்தியை இணைப்பு மொழியாக கொண்டுவருவதன் மூலம் ஆங்கிலத்துடன் சேர்த்து மாநில மொழிகளையும் ஓரம்கட்ட அமித் ஷா முன்னெடுத்து வரும் முயற்சிக்கு நாடு முழுவதும் உள்ள இந்தி பேசாத மாநிலங்களில் இருந்து எதிர்ப்பு எழுந்து வருகிறது. தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணமாலையும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு தமிழ் மொழி தான் அனைத்து இந்திய மொழிகளுக்கும் இணைப்பு மொழியாக இருக்கவேண்டும் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் கூறிய கருத்துக்கு ஆதரவும் தெரிவித்துள்ளார். தமிழால் இணைவோம் #TamilConnects — Anirudh Ravichander … Read more

வன்கொடுமையால் பாதிக்கப்படும் பெண்களுக்கான இழப்பீடு தொகை ரூ.12லட்சமாக அதிகரிப்பு! தமிழகஅரசு

சென்னை: வன்கொடுமையால் பாதிக்கப்படும் பெண்களுக்கான இழப்பீடு தொகை ரூ.12லட்சமாக அதிகரித்து தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. நாட்டில் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வரும் நிலையில், அதை கட்டுப்படுத்த தண்டனைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இருந்தாலும் ஆங்காங்கே பாலியல் வன்கொடுமை சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இதில், வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடு தமிழ்நாட்டில் ரூ.1 லட்சம் வழங்கப்பட்டு வந்தது. இந்த இழப்பீட்டு தொகை ரூ.12 லட்சமாக உயர்த்தி தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். தலைமைச்செயலகத்தில் இன்று மாலை முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில்ஆதிதிராவிடர் … Read more