“இஸ்லாமியர்களை நிம்மதியாக வாழ விடுங்கள்” : கர்நாடகாவில் வகுப்புவாத பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வர எடியூரப்பா அழைப்பு
“முஸ்லிம்களை அமைதியாகவும் மரியாதையாகவும் வாழ விடுங்கள்” என்று கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா இந்துத்துவா அமைப்புகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இஸ்லாமியர்களுக்கு சொந்தமான கடைகள் மற்றும் பழ வண்டிகளை சேதப்படுத்தியது தொடர்பாக ஸ்ரீ ராம சேனா அமைப்பைச் சேர்ந்த நான்கு பேர் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில், எடியூரப்பா இவ்வாறு கூறியுள்ளார். ஹிஜாப் விவகாரத்தை தொடர்ந்து கர்நாடகாவில் உள்ள இந்து கோயில்களில் இஸ்லாமியர்கள் கடை வைக்க அனுமதிக்கக் கூடாது, முஸ்லீம் ஓட்டுனர்களின் டாக்ஸி ஆட்டோக்களில் ஏறக்கூடாது, ஹலால் இறைச்சியைப் … Read more