தேனாம்பேட்டையில் மேம்பாலம், 435 தரைப்பாலங்கள் உள்பட 18 முக்கிய அறிவிப்புகள்! பொதுப்பணித்துறை அறிவிப்பு…

சென்னை: சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயம் அருகே மேம்பாலம் மற்றும் மாநிலம் முழுவதும் 435 தரைப்பாலங்கள் உள்பட 18முக்கிய அறிவிப்பு களை சட்டப்பேரவையில் பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் நெடுஞ்சாலைகள் சிறு துறைமுகங்கள் துறை மானியக்கோரிக்கைமீது விவாதத்தின்போது ரூ.1105கோடி மதிப்பீட்டில் 435 தரைப் பாலங்கள் உயர்மட்டப் பாலங்களாக கட்டப்படும், 8 மாவட்டங்களில் 12 இடங்களில் ரூ.577.27 கோடி மதிப்பீட்டில் ரயில்வே மேம்பாலங்கள் கட்டப்படும் என தெரி விக்கப்பட்டு உள்ளது. தமிழக சட்டப்பேரவையில் இன்று நடந்த … Read more

ஒரேநேரத்தில் மாணாக்கர்கள் 2 முழு நேர பட்டப் படிப்புகளை தொடரலாம்! யுஜிசி அறிவிப்பு…

டெல்லி: மாணவர்கள் ஒரே நேரத்தில் 2 முழு நேர பட்டப் படிப்புகளை தொடரலாம் என பல்கலைக்கழக மானிய குழு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இன்று மாணவர்கள் இரண்டு முழுநேர பட்டப்படிப்புகளை ஒரே நேரத்தில் உடல் முறையில் தொடர முடியும் என்று கூறியது. இந்த முடிவு மாணவர்களுக்கு ஒரே அல்லது பிற நிறுவனங்களில் வெவ்வேறு கல்லூரிகளில் இருந்து பல பாடங்களைப் படிக்க வாய்ப்பளிக்கும் என்று தெரிவித்து உள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த யுஜிசி தலைவர் … Read more

இனி ஆண்டுதோறும் சொத்து வரியை உயர்த்துவோம்! சென்னை மாநகராட்சி அறிவிப்பு…

சென்னை: சென்னையில் இனி ஆண்டுதோறும் சொத்து வரி உயர்த்தப்படும் சென்னை மாநகராட்சி சார்பில் முக்கிய பத்திரிகைகளில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உளளது. தமிழ்நாட்டில் இந்த மாதம் முதல் சொத்துவரியை உயர்த்தி தமிழகஅரசு அறிவித்து உள்ளது. குறைந்த பட்சம் 25 சதவிகிதம் முதல் 150 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. இதை திரும்ப பெற வலியுறுத்தி அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த நிலையில்,  சென்னை மாநகராட்சி சொத்து வரி உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் … Read more

கல்வி ஊக்கத்தொகை பெறும் கிராமப்புற மாணவிகளின் பெற்றோரது ஆண்டு வருமான வரம்பு ரூ.1லட்சமாக உயர்வு!

சென்னை: கல்வி ஊக்கத்தொகை பெறும் கிராமப்புற மாணவியரின் பெற்றோரது ஆண்டு வருமான வரம்பு அதிகரித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கல்வி உதவித்தொகை பெற மாணாக்கர்களின் பெற்றோரின் ஆண்டு வரும் ரூ.72 ஆயிரமாக இருந்து வந்தது. இதை ரூ.1 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அறிவித்து உள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவியர் அதிக எண்ணிக்கையில் பயனடையும் வகையில், கிராமப்புற மாணவியருக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் … Read more

தொடர்ந்து மிரட்டல்!: சூப்பர் ஸ்டார் பட்டத்தைத் துறந்த ஆர்யன் ஷ்யாம்!

ஏவிஎம் சரவணனின் பேத்தியான அபர்ணாவை திருமணம் செய்துகொண்டவர், ஆர்யன் ஷியாம். தற்போது அவர், ‘அந்த நாள்’ என்ற படத்தை தயாரித்து நடித்து உள்ளார்.  விரைவில் இப்படம் வெளியாக உள்ளது. இதற்கிடையே, தமிழ் மற்றும் தெலுங்கில் தயாரிக்கப்பட்ட, திருப்பதி வெங்கடாஜலபதி புராண வரலாற்றிலும் ஆர்யன் நடித்தார். இதில் வெங்கடாஜலபதியாக அவர் நடித்துள்ளார். திருமதி ஞானம் பாலசுப்பிரமணியம் (பம்பாய் ஞானம்) இயக்கியிருக்கிறார். இது குறித்து ஆர்யன் கூறும்போது, “அந்தத் திரைப்படத்தில்  நான் சிறப்பாக நடித்திருந்ததால், திருப்பதி தேவஸ்தானம் எனக்கு, ‘யூத் சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்தை அளித்தது. இந்தத் தகவல் … Read more

யுஎன்ஐ புகைப்படக் கலைஞராக பணியாற்றிய குமார் மரணத்தையொட்டி அவரது குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதி! அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்…

சென்னை: பத்திரிகை புகைப்படக் கலைஞராக பணியாற்றிய குமார் மரணத்தையொட்டி அவரது குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியை தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர்  அமைச்சர் சாமிநாதன் வழங்கினார். சம்பள பிரச்சினையால் விரக்தியடைந்த யுஎன்ஐ புகைப்படக் கலைஞர் குமார் கடந்த பிப்ரவரி மாதம் அலுவலகத்திலேயே தற்கொலை செய்துகொண்டார். இது பெரும் பிரச்சினையாது. இதுகுறித்து தகவல் அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குமார் மரணத்துக்கு  இரங்கல் தெரிவித்ததுடன்,  ‘‘30 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகை புகைப்படக் கலைஞராக பணியாற்றிய டி.குமார் அகால மரணமடைந்த செய்தி அறிந்து … Read more

முரசொலி பஞ்சமி நிலம் வழக்கு: மத்தியமைச்சர் எல்.முருகன் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: முரசொலி பத்திரிகை அலுவலகம் அமைந்துள்ள நிலம்,  பஞ்சமி நிலமா என்பது தொடர்பான வழக்கில்,  மத்தியமைச்சர் எல்.முருகன் ஆஜராக  சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தி.மு.க. நாளேடான முரசொலி அலுவலகம் அமைந்துள்ள கோடம்பாக்கம்  நிலம் பஞ்சமி நிலமா என்பது குறித்த  சர்ச்சை தொடர்ந்து வருகிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்திருப்பதாக குற்றம்சாட்டினார். இதற்குப் பிறகு, பா.ஜ.கவும் இந்த விவகாரத்தில் தி.மு.கவை குற்றம்சாட்டியது. முரசொலி அமைந்திருக்கும் நிலம், பஞ்சமி நிலம் என்றும் … Read more

கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் விழா: 16ந்தேதி மதுரை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

மதுரை: கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் விழா: 16ந்தேதி மதுரை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர்  அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சிம்பிளாக நடைபெற்று வந்த மதுரை சித்திரை திருவிழா இந்த ஆண்டு கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 12 நாள் நடைபெறும் இந்த விழா ஏப்ரல் 5ந்தேதி கொடியேற்றதுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக, வருகிற 12-ஆம் தேதி மீனாட்சி பட்டாபிஷேகம் நடைபெறுகிறது நாளைஇ … Read more

ஏப்ரல் 14ந்தேதி சென்னையில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…

சென்னை: மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு வருகிற வியாழக்கிழமை (ஏப்ரல் 14) அன்று சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை விடப்படுவதாக  சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயா ராணி  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘வருகின்ற 14.04.2022 (வியாழக்கிழமை) அன்று மகாவீர் ஜெயந்தி தினத்தினை முன்னிட்டு தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள் 2003, விதி 12 மற்றும் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் … Read more

இந்தி திணிப்பை தமிழ்நாடு பாஜக அனுமதிக்காது! அண்ணாமலை

சென்னை: இந்தி திணிப்பை தமிழ்நாடு பாஜக அனுமதிக்காது என்றும்,  இணைப்பு மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என்ற ஏ.ஆர் ரகுமான் கருத்தை பாஜக வரவேற்கிறது என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார். ஆங்கிலத்துக்கு மாற்று மொழியாக இந்தி இருக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தி உள்ளார். இதற்கு தமிழக அரசு மற்றும் எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், இன்று மாநில பாஜக அலுவலகமான சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்ளை சந்தித்த … Read more