உக்ரைன் மீதான போரில்,  குறிப்பிடத்தக்க’ அளவில் இழப்புகளை ஏற்பட்டுள்ளது! ரஷ்யா ஒப்புதல்

மாஸ்கோ: உக்ரைன் மீதான போரில்,  குறிப்பிடத்தக்க’ அளவில் இழப்புகளை ஏற்பட்டுள்ளது என கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் பெஸ்கோவ்  ஒப்புக்கொண்டுள்ளார். இஸ்ரேல் மீது ரஷ்யா தொடர்ந்துள்ள தாக்குதல் 44 நாட்களாக தொடர்கிறது. பல நகரங்களை ரஷ்யா படைகள் குண்டுவீசி அழித்து வந்தாலும், முழுமையாக கைப்பற்ற முடியாத நிலையே தொடர்கிறது. ரஷியா படைகள் கைப்பற்றிய நகரங்களை உக்ரைன் மீட்டு வருகிறது. இதனால் ஆவேசம் அடைந்துள்ள ரஷிய படையினர் அப்பாவி மக்களையும் கொன்று குவித்து வருகின்றனர். சமீபத்தில் புச்சா நகரில் 400-க்கும் … Read more

மனித ரத்தத்தில் பிளாஸ்டிக் துகள்கள்: மத்தியஅரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

டெல்லி: மனித ரத்தத்தில் பிளாஸ்டிக் துகள்கள் கலந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில்,  தேசிய பசுமை தீர்ப்பாயம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இதுதொடர்பாக மத்தியஅரசு அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது. உலக நாடுகளில் பிளாஸ்டிக் பயன்பாடு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது, மற்றொரு புறம், பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்தவும், உலக  நாடுகள் போர்க்கொடி தூக்கி வருகின்றன. பிளாஸ்டிக்கால் ஏற்படும் மாசுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சில … Read more

08/04/2022: தமிழகத்தில் இன்று 22 பேருக்கு கொரோனா பாதிப்பு 32 பேர் டிஸ்சார்ஜ்

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 22 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. இருந்தாலும், தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தமிழகஅரசு தெரிவித்துள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 34,53,033 ஆக உயர்ந்துள்ளது. அதிக பட்சமாக சென்னையில்  10 பேருக்கு கொரோனா தொற்று … Read more

இந்தியா முன்பு ஒரு தேசமாக இருந்தது, இப்போது தேசத்திற்குள் வெவ்வேறு நாடுகளை உருவாக்கி விட்டார்கள் : ராகுல் காந்தி

ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சரத் யாதவை இன்று அவரது இல்லத்தில் சந்தித்தார் ராகுல் காந்தி. காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி மீண்டும் பொறுப்பேற்க வேண்டும் என்று சரத் யாதவ் விருப்பம் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, சரத் யாதவ் தனது அரசியல் ஆசான் என்றும் அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாகவும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், “ஊடகங்கள், பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளின் தலைவர்கள் கடந்த 2 … Read more

ஹலால் இறைச்சி விவகாரத்தை தொடர்ந்து… இஸ்லாமிய ஓட்டுநர்களை நியமிக்க எதிர்ப்பு தெரிவிக்கும் இந்து அமைப்பினர்…

ஹிஜாப், ஹலால் இறைச்சி விவகாரங்களைத் தொடர்ந்து இஸ்லாமிய ஓட்டுனர்களை நியமிக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக இந்து மைப்பினர் குரல் கொடுத்து வருகின்றனர். பாரத ரக்ஷனா எனும் இந்து அமைப்பைச் சேர்ந்த பிரசாந்த் பங்கேரா என்பவர் கோவில்கள் மற்றும் புனித யாத்திரைக்குச் செல்லும் இந்துக்கள் இஸ்லாமியர்களை ஓட்டுநர்களாக உள்ள வாகனங்களில் செல்லாதீர்கள் என்று கூறியுள்ளார். இதற்கு அனைத்து இந்துக்களும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதை தொடர்ந்து ஸ்ரீ ராம் சேனா என்ற மற்றொரு இந்து அமைப்பு இதற்கு … Read more

இந்திய மக்களை மொழிரீதியாக பிளவுபடுத்துகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா! கே.எஸ்.அழகிரி,

சென்னை: நாநாடாளுமன்ற அலுவல் மொழி மாநாட்டில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆற்றிய உரை இந்திய அரசமைப்பு சட்டத்திற்கும், ஆட்சி மொழிகள் சட்டத்திற்கும் விரோதமானதாகும். இந்திய மக்களை மொழிரீதியாக பிளவபுடுத்துகிறார் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார். மதரீதியாக மக்களை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடுகிற அணுகுமுறையை கையாண்ட பா.ஜ.க.வினர் தற்போது இந்தி மொழி திணிப்பை கையில் எடுத்திருக்கிறார்கள். இதை உறுதி செய்கிற வகையில் அமித்ஷாவின் பேச்சு அமைந்திருக்கிறது என காங்கிரஸ் மாநில தலைவர் … Read more

தமிழ்நாட்டில் ‘பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை’! கல்லூரி மாணவிகளுக்கு ‘பெப்பர் ஸ்பிரே’ வழங்கிய எடப்பாடி பழனிச்சாமி!

சென்னை: திமுக ஆட்சியில் ‘பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை’ கூறி, கல்லூரி மாணவிகளுக்கு முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி  ‘பெப்பர் ஸ்பிரே’ வழங்கினார். தமிழ்நாட்டில் சமீப காலமாக பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது. ஏராளமான பாலியல் புகார்கள் எழுந்துள்ளன. அதுபோல காவல்துறையினரின் நடவடிக்கைகளும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. இது தமிழக சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது.   தமிழகத்தில்  திமுக பொறுப்பேற்றதில் இருந்து,  கொலை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும்,  தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு … Read more

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு பதிவிட்டதற்காக நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் எஸ்.வி.சேகர்!

சென்னை: பெண் பத்திரிகையாளரை அவமதிக்கும் வகையிலான பதிவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த வழக்கில், பாஜக உறுப்பினரும், நடிகருமான எஸ்.வி. சேகர் உயர்நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். கடந்த 2018-ஆம் ஆண்டு  தனது முகநூல் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறான கருத்து ஒன்றை நடிகரும், பாஜக ஆதரவாளருமான எஸ்.வி.சேகர் பகிர்ந்திருந்தார். இது சர்ச்சையானது. எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  இதைத்தொடர்ந்து தமிழ்நாடு  பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் மிதார் மொய்தீன் சென்னை … Read more

ஹஜ் பயணிகள் புறப்பாடு தலமாக சென்னையை அறிவிக்கக் கோரிய வழக்கு! ஹஜ் கமிட்டிக்கு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: இஸ்லாமியர்கள், புனித ஹஜ் பயணம் செய்வோருக்கான புறப்பாட்டு தலமாக சென்னையை மீண்டும் அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில்,  தமிழக அரசின் கோரிக்கையை பரிசீலிக்கும்படி, அகில இந்திய ஹஜ் கமிட்டிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இஸ்லாமியர்கள் மெக்காவுக்கு ஹஜ் பயணம் செய்யும் வகையில் நாடு முழுவதும் 21 விமானங்கள் புறப்பாடு தலங்களாக இருந்து வந்தது. பின்னர் கொரோனா காலக்கட்டத்தில் அவை 10ஆக குறைக்கப்பட்டது. இதில் சென்னையும் நீக்கப்பட்டு உள்ளது. இதனால் சென்னையை மீண்டும் புறப்பாட்டு தலங்கள் … Read more

மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி! பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று தெரிவித்தார். சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது, உறுப்பினரின் கேள்விக்கு பதில் அளித்த முதல்வர், 25,500 மக்கள் நலப்பணியாளர்கள் கலைஞர் கருணாநிதியால் நியமனம் செய்யப்பட்டார்கள். ஆனால் அதிமுக ஆட்சியில் மக்கள் நலப்பணியாளர்களை நீக்கி விட்டனர். அதிமுக ஆட்சியில் நீக்கப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். மேலும்,  விருப்பமுள்ள முன்னாள் மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் … Read more