இந்தியாவில் பல மொழிகள் பேசப்படுவது பலவீனம் அல்ல! ராகுல்காந்தி

டெல்லி: இந்தியாவில் பல மொழிகள் பேசப்படுவது நாட்டின் பலவீனம் அல்ல என ராகுல்காந்தி கூறியுள்ளார். நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37ஆவது கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய உள்துறைஅமைச்சர் அமித்ஷா, நாடு முழுவதும் ஆங்கில மொழிக்கு மாற்றாக இந்தி மொழியே இருக்க வேண்டும் என்றும், இந்திதான் நாடாளுமன்றத்தின் அலுவல் மொழி என்றும், பல வட மாநிலங்களில் இந்தி மொழியை ஆட்சியாக மொழியாக ஏற்றுக்கொண்டுள்ளார்கள் எனவே  ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியா, நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழு … Read more

மக்களை தேடி மருத்துவம்: நடமாடும் மருத்துவ வாகன சேவை திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: கிராமங்களுக்கு மருத்துவ சேவை வழங்க நடமாடும் மருத்துவமனைகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இந்தநிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்றது. சென்னை மெரினாவில் நடைபெற்ற மக்களை தேடி மருத்தவம் திட்டத்தின் நிகழ்ச்சியில், ரூ.70 கோடி மதிப்பீட்டில் 389 நடமாடும் மருத்துவ வாகன சேவை திட்டம் தொடங்கப்பட்டது.  அதன்படி, நடமாடும் மருத்துவ வாகன சேவை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மக்களை தேடி மருத்தவம் திட்டத்தின் கீழ் கிராமங்களுக்கு மருத்துவ சேவை வழங்க  நடமாடும் … Read more

லீக் சுற்றில் லக்னோ அணிக்கு 3வது வெற்றி: டெல்லியை பந்தாடி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

மும்பை:  நேற்று நடைபெறற டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ அணி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்த தொடரில் நடைபெற்றுள்ள லீக் ஆட்டங்களில் 3 வெற்றியை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது புதிதாக களமிறங்கிய லக்னோ அணி. ஆட்டநாயகனாக டி காக் தேர்வு செய்யப்பட்டார். 15ஆவது ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. நேற்று ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் … Read more

சாலை விபத்துகளில் இந்தியா முதலிடம்! அமைச்சர் நிதின்கட்கரி தகவல்…

டில்லி:  சாலை விபத்துக்களில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையில் உலக அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் பாராளுமன்றத்தில் கூறினார். ராஜ்யசபாவில் சாலை விபத்து குறித்து உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பதில் அளித்து பேசினார். அப்போது,  சர்வதேச சாலை கூட்டமைப்பால் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில், 2020ல், நம் நாட்டில், சாலை விபத்துகளில் அதிகமானோர் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. உலக நாடுகளின் பட்டியலில், அதிக … Read more

முகத்தில் அறைந்து விவகாரம் – நடிகர் வில் ஸ்மித்திடம் இன்று விசாரணை

லாஸ் ஏஞ்சல்ஸ்: முகத்தில் அறைந்து விவகாரம் – நடிகர் வில் ஸ்மித்திடம் இன்று விசாரணை நடத்தப்பட உள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த 94-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை, ‘கிங் ரிச்சர்ட்’ என்ற திரைப்படத்திற்காக நடிகர் வில் ஸ்மித் வென்றார். முன்னதாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த நடிகர் கிறிஸ் ராக் நகைச்சுவையாக பேசி கொண்டிருந்தார். அவர் நடிகர் வில் ஸ்மித்தின் மனைவி நடிகை ஜடா பிங்கெட் ஸ்மிதின் … Read more

வார ராசிபலன்: 8.4.2022  முதல் 14.4.2022 வரை! வேதா கோபாலன்

மேஷம் குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும் நீண்ட நாட்களாக தாமதப்படுத்தப்பட்டு வந்த பல காரியங்கள் வெற்றிகரமாக முடியும் மாணவர்களின் கல்வி நன்றாக இருக்கும். கல்விச் செலவுகள் சற்று கூடுதல் ஆனாலும் மன மகிழ்ச்சி உண்டாகும். பெண்களுக்கு இனிய வாரம் ஆகும் குடும்பத்தில் அமைதி தவழும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். வயதானவர்களுக்குச் சற்று உடல்நிலையில் தொல்லைகள் கொடுத்து சரி செய்யக்கூடிய நாளாகும். பொருட்களின் மீது கவனமாக இருங்கள். வாகன வகையில் ஆதாயம் உண்டாகும். எதிர்காலம் … Read more

ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யா இடைநீக்கம்

நியூயார்க்: ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யா இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனின் புச்சா நகரில் நடைபெற்ற படுகொலைகளை அடுத்து ஐநா மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யாவை நீக்க வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் வலியுறுத்தின. இதை அடுத்து நியூயார்கில் ஐ.நா.சபையின் பொதுச்சபை கூட்டத்தில் அதற்கான தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. ரஷ்யாவை நீக்க கோரும் தீர்மானத்தை ஆதரித்து 93 நாடுகள் வாக்களித்தன. தீர்மானத்தை எதிர்த்து சீனா, பெலாரஸ், ஈரான், சிரியா … Read more

அச்சிறுபாக்கம் ஆட்சீசுவரர் கோயில்

அச்சிறுபாக்கம் ஆட்சீசுவரர் கோயில், சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், மதுராந்தகத்தை அடுத்து அச்சரப்பாக்கத்தில் அமைந்துள்ளது. அச்சரப்பாக்கம் என்று தற்போது மக்கள் வழக்கில் வழங்கப்பட்டு வரும் அச்சிறுப்பாக்கம் சிவன் கோயில் தொண்டைமண்டலத்தின் பாடல் பெற்ற தலங்களில் 29-வது தலமாகும். திருஞானசம்பந்தர் இத்தலத்தைப் பாடியுள்ளார். இக்கோயிலில் ஆட்சீசுவரர், உமையாட்சீசுவரர் என இரண்டு கருவறைகள் உள்ளன. உமையாட்சீஸ்வரர் சந்நிதி, வாயிலுக்கு நேரே உள் திருச்சுற்றில் அமைந்துள்ளது. சித்திரைத் பெருவிழாவில் 11-ஆம் நாள் சுவாமி ‘பெரும்பேறு கண்டிகை’ கிராமத்திற்கு எழுந்தருளி, அகத்தியருக்குக் … Read more

ஜீ5-ல் வெற்றிமாறன், கிருத்திகா தொடர்கள்!

ஜீ5 தளத்தில் தமிழின் முன்னணி படைப்பாளி இயக்குநர் வெற்றிமாறனின் ஒரிஜினல் தொடர், பிரகாஷ் ராஜ் மற்றும் காளிதாஸ் ஜெயராம் ஆகியோரின் அடுத்த தொடர் மற்றும் தமிழ் பார்வையாளர்களுக்காக பிரத்யேகமாக தொகுக்கப்பட்ட சிறப்பான கதைகளுடன் பல ஒரிஜினல் தொடர்கள் வரவுள்ளது ஜீ5 தளத்தில் வரவிருக்கும், புதிய அதிரடி ஒரிஜினல் தொடர்கள் பற்றிய அறிவிப்பு, தமிழ் படைப்பாளிகளான இயக்குநர் வெற்றிமாறன், விஜய், வசந்த பாலன் , கிருத்திகா உதயநிதி ஆகியோர் முன்னிலையில் வெளியிடப்பட்டது. நடிகர்-இயக்குனர்- பிரகாஷ் ராஜ், ராதிகா சரத்குமார், … Read more

07/04/2022: தமிழ்நாட்டில் இன்று 26 பேருக்கு கொரானா பாதிப்பு 37 பேர் டிஸ்சார்ஜ்…

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா உயிரிழப்பின்றி, 26 பேருக்கு கொரானா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதுடன், 37 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்து வருகிறது. ஆனால்  ஜூன் மாதத்தில் கொரோனா 4வது அலை பரவும் வாய்ப்பு இருப்பதாக சில மருத்துவ நிபுணர்கள் கூறி வரும் நிலையில், தொற்று பரவல் கட்டுக்குள் வந்துள்ள மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருந்தாலும் மக்கள் முக்கவசம் அணிவது நல்லது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தமிழக … Read more