அருப்புக்கோட்டை மீனாட்சி சொக்கநாதர் கோயில்

அருப்புக்கோட்டை மீனாட்சி சொக்கநாதர் கோயில் விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டையில் அமைந்துள்ளது. இவ்வூர் திருச்சுழி சாலையில் சொக்கலிங்கபுரம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இவ்வூர் முன்னர் செங்காட்டிருக்கை இடத்துவளி என்றழைக்கப்பட்டது. அருப்புக்கோட்டை நகரத்தின் கிழக்கில் அமைந்துள்ள சொக்கநாதர் கோயில் என்னும் சிவன் கோயிலில் உள்ள பிற்காலபாண்டியர் கல்வெட்டுகள் இவ்வூரின் வணிக முக்கியத்துவத்தை விளக்குவதாயுள்ளன. முதலாம் சடையவர்மன் குலசேகரன் காலத்தில் கட்டத் தொடங்கப்பட்ட இக்கோயில் அவனது இளவல் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் முற்றுப்பெற்றது. இச்சிவன் கோயிலின் சுவரில் 12 கல்வெட்டுகளும், … Read more

தமிழ்நாட்டில் இன்று (10-4-2022) புதிதாக 30 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 20,053 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 30 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 10 மாவட்டங்களில் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது, அதிகபட்சமாக சென்னையில் 16 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் இன்று மொத்தம் 31 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் இன்னும் 228 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஜீ 5 – அக்சராவின்  ‘பிங்கர் டிப்’ டீசர்!

ஜீ 5 – அக்சராவின்  ‘பிங்கர் டிப்’ டீசர்! ஜீ 5  தளத்தில் அக்சரா ஹாசன் நடிக்கும்  ‘பிங்கர் டிப்’ சீசன் 2 தொடருக்கான டீசர் வெளியாகி உள்ளது. டீசர்:

மூன்று லெஜண்ட்ஸ் வெளியிட்ட லெஜண்ட் பாடல்: 15 லட்சத்தைக் கடந்தது!

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் தயாரித்து நடிக்க, ஜேடி ஜெர்ரி இரட்டையர்கள் இயக்கும், லெஜண்ட் படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டு உள்ளது. படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். சரவணனுக்கு ஜோடியாக ரித்திகா திவாரி என்பவர் நடிக்கிறார். மறைந்த நடிகர் விவேக் மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, ரூபன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். அனல் அரசு சண்டைப்பயிற்சி இயக்குநராக பணிபுரிந்துள்ளார். பட்டுக்கோட்டை பிரபாகரன் இந்தப் படத்துக்கு … Read more

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் : ஹன்சிகா மோத்வானியின் ‘மை3’

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தமிழ் தனது அடுத்த தமிழ் இணைய தொடரான “மை3” தொடரை அறிவித்துள்ளது. தமிழில் வித்தியாசமான முயற்சியாக, ஒரு ரோபோடிக் காதல் கதையாக உருவாகும் இந்த தொடர் ரொமான்ஸ் காமெடி வகையில் பிரமாண்டமாக உருவாகவுள்ளது. ட்ரெண்ட்லவுட் தயாரிக்கும் இந்த இணைய தொடரை தமிழ் திரையுலகின் முன்னணி கமர்ஷியல் இயக்குனர் ராஜேஷ் எம் இயக்குகிறார். பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி, முகேன் ராவ், சாந்தனு, ஆஷ்னா ஜவேரி, ஜனனி ஐயர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கிறார்கள். கார்த்திக் முத்துக்குமார் … Read more

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி-யுடன் திடீர் சந்திப்பு… உக்ரைன் தலைநகரில் ஆய்வு…

ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைன் நாட்டுக்கு இங்கிலாந்தின் ஆதரவை உறுதிப்படுத்தும் விதமாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று திடீரென உக்ரைன் தலைநகர் கிவ் சென்றார். இங்கிலாந்தில் உள்ள உக்ரேனிய தூதரகம், அதிபர் ஜெலென்ஸ்கி மற்றும் போரிஸ் ஜான்சன் ஆகியோரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கங்களில் இந்த தகவல் பகிரப்பட்டுள்ளது. பிப்ரவரி 24 ரஷ்யப் படையெடுப்புக்குப் பின் காக்கி உடைக்கு மாறிய ஜெலன்ஸ்கி-யுடன் போரிஸ் ஜான்சன் சந்திப்பதையும், பேச்சுவார்த்தை நடத்தும் படங்களையும் அதில் பதிவிட்டுள்ளது. பிரிட்டன் பிரதமரின் இந்த … Read more

“சிலிண்டர் விலை உயர்வு குறித்து யாரும் கவலைப்படவில்லை” : நீட்டா டிசோசா எழுப்பிய கேள்விக்கு ஸ்ம்ரிதி இரானி அசத்தல் பதில்

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு குறித்து மத்திய அமைச்சர் ஸ்ம்ரிதி இரானியிடம் மகிளா காங்கிரஸ் கட்சி தலைவர் நீட்டா டிசோசா கேள்வி எழுப்பினார். டெல்லியில் இருந்து குவாஹாத்திக்கு சென்ற விமானத்தில் பயணம் செய்த நீட்டா டிசோசா தன்னுடன் அதே விமானத்தில் பயணம் செய்த மத்திய அமைச்சரிடம் விலைவாசி உயர்வு குறித்து கேள்வி எழுப்பினார். விமானத்தில் இருந்து இறங்க முயன்ற மத்திய அமைச்சர் ஸ்ம்ரிதி இரானியை பின்னால் இருந்து அழைத்த நீட்டா டிசோசா, … Read more

கடலூர் மருத்துவ மாணவர்கள் சென்னையில் ஆர்ப்பாட்டம்

சென்னை: கடலூர் மருத்துவ மாணவர்கள் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கடலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக மாணவர்கள் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்பாட்டம் நடத்தினர். 300-க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்

சென்னை: வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாகத் தென் தமிழகக் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் எனத் தெரிவித்துள்ளது. நாளை தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக் கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது .

நாடு முழுவதும் உள்ள பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் கோயில்களில் சிறப்பு வழிபாடு

புதுடெல்லி: ராமநவமியையொட்டி நாடு முழுவதும் உள்ள பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ராமநவமியையொட்டி அயோத்தியில் உள்ள ராம் லாலா கோயிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ராமபிரானின் பிறந்த நாளை ராமநவமியாக நாடு முழுவதும் இந்துக்கள் கொண்டாடி வருகின்றனர். சித்திரை மாதத்தில் வரும் நவமி தினமே ஆண்டுதோறும் ராமநவமியாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள ராம் லாலா கோயிலில் அதிகாலையில் ராமபிரானுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது. … Read more