திமுக அரசின் இரட்டை வேடம் – அரசு தணிக்கைத் துறைகள் தனியாருக்கு தாரை வார்ப்பு! ஓபிஎஸ் கண்டனம்…

சென்னை: “அரசு தணிக்கைத் துறைகளை தனியாருக்கு திமுக அரசு தாரை வார்க்கிறது என்றும், மத்திய அரசின் தனியார் மயத்தை  எதிர்த்த முதலமைச்சர், இன்று அதே பாணியை கடைபிடிப்பது அவருடைய இரட்டை வேடத்திற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு என அதிமுக ஒருங்கிணைப் பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் கடுமையாக சாடியுள்ளார். தனியர் ஒருவரை நேரடியாக மாநில தலைமை தணிக்கை இயக்குநர் பதவிக்கு நியமிக்கவும், அரசுத்துறை மற்றும் அரசு நிறுவனங் களின் தணிக்கையை தனியார் தணிக்கை நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளவும் வழிவகை … Read more

தக்சின் தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு மாநாட்டை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை தக்சின் தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார். சென்னையில் தென்னிந்திய ஊடக பொழுதுபோக்கு மாநாட்டை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். விழாவில் இயக்குநர் ராஜமெளலி, நடிகர்கள் ஜெயம் ரவி, ஜெயராம், ரமேஷ், அரவிந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிஐஐ கூட்டமைப்பு சார்பில்  நடைபெறும் இந்த மாநாடு 2 நாட்கள்  நடைபெற இருக்கிறது. சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில்  சிஐஐ கூட்டமைப்பு சார்பில் தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு தொடர்பான … Read more

பட்டப்படிப்பை முடித்த மாணாக்கர்களுக்கு 6 மாதங்களுக்குள் பட்டம் வழங்கப்பட வேண்டும்! யுஜிசி உத்தரவு

டெல்லி: பட்டப்படிப்பை முடித்த 180 நாள்களுக்குள் கல்லூரி மாணவர்களுக்கு பட்டம் வழங்கபட வேண்டும் என்று அனைத்து கல்லூரிகளுக்கும்  பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் ஏராளமான அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் பட்டப்படிப்பு முடிக்கும் மாணாக்கர்களுக்கு  பட்டப்படிப்புக்கான சான்றிதழ் வழங்குவதும் காலதாமதம் செய்யப்படுகிறது. இதனால் இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. இதுதொடர்பாக ஏராளமான புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பட்டப்படிப்பை முடித்த 180 நாள்களுக்குள் கல்லூரி மாணவர்களுக்கு பட்டம் வழங்க பல்கலைக்கழக மானியக் குழு … Read more

சொத்து வரி உயர்வை தொடர்ந்து காலி மனைகளுக்கான வரியும் 100% உயர்வு! தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் சொத்துவரி கடுமையாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், தற்போது காலி மனைகளுக்கான வரியையும் 100 சதவிகிதம் உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் சொத்து வரி குறைந்த பட்சம் 25 சதவிகிதம் முதல் அதிக பட்சமாக 150 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள நிலையில், வரியை குறைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகளும் போர்க்கொடி தூக்கி வருகின்றனர். இந்த நிலையில், தற்போது காலி மனைகளுக்கான வரியையும் 100 சதவிகிதம் அளவுக்கு உயர்த்தி தமிழகஅரசு … Read more

உருது பள்ளிகள் வரும் 30-ம் தேதி வரை அரை நாள் மட்டுமே இயங்கும்

சென்னை: உருது பள்ளிகள் வரும் 30-ம் தேதி வரை அரை நாள் மட்டுமே இயங்கும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை மாநகராட்சியின் கீழ் செயல்படும் உருது பள்ளிகள், ரமலான் நோன்பு காரணமாக வரும் 30-ம் தேதி வரை அரை நாள் மட்டுமே இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசு மீது இன்று வாக்கெடுப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இம்ரான்கான் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க 172 இடங்கள் தேவை என்ற நிலையில் எம்.கியூ.எம். விலகியதை அடுத்து ஆளுங்கட்சியின் பலம் 164 ஆக குறைந்தது. அத்துடன், எதிர்க்கட்சிகளின் பலம் 177 ஆக உயர்ந்துள்ளது. இதனால் இம்ரான்கான் அரசு பெரும்பான்மை இழந்துள்ளது. அதனால் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்தித்தாலும் அவர் தோல்வி அடைவது உறுதி என தகவல் வெளியாகி உள்ளது. … Read more

‘தங்க மனசு கொண்ட சிங்கம்’… தனுஷ் குறித்து செல்வராகவன் பதிவு…

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், இந்துஜா, எல்லி அவுர் ரம் நடிக்கும் படம் ‘நானே வருவேன்’. தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து வரும் இந்தப் படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்று வருகிறது. யுவன் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். ஒரே நேரத்தில் ‘வாத்தி’ மற்றும் ‘நானே வருவேன்’ ஆகிய இரண்டு படங்களில் கேப்பே இல்லாமல் நடித்து வரும் தனுஷ் மூன்றாவதாக திருச்சிற்றம்பலம் படத்திற்காக டப்பிங்கும் பேசி வருகிறார். இந்த நிலையில், யோகி … Read more

86,986 பாலியல் தொழிலாளர்களுக்கும், 2,429 திருநங்கைகளுக்கும் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன! தமிழக அரசு தகவல்

சென்னை: தமிழகத்தில் 86,986 பாலியல் தொழிலாளர்களுக்கு, 2,429 திருநங்கைகளுக்கும் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக சட்டமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்றத்தில் இன்று மானிய கோரிக்கை விவாதங்களைத் தொடர்ந்து, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறைகளின் கொள்கை விளக்கக் குறிப்பு தாக்கல் செய்யப்பட்டது.  அதில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் தனியாகவோ அல்லது குடும்பமாகவோ வசிக்கும் பாலியல் தொழிலாளர்களுக்கு மே 2022 வரை 86,986 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இவர்களுக்கு மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய … Read more

ப்யூமா, நைக் காலணி தயாரிப்பு நிறுவனமான ஹாங் ஃபூ தமிழகத்தில் ரூ.1,000 கோடி முதலீடு செய்ய உள்ளது

தைவானைச் சேர்ந்த காலணி தயாரிப்பு நிறுவனமான ஹாங் ஃபூ நிறுவனத்துடன் அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் ரூ. 1,000 கோடி முதலீட்டில் புதிய உற்பத்தி கூடங்களை அமைப்பதற்காக தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழகத்தில் காலணி உற்பத்தித் தொழிலுக்கு ஊக்கமளிப்பதுடன், சுமார் 20,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று கூறப்பட்டுள்ளது. 2003 ஆம் ஆண்டு முதல் விளையாட்டு ஆடைகள் மற்றும் காலனி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஹாங் ஃபூ நிறுவனம் நைக் … Read more

இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல்! அமித்ஷா பேச்சு குறித்து முதல்வர் ஸ்டாலின் டிவிட்

சென்னை: ஆங்கிலம், இந்தி குறித்த அமித்ஷாவின் கருத்து இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல் என  முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட் பதிவிட்டுள்ளார். டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டத்தில் தலைமையேற்று உரையாற்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தியாவில், ஆங்கிலத்துக்கு மாற்றாக  இந்தியைத்தான் கருத வேண்டும், உள்ளூர் மொழிகளை அல்ல என்றும்,  இந்தியாவில் தேசிய மொழி இல்லை என்றாலும், இந்திதான் நாட்டின் அதிகாரபபூர்வ மொழியாகும் என தெரிவித்துள்ளார். அமித்ஷாவின் பேச்சுக்கு தமிழகம் உள்பட பல மாநிலங்களில் … Read more