வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக எடுத்துக்கொள்ளலாம்! தலைமைச்செயலாளர் இறையன்பு

சென்னை: விவசாயிகள் வண்டல் மண்ணை இலவசமாக எடுக்கலாம் என மாவட்ட ஆட்சியர்களுக்கு, தலைமைச்செயலாளர் இறையன்பு கடிதம் எழுதி உள்ளார். பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பராமரிப்பில் உள்ள ஏரி, கால்வாய், நீா்த்தேக்கங்களில் இருந்து தூா்வாரும்போது எடுக்கப்படும் வண்டல் மண் மற்றும் களிமண்ணை விவசாயிகளும், மண்பாண்டத் தொழிலாளா்கள் மற்றும் பொது மக்களும் கட்டணமின்றி மாவட்ட ஆட்சியா் ஒப்புதலுடன் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கி ஏற்கனவே  அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தலைமைச் செயலாளர் வி.இறையன்பு  அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும்  … Read more

முல்லைபெரியாறு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம் – கேரள வழக்கறிஞரை வெளியேற நீதிபதிகள் உத்தரவு…

சென்னை: முல்லைபெரியாறு அணை விவகாரத்தில் இன்று உச்சநீதிமன்றத்தில் காரசார வாதங்கள் நடைபெற்றது. புதிய கட்டுவது தொடர்பாக பேச வேண்டாம் என நீதிபதிகள் அறிவுறுத்தினர். அப்போது, எல்லைமீறி பேசிய கேரள வழக்கறிஞர் நெடும்பாரா என்பவரை நீதிமன்றத்தைவிட்டு வெளியேற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு விவகாரத்தில், தமிழ்நாடு கேரளம் இடையே சர்ச்சை நீடித்து வருகிறது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் அமைத்துள்ள குழுவையும் கேரளா மதிப்பதில்லை. மேலும் தமிழக அரசுஅதிகாரிகள் அணையை ஆய்வு சென்றால், அவர்களையும் … Read more

அதிமுகவில் உள்கட்சி தேர்தலுக்கான தேதிகள் வெளியீடு!

சென்னை: அதிமுகவில் உட்கட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,  ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதி நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெறும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் அறிவித்து உள்ளனர். அதிமுகவின் உட்கட்சித் தேர்தலுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே முதல்கட்ட தேர்தல் நடைபெற்று முடிவடைந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதி நிர்வாகிகள் பொறுப்புக்கான இரண்டாம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 11 அன்றும், மூன்றாம் கட்டத் தேர்தல் … Read more

அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு செல்லும்! சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

சென்னை: அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு மருத்துவப் படிப்பில் அரசு வழங்கிய 7.5% உள் ஒதுக்கீடு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால், அவர்கள் மருத்துவ படிப்பில் சேர 7.5% இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதுபோல் தங்களது பள்ளிகளில் படிக்கும் மாணாக்கர்களுக்கும் சலுகை வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி நிர்வாகங்கள் வழக்கு தொடர்ந்தன. அவர்களது … Read more

தமிழ்நாட்டில் XE வகை கொரோனா கண்டறியப்படவில்லை – மாஸ்க் அணிவது நல்லது! ராதாகிருஷ்ணன்

சென்னை: தமிழ்நாட்டில் XE வகை கொரோனா கண்டறியப்படவில்லை  என்று கூறியுள்ள மாநில சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொதுஇடங்களில் மக்கள்  மாஸ்க் அணிவது நல்லது என வலியுறுத்தி உள்ளார். மும்பையில் எக்ஸ்இ என்ற புதிய வகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியானது. அதிவேகமாக பரவும் இந்த கொரோனா இந்தியா முழுவதும் பரவும் வாய்ப்பு இருப்பதாகவும் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களில் செய்திகள் பரவின. ஆனால், மத்தியஅரசு, அது தவறான தகவல், அதுபோல ஒரு கொரோனா இந்தியாவில் பரவவில்லை என்று … Read more

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை, இன்றுடன் நிறைவு செய்ய மத்திய அரசு திட்டம்

புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை, ஒருநாள் முன்னதாக இன்றுடன் நிறைவு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த ஜனவரி 31-ந் தேதி முதல் பிப்ரவரி 11-ந் தேதிவரை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி நடைபெற்றது. இதை தொடர்ந்து, கடந்த மார்ச் 14-ம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது பகுதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடர், நாளை முடிவடைவதாக இருந்தது. ஆனால், ஒருநாள் முன்னதாக, இன்று முடித்துக் கொள்ள மத்திய அரசு திட்டமீட்டுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து இரு … Read more

டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தீ விபத்து

புதுடெல்லி: டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுடெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இரவு 7 மணியளவில் திடீரென ஏற்பட்ட தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது எனவும் ஏசியில் மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது எனவும் இது முழுவதுமாக அணைக்கப்பட்டுள்ளது என டெல்லி தீயணைப்பு அதிகாரி பிரேம் லால் தெரிவித்துள்ளார்.

ஆந்திராவில் ஒட்டுமொத்த அமைச்சர்களும் இன்று ராஜினாமா

அமராவதி: ஆந்திராவில் ஒட்டுமொத்த அமைச்சர்களும் இன்று ராஜினாமா செய்ய உள்ளனர். ஆந்திராவில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இவர் ஆட்சி அமைத்து, அடுத்த மாதத்துடன் மூன்று ஆண்டுகள் நிறைவு பெற உள்ளன. இந்நிலையில், அமைச்சரவையை மாற்றியமைக்க, ஜெகன்மோகன் ரெட்டி முடிவு செய்துள்ளார். இதில், புதுமுகங்கள் பலருக்கு வாய்ப்பளிக்கவும், அவர் முடிவு செய்துள்ளார். ஐந்து துணை முதல்வர்கள் நியமிக்கப்படுவர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு வசதியாக, தற்போது அமைச்சர்களாக உள்ள அனைவரும், இன்று … Read more

தமிழ்நாட்டில் ஒமிக்ரான் XE வகை இதுவரை கண்டறியப்படவில்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாட்டில் ஒமிக்ரான் XE வகை இதுவரை கண்டறியப்படவில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சீனாவின் வுஹான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் பரவத் தொடங்கியது கொரோனா வைரஸ். அதன்பிறகு ஆல்பா, டெல்டா, ஒமிக்ரான் என பல்வேறு வகையில் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பினை ஏற்படுத்தி வந்தது. இந்தியா உள்பட பல்வேறு நாடுகளிலும் மூன்றாவது அலைக்குப் பிறகு கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ளதால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் இந்தியாவிலும் டெல்லி, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் முகக்கவசம் … Read more

இந்திய பொருளாதார வளர்ச்சி 2023ம் ஆண்டு 7.5 சதவீதமாக இருக்கும்! ஆசிய வளர்ச்சி வங்கி கணிப்பு

டெல்லி: இந்திய பொருளாதார வளர்ச்சி அடுத்த ஆண்டு  7.5 சதவீதமாக இருக்கும் என ஆசிய வளர்ச்சி வங்கி கணித்துள்ளது. ஆசிய வளர்ச்சி வங்கி தெற்காசிய நாடுகளில் பொருளாதார வளர்ச்சி குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்தும் கருத்து தெரிவித்து உள்ளது.  அதன்படி,  தெற்காசிய நாடுகளில் பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் 7 சதவீதமாக இருக்க வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது. இது அடுத்த ஆண்டு (2023) முதல் காலாண்டில் அது 7.4 சதவீதமாக உயரும் … Read more