100 நாள் வேலை திட்டத்தின் ஒருநாள் கூலி ரூ.281 ஆக உயர்வு! சட்டப்பேரவையில் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி  100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றுபவர்களுக்கு ஒருநாள் ஊதியம்  281 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய ஊதிய உயர்வு 01-04-2022 முதல் அமலுக்கு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற மானிய கோரிக்கை விவாதங்களைத் தொடர்ந்து,, ஊராட்சித்துறை கொள்கை விளக்க குறிப்பு வாசிக்கப்பட்டது. அதில், ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஒருநாள் கூலி ஏப்ரல் 1 முதல் உயர்த்தப்பட்டுள்ளது. ஆண், பெண் இருபாலாருக்கு ஒருநாள் கூலி ரூ.281 ஆக … Read more

இலங்கைத் தமிழர்களுக்கு உதவுங்கள்! மத்தியஅரசிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை

சென்னை: பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையில் வசிக்கும்  தமிழர்களுக்கு உதவுங்கள் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங் கரிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம்  தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது நிலவும் தீவிர பொருளாதார நெருக்கடியில் சிக்கி வேதனையில் தவித்துக் கொண்டிருக்கும் இலங்கை தமிழர்கள் குறித்து தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொண்டார். … Read more

நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கக்கட்டணத்தை அறியும் வகையில் மேம்படுத்தப்பட்ட கூகுள் மேப்! விரைவில் அறிமுகம்

டெல்லி: வழி தெரியாதவர்களுக்கு வழியை காட்டுவதில் முன்னணியில் உள்ளது கூகுள்மேப். நகர்ப்புறங்களில் இன்று பெரும்பாலோர் தாங்கள் செல்லும் இடங்களுக்கு எளிதாக செல்ல கூகுள் மேப் பெரிதும் உதவிக்கமாக திகழ்கிறது. இந்த கூகுள் மெப் செயலில் புதிய அப்டேட் விரைவில் வெளியாக உள்ளது. இதன்மூலம் நாம் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது, அடுத்து எந்த இடத்தில் டோல் வருகிறது, அங்கு வசூலிக்கப்பட உள்ள கட்டணம் எவ்வளவு என்பதுவரை முன்கூட்டியே தெரிவிக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டு உள்ளது. டிஜிட்டலின் அசூர வேக வளர்ச்சி இன்று … Read more

அசத்தல் போஸ்: மிரட்டும் ‘சரவணா ஸ்டோர்ஸ்’ சரவணன்!

சரவணா ஸ்டோர்ஸ் அதிபர், சரவணன் நடிக்கும் ‘தி லெஜெண்ட்’ படத்தின் முதல் பாடல் வெளியீட்டுத் தேதியை அறிவிக்கப்பட்டு உள்ளது. தனது கடை தொடர்பான விளம்பரங்களில் நடித்து வந்தார் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன். இதைத்தொடர்ந்து ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் ‘தி லெஜெண்ட்’ படத்தை தயாரித்து நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக, பாலிவுட் மாடல் ரித்திகா திவாரி நடிக்கிறார். மேலும், யோகி பாபு, மறைந்த நடிகர் விவேக் உள்ளிட்டோர் நடித்து உள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு பட்டுக்கோட்டைப் பிரபாகர் திரைக்கதை … Read more

ரூ.400 கோடியில் பாதாள சாக்கடை திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேக பாதை! சட்டசபையில் அமைச்சர் கே.என்.நேரு தகவல்..

சென்னை: ரூ.400 கோடியில் பாதாள சாக்கடை திட்டம், கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேக பாதை, தூய்மைப் பணியாளர்களுக்கு வங்கிக்கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டசபையில் அமைச்சர் கே.என்.நேரு அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் துறைவாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பல்வேறு திட்டம் குறித்த அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார். அப்போது தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும். தூய்மைப் பணியாளர்களுக்கு வங்கிக்கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். சென்னையில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும், … Read more

தமிழ்நாட்டில் மின்துறை சீர்திருத்தத்திற்காக ரூ.7,054 கோடி ஒதுக்கீடு! மத்திய அரசு தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் மின்துறை சீர்திருத்தத்திற்காக ரூ.7,054 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக முதலமைச்சர் முக ஸ்டாலின், டெல்லிக்கு பயணம் சென்றிருந்தார். அப்போது, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட அமைச்சர்களை சந்தித்து, தமிழகத்திற்கான நிலுவை தொகையை உடனடியாக விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில், தமிழக மின்துறை சீரமைப்பு பணிகளுக்காக ரூ.7,054 கோடி ஒதுக்கீடு செய்து மத்தியஅரசு … Read more

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் பணியில் நீடிக்க தகுதியில்லை! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் பணியில் நீடிக்க தகுதியில்லை, ஊதிய உயர்வு பெறவும் உரிமையில்லை.என சென்னை உயர்நீதிமன்றம் காட்டமாக தெரிவித்து உள்ளது. மத்தியஅரசு, கடந்த 2009ஆம் ஆண்டு கல்வி பெறும் உரிமைச் சட்டத்தை கொண்டு வந்தது. இந்தச் சட்டத்தின்படி ஆசிரியர்களாக நியமிக்கப்படுபவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என 2011ல் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, தகுதி தேர்வு நடத்தப் பட்டது. இதில், … Read more

“ரஜினி கேட்டார்!” சிட்தி விழாவில் தயாரிப்பாளர் கே. ராஜன்

சூர்யா பிலிம் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் சார்பாக திரு.மகேஷ்வரன் நந்தகோபால் அவர்கள் தயாரிப்பில் தமிழ் மற்றும் மலையாளத்தில் கிரைம் திரில்லராக உருவாகியிருக்கும் படம் ‘சிட்தி’ ( SIDDY ) இந்த படத்தை பயஸ் ராஜ் (Pious Raj) எழுதி இயக்கியுள்ளார். அஜி ஜான் கதாநாயகனாக நடித்துள்ளார். அக்ஷயா உதயகுமார் மற்றும் ஹரிதா கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள். சட்டக் கல்லூரியில் படிக்கும் மாணவன் ” சிட்தி ” தவிர்க்க முடியாத சூழ்நிலையில் கொலையாளியாக மாறுகிறார். அவர் ஏன் கொலையாளியாக மாறினார் … Read more

Mr. லோக்கல் விவகாரம் : சம்பளபாக்கி குறித்து மூன்றாண்டுகள் கழித்து வழக்கு தொடுத்தது ஏன் ? சிவகார்த்திகேயனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

2019 ம் ஆண்டு எம். ராஜேஷ் இயக்கத்தில் ஞானவேல்ராஜா தயாரித்து வெளியான படம் மிஸ்டர் லோக்கல். இந்தப் படத்தில் நடிப்பதற்காக சிவகார்த்திகேயனுக்கு ரூ. 15 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது. ரூ. 11 கோடி மட்டுமே சம்பளம் வழங்கிய நிலையில் தயாரிப்பு நிறுவனம் அதற்கான டி.டி.எஸ். தொகையை வருமான வரித்துறையில் செலுத்தவில்லை என்று கூறி சிவகார்த்திகேயன் தரப்பில் ஏற்கனவே வழக்கு தொடுக்கப்பட்டது. இந்நிலையில், தனக்கு வரவேண்டிய மீதம் 4 கோடி ரூபாய் சம்பள பாக்கியை வழங்க உத்தரவிடக் கோரி … Read more

பாண்டிச்சேரி முதல்வரால் தொடங்கப்பட்ட, ‘சூரியனும் சூரியகாந்தியும்’!

பார்த்திபன், தேவயானி நடிப்பில், ‘நினைக்காத நாளில்லை’, ‘தீக்குச்சி’ மற்றும் தெலுங்கில் ‘அக்கிரவ்வா’ ஆகிய படங்களை தொடர்ந்து, டி.டி.சினிமா ஸ்டுடியோ சார்பில் இயக்குனர் ஏ.எல்.ராஜா தயாரித்து இயக்கியுள்ள புதிய படம், ‘சூரியனும் சூரியகாந்தியும்’. முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவும் செய்கிறார். இணைத் தயாரிப்பு, டெய்லி குருஜி. அப்புக்குட்டி, ஶ்ரீ ஹரி, விக்ரம் சுந்தர் மூவரும் கதை நாயகர்களாக நடிக்கும் இப்படத்தில், ரிதி உமையாள் நாயகியாக தோன்றுகிறார். சந்தான பாரதி, செந்தில் நாதன், குட்டிப்புலி வில்லன் ராஜசிம்மன், மங்களநாத குருக்கள் உள்ளிட்டோர் … Read more