ஸ்ரீநகர் என்ஐடியில் படித்த மாணவர்கள் 24 பேருக்கு கொரோனா உறுதி…

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் செயல்பட்டு வரும, தேசிய தொழில்நுட்ப கல்வி மையத்தில் (என்ஐடி) படிக்கும் 24 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ளது. ஒருசில மாநிலங்களில் மட்டும் குறைந்த அளவிலான தொற்று பாதிப்பே கண்டறியப்பட்டு உள்ளது. இந்த நிலையில்,  ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலம்  ஸ்ரீநகரில் உள்ள என்.ஐ.டி.யில் படிக்கும் 24 மாணவர்கள் சிலர் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், அங்கு நடத்தப்பட்ட கொரோனா  பரிசோதனையில் 24 பேருக்கு … Read more

நீரூற்றுக்கள், மரக்கன்றுகள் உள்பட பல்வேறு திட்டங்கள்: சிங்காரச் சென்னை 2.0-க்கு முக்கியத்துவம் கொடுத்த மாநகராட்சி பட்ஜெட்!

சென்னை: சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் ’சிங்காரச் சென்னை 2.0’ திட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை அழகுபடுத்தும் வகையில் ஏராளமான நீரூற்றுக்கள், மரக்கன்றுகள் நடும் திட்டம் உள்பட பல்வேறு செயல்களுக்கான மொபைல் செயலிகளும் கொண்டு வரப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தொடர் 6 ஆண்டுகளுக்கு இன்று தொடங்கியது. மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் நடைபெற்ற அமர்வில், மேயர் பிரியா ராஜன் 64 அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த அறிவிப்புகளில் ‘சிங்காரச் சென்னை 2.0’ திட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் … Read more

திமுகவின் 10 மாத ஆட்சியில் ரூ.2,500 கோடி மதிப்பிலான கோவில் சொத்துக்கள் மீட்பு! அமைச்சர் சேகர்பாபு…

சென்னை: திமுகவின் 10 மாத ஆட்சியில் ரூ.2,500 கோடி மதிப்பிலான அறநிலையத்துறைக்கு சொந்தமான  கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். அமைச்சர் சேகர்பாபு இன்று திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மங்களப்பபுள்ளி லெட்சுமி நரசிங்க பெருமாள் கோவில் மற்றும் தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவில்களில் கும்பாபிஷேகம் மற்றும் பராமரிப்பு பணிகள் செய்வது  தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.  இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களில் 12 வருடங்களுக்கு மேல் ஆன கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கும் பராமரிப்பு … Read more

50டன் எடை கொண்ட 60அடி இரும்பு பாலம் இரவோடு இரவாக திருட்டு! பீகாரில் நடைபெற்ற பலே கொள்ளை சம்பவம்…

பாட்னா: பீகார் மாநிலத்தில் பயன்படுத்தப்படாமல் இருந்த சுமார் 50 டன் எடை கொண்ட 60 அடி இரும்பு பாலத்தை கொள்ளைக்கூட்டம் ஒன்று இரவோடு இரவாக பெயர்த்து எடுத்து சென்றுள்ளது விவகாரம் வெளியே தெரிய வந்துள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டிஜிட்டல் உலகில் அது சம்பந்தமான திருட்டுக்களே சமீப காலமாக அதிகரித்து வரும் நிலையில், பீகார் மாநிலத்தில் 500 டன் எடை கொண்ட இரும்பு பாலத்தையே அலெக்காக பொதுமக்கள் முன்னிலையில் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர் கொள்ளை கூட்டத்தினர். இந்த … Read more

சென்னை மாமன்றத்தில் பாஜக உறுப்பினரின் பேச்சுக்கு வரவேற்பும், கம்யூ.உறுப்பினரின் சொத்து வரி உயர்வு எதிர்ப்பும் தெரிவித்த திமுகவினர்…

சென்னை: சென்னை மாநகராட்சி இன்று தாக்கல் செய்த பட்ஜெட் மீதான விவாதம் இன்று பிற்பகல் நடைபெற்றது. அபோது, சென்னை மாமன்றத்தில் பேசிய பாஜக உறுப்பினரின் இந்தி குறித்த பேச்சுக்கு வரவேற் தெரிவித்த திமுக கவுன்சிலர்களின், சொத்து வரிஉயர்வு குறித்து பேசிய கம்யூனிஸ்டு உறுப்பினரின் பேச்குக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சென்னை மாநகராட்சியில் பட்ஜெட் கூட்டம்  6 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நடைபெற்றது. மாநகராட்சி மாமன்றத்தில்,  அனைத்து கட்சி வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர், மாநகராட்சி மேயர் பிரியா … Read more

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி விலை எவ்வளவு தெரியுமா?

டெல்லி: 18வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் வரும் ஏப்ரல் 10ம் தேதி முதல் கொரோனாவுக்கு எதிரான பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் தனியார் மருத்துவமனை வசூலிக்கும் கட்டண விவரத்தை அ்றிவித்துள்ளது. அதன்படி பூஸ்டர் டோஸ் தகுதி பெரும் நபருக்கு, தடுப்பூசி விலையுடன் சேவைக்கட்டணமாக  ரூ.150 மட்டுமே சேவைக்கட்டணமாக வசூலிக்க வேண்டும் மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர் அசோக் பூஷன் அறிவித்து உள்ளார். (அதாவது தடுப்பூசி பூஸ்டர் டோஸ் விலை ரூ.600 + வரி (5%) … Read more

தனியார் மருத்துவமனைகளில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளின் ஒரு டோஸ் ரூ.225 என குறைப்பு!

டெல்லி: தனியார் மருத்துவமனைகளில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளின் ஒரு டோஸ் ரூ.225 என குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 10ந்தேதி முதல் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசிகள், பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் பணம் செலுத்தி எடுத்துக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்து உள்ளது. இதையடுத்து, அதற்கான விலை குறைக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே சில குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளில் மட்டும் தடுப்பூசி போடப்பட்டு வந்தது. அப்போது ஒரு டோஸ் தடுப்பூசியின் விலை குறைந்த பட்சம் ரூ.600 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. … Read more

முதலாளிகளுக்கு எடுத்துக்காட்டு: நீண்ட கால ஊழியர்களுக்கு பிஎம்டபிள்யூ கார் பரிசு வழங்கி கவுரவித்த மென்பொருள் நிர்வாகம்!

சென்னை:  முதலாளி வர்க்கத்துக்கு எடுத்துக்காட்டாக மென்பொருள் நிறுவனம் ஒன்றில் நீண்டகாலமாக பணியாற்றி வந்த ஊழியர்கள் 5 பேருக்கு ரூ.1கோடி மதிப்புள்ள பி.எம்.டபிள்யூ. சொகுசு கார் பரிசு வழங்கி கவுரவித்துள்ளது பிரபல  மென்பொருள் நிர்வாகம். இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பல நிறுவனங்களில் குறிப்பிட்ட சில ஆண்டுகள் பணியாற்றினாலே, அவர்கள் மீது ஏதாவது ஒரு குற்றச்சாட்டை கூறி, அவர்களை வேலையில் இருந்து நீக்குவதிலேயே பெரும்பானலா மென்பொருட்கள் நிறுவனங்கள் மட்டுமின்றி அனைத்து வகையான தனியார் நிறுவனங்களும் ஊடக நிறுவனங்களும் செயல்பட்டு … Read more

சங்கரா மீன் கண்ணழகி சரண்யா ரவிச்சந்திரன்!

காந்த கண்ணழகி சரண்யா ரவிச்சந்திரன்! கருப்பாக கருமை நிறமென்றாலே, இளக்காரமாக பார்க்கும் உலகில் தன்னுடைய நடிப்பால் ரசிகர்கள் மனதில் நிலைத்து நின்றிருப்பவர் நடிகை சரண்யா ரவிச்சந்திரன். காதலும் கடந்து போகும், வட சென்னை, இறைவி, என பல படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். பல குறும்படங்களில் நடித்துள்ளார். இப்போது மீண்டும் பெரியதிரை படங்களில் கமிட் ஆகியிருக்கிறார். அவர், “மிகப்பெரிய இயக்குநர் மறைந்த பாலு மகேந்திரா அவர்களின் இயக்கத்தில் கருப்பு நிற நாயகிகள்தான் நடித்து புகழ் பெற்றார்கள். … Read more

பெட்ரோல் டீசல் விலை உயர்வால் ஆட்டோ கட்டணங்களையும் மாற்றியமைக்கலாம்! உயர்நீதி மன்றம்

சென்னை: பெட்ரோல் டீசல் விலை உயர்வால் ஆட்டோ கட்டணங்களையும் மாற்றியமைக்கலாம் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்துள்ளது. உக்ரைன் ரஷ்யா போரால் கச்சாவிலை அதிகரித்துள்ளதால் எரி பொருட்கள் விலை உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக விலைவாசிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. சமையல் எண்ணை விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ஆட்டோவில் … Read more