கடனுக்கான வட்டிகூட கட்ட முடியாத சூழல்: திவாலாகிறது இலங்கை?

ஸ்ரீலங்கா: கோத்தபய குடும்பத்தினரின் அவலமான மற்றும் எதேச்சதிகார ஆட்சியால் இலங்கை என்று கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தமிழர்களை கொன்றுகுவிக்க சீனா உள்பட பல்வேறு நாடுகளில் கடன்வாங்கிய ராஜபக்ச குடும்ப ஆட்சி, இன்று வாங்கிய கடனுக்கு வட்டியைக்கூட கட்ட முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளது. இதனால் இலங்கை திவாலாகும் நிலையில் உள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக உலக நாடுகள் கடுமையான பொருளாதார இழப்பை சந்தித்து உள்ளன. இதில் அண்டை நாடான இலங்கை கடுமையாக … Read more

“என் படத்தைப் பார்த்தால்..!”: எச்சரிக்கும் ‘அந்த நாள்’ ஹீரோ ஆர்யன் ஷ்யாம்!

ஏவிஎம் சரவணனின் பேத்தியான அபர்ணாவை திருமணம் செய்துகொண்டவர், ஆர்யன் ஷியாம். தற்போது அவர், ‘அந்த நாள்’ என்ற படத்தை தயாரித்து நடித்து உள்ளார். ‘மிஷ்கின் இயக்கத்தில் நான் நடிப்பதாக இருந்தது. ஆனால் அது நடக்கவில்லை. இந்த நிலையில், மிஷ்கின் இயக்கிய சைக்கோ படத்தைவிட, பத்து மடங்கு சிறந்த படத்தை உருவாக்க வேண்டும் என சபதம் எடுத்தேன். நானே கதை திரைக்கதை அமைத்தேன். தயாரித்து நடிக்கவும் செய்தேன். நரபலி மற்றும் பில்லி சூனியத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் … Read more

அரசின் நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் அகற்றப்படும்! சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்…

சென்னை: அரசின் நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள அனைத்து கட்டிடங்களும் அகற்றப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் சட்டப்பேரவையில் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் இன்று த பொதுப்பணிகள் & நெடுஞ்சாலைகள் துறை மானிய கோரிக்கை  விவாதங்கள் நடைபெற்று வருகிது. இன்று காலை சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியதும், கேள்வி நேரம் நடைபெற்றது. அப்போது சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர், போலியான ஆவணங்களை பயன்படுத்தி ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு நிலங்களை மீட்டெடுக்க அரசு முன்வருமா என கேள்வி எபப்பப்பட்டது,. இதற்கு பதில் கூறிய எ வருவாய்த்துறை … Read more

மகிழ்ச்சி: கொரோனா இல்லாத மருத்துவமனையாக மாறியது சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை…

சென்னை:  கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனை  2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கொரோனா நோயாளிகள் இல்லாத மருத்துவமனையாக மாறி உள்ளது. ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சையிலிருந்து அனைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருப்பது மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் மட்டுமின்றி பொதுமக்களிடையேயும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சையில் இருந்த அனைவரும்  குணமடைந்து வீடு திரும்பியதால் கொரோனா நோயாளிகளே … Read more

பாலிடெக்னிக் படித்தவர்கள் 2ம் ஆண்டு பொறியியல் படிக்கலாம்! சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி தகவல்

சென்னை: பாலிடெக்னிக் படித்தவர்கள் 2ம் ஆண்டு பொறியியல் படிக்கலாம் என சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி த தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் மார்ச் 19ல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து நான்கு நாட்கள் பட்ஜெட் மீது விவாதம் நடத்தப்பட்டு, சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டது. இம்மாதம் 6ம்தேதி முதல், சட்டசபையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்து வருகிறது. நீர்வளம், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, கூட்டுறவு, உணவு ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் முடிந்துள்ளது. … Read more

ஏப்ரல் 15ந்தேதிக்குள் சொத்து வரி செலுத்தினால் 5% ஊக்கத்தொகை! சென்னை மாநகராட்சி

சென்னை: சென்னையில் சொத்து வரியை, வரும் 15-ஆம் தேதிக்குள் செலுத்தினால் 5%  ஊக்கத்தொகை வழங்கப்படுமென சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. தமிழக அரசு மாநிலம் முழுவதும் சொத்து வரியை 25 சதவிகிதத்தில் இருந்து 150 சதவிகிதம் வரை உயர்த்தி உள்ளது. இது மக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாநகராட்சி  600 சதுரஅடி முதல் 1200 சதுரஅடி வரை 75 சதவீத சொத்து வரி உயர்த்தப்பட இருக்கிறது. ஏற்கெனவே, 600 சதுரஅடிக்கு ரூபாய் 810 சொத்து வரி … Read more

PNB மோசடி வழக்கு: இந்திய அழைத்து வரப்பட்டார் நீரவ் மோடியின் நெருங்கிய உதவியாளர்

மும்பை: நீரவ் மோடியின் நெருங்கிய உதவியாளர் இந்திய அழைத்து வரப்பட்டார். பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் மோசடியில் ஈடுபட்ட புகாரில் சிக்கியுள்ள பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, லண்டனுக்கு தப்பிச் சென்றார். இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று அங்கு அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த மாவட்ட நீதிமன்ற நீதிபதி சாம் கூசி உத்தரவிட்டார். அதனை எதிர்த்து லண்டன் நீதிமன்றத்தில் நிரவ்மோடி தரப்பு மனுதாக்கல் செய்தது. … Read more

உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்க AICTE உத்தரவு

சென்னை: உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்க AICTE உத்தரவு பிறப்பித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா கடுமையான தாக்குதல் நடத்தி வரும் நிலையில், மத்திய அரசின் ஆபரேசன் கங்கா திட்டத்தின் மூலம்,உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள் அண்டை நாடுகள் வழியாக மீட்கப்பட்டு தாயகம் அழைத்து வரப்படுகின்றனர்.அந்த வகையில்,இதுவரை 17,400 பேர் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர். எனினும்,உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.அந்த வகையில்,வெளிநாடு வாழ் தமிழர் நல ஆணையத்திற்கு … Read more

தமிழக சட்டசபையில் இன்று பொதுப்பணித் துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம்

சென்னை: தமிழக சட்டசபையில் இன்று பொதுப்பணித் துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ளது. தமிழக சட்டசபையில், இன்று நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, கட்டடங்கள், பொதுப்பணித் துறை மானிய கோரிக்கைகள் மீது, விவாதம் நடக்க உள்ளது. துறை அமைச்சர் வேலு, விவாதத்திற்கு பதில் அளித்து, துறையின் முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார்.

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னை இன்று பெட்ரோல் 110 ரூபாய் 85 காசுகள், டீசல் விலை 100 ரூபாய் 94 காசுகள் என்ற விலையிலும் விற்பனை ஆகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இதற்கிடையில், கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி தொடர்ந்து வருகிறது. இதன்படி, சென்னையில் இன்றைய பெட்ரோல் … Read more