பொருளாதார நெருக்கடி – இலங்கையிலிருந்து மேலும் 19 பேர் தமிழகம் வருகை
ராமேஸ்வரம்: இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக, குழந்தைகள் உட்பட மேலும் 19 பேர் இலங்கையிலிருந்து தமிழகம் வந்துள்ளனர். இலங்கையிலிருந்து தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதிக்கு வந்த 19 நபர்களிடம், கியு பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது இலங்கையில் விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால், தமிழகத்திற்கு வந்ததாகத் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்திய பின்னர், மரைன் காவல் நிலையத்தில் ஒப்படைக்கவுள்ளனர். ஏற்கனவே இலங்கையிலிருந்து வந்த ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 20பேர், மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் … Read more