திரைப்பட தயாரிப்பாளர் திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் உடன் நடிகர் விஜய் சந்திப்பு…

சென்னை: திரைப்பட தயாரிப்பாளர் இல்ல திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திய நிலையில், அங்கு வந்த நடிகர், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். சென்னை திருவான்மியூரில் ஏ.ஜி.எஸ் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான கல்பாத்தியின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. திரைப்பட தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம்  மகள் ஐஸ்வர்யா கல்பாத்தி மற்றும்  ராம் ரத்தன் ராய் மகன் ராகுல் ராய் ஆகியோர்  திருமண வரவேற்பு  இன்று பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த வரவேற்பு  நிகழ்ச்சியில் தமிழக … Read more

இந்தியாவில் இருந்து பெட்ரோல் மற்றும் மருந்து பொருட்கள் இலங்கைக்கு ஏற்றுமதி

இலங்கையில் மக்கள் பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் சூழலில் இந்தியாவில் இருந்து பெட்ரோலிய பொருட்களும் மருந்து பொருட்களும் வழங்கப்பட்டுள்ளதாக அர்ஜீனா ரனதுங்க கூறினார். பால் பொருட்கள், அரிசி, எல்.பி.ஜி. சிலிண்டர், பெட்ரோல் ஆகிய அன்றாட தேவைகளுக்காக மக்கள் போராடி வரும் சூழலில் அவர்களை ஆடம்பர வாழ்க்கைக்காக போராடுபவர்களைப் போல் ராஜபக்சே அரசு சித்தரிக்கிறது. உலகெங்கிலிலும் கொரோனா தொற்று பரவியபோதும் இங்கு மட்டுமே கொரோனாவால் பொருளாதாரம் சீரழிந்ததாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. நிர்வாக திறமையற்றவர்கள் அதிபர் பதவியை … Read more

பெட்ரோல் விலை உயர்வுக்கு பிரதமர் மோடிதான் காரணம்! முன்னாள் அதிமுக அமைச்சர் பரபரப்பு பேச்சு…

ஒட்டன்சத்திரம்: பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு பிரதமர் மோடிதான் காரணம் என முன்னாள் அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில்சொத்துவரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல்  சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் உள்பட கட்சி நிர்வாககிள் பலர் கலந்துகொண்டனர். சிறிது நேரம் மட்டுமே நடைபெற்ற இந்த போராட்டம் கடும் வெயில் காரணமாக பிசுபிசுத்து போனது. பின்னர் செய்தியாளர்களை … Read more

கோவையில் அமைக்கப்பட உள்ள மெட்ரோ ரயில் ஆய்வு அறிக்கை வெளியீடு…

கோவை: கோவையில் மெட்ரோ ரயில் அமைக்கப்படும் என அறிவித்துள்ள தமிழகஅரசு அதற்காக நடத்தப்பட்ட ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, மெட்ரோ ரயில் சேவை செயல்பாட்டுக்கு வரும்போது நாள் ஒன்றுக்கு 3.71 லட்சம் பேர் பயணம் செய்வார்கள் என்று தெரிவித்து உள்ளது. `கோவை மாவட்டத்தில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்’ என்று கடந்த 2011-ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. கடந்த சில ஆண்டுகளாக ஆய்வுப் பணிகள் நடந்துவந்த நிலையில், கோவை மெட்ரோ ரயிலுக்கான திட்ட அறிக்கை தயாராக … Read more

மத்திய பல்கலைக்கழகங்களில் அறிவிக்கப்பட்டுள்ள நுழைவுத் தேர்வை திரும்பப் பெறுக! பிரதமருக்கு முதல்வர் கடிதம்…

சென்னை: மத்திய பல்கலைக்கழகங்களில் அறிவிக்கப்பட்டுள்ள நுழைவுத்தேர்வை  (CUET) உடனே திரும்பப் பெற வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். மத்தியஅரசு, நடப்பாண்டு முதல் மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புக்கு நுழைவு தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என அறிவித்துள்ளது. மேலும், மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களிலும், நுழைவு தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. இதற்கு தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு … Read more

06/04/2022: தமிழ்நாட்டில் இன்று 30 பேருக்கு கொரோனா பாதிப்பு, 28 பேர் டிஸ்சார்ஜ்…

சென்னை: தமிழகத்தில் இன்று எந்தவித கொரோனா உயிரிழப்பின்றி,  30 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதுடன், 28 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 258 பேர் சிகிக்சையில் உள்ளனர். தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று இரவு 7மணி அளவில் வெளியிட்டுள்ள தகவலின்படி,  மாநிலம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் யாரும் உயிரிழக்கவில்லை. கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் எந்தவொரு கொரோனா உயிரிழப்பும் இல்லாதது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கடந்த 24 … Read more

பெட்ரோலிய பொருட்கள் உயர்வு குறித்து சுப்பிரமணியசாமியின் விமர்சனத்தை பிரதிபலிக்கும் கார்டூன்…

பெட்ரோலிய பொருட்கள் உயர்வு குறித்து சுப்பிரமணியசாமியின் விமர்சனத்தை பிரதிபலிக்கிறது  ஓவியர் பாரியின் கார்டூன். https://patrikai.com/wp-content/uploads/2022/04/Pari-Audio-2022-04-06-at-4.21.12-PM.ogg  

இந்திய பணக்காரர்களில் முதலிடத்திலும் உலக பட்டியலில் 10வது இடத்தையும் பிடித்துள்ளார் முகேஷ் அம்பானி! போர்ப்ஸ் தகவல்…

2022ம் ஆண்டுக்கான உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலை பிரபல ஆய்வு பத்திரிகையான போர்பஸ் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், உலகளவில் 10-வது இடத்தையும், இந்திய அளவில் முதலிடத்தையும் ரிலையன்ஸ் நிறுவனர் முகேஷ் அம்பானி பிடித்துள்ளார். இதுகுறித்து வெளியாகி உள்ள தகவலின்படி,  முகேஷ் அம்பானியின் சொத்து கடந்த நிதியாண்டு மேலும் 7 சதவீதம் அதிகரித்து இருப்பதாகவும், தற்போது, 9ஆயிரத்து 70 கோடி டாலருடன்  முதலிடத்தை பிடித்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவர் இந்திய அளவில் முதலிடத்தில் இருந்தாலும், உலக அளவில் 10வது … Read more

உலகிலேயே உயரமான முத்துமலை முருகனுக்கு ஹெலிகாப்டர் மலர்தூவ கோலாகலமாக நடைபெற்றது கும்பாபிஷேகம் – வீடியோ

சேலம்: உலகிலேயே உயரமான முத்துமலை முருகனுக்கு இன்று ஹெலிகாப்டர் மலர்தூவ கோலாகலமாக  கும்பாபிஷேகம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா என கோஷம் எழுப்ப 146 அடி கொண்ட அழகன் முருகனுக்கு இன்று குடமுழுக்கு விமரிசையாக நடைபெற்றது. 90 சிவாச்சாரிகளை கொண்டு கும்பாபிஷேகம் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள புத்திர கவுண்டம்பாளையம் மலைப்பகுதியில் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையையொட்டி, உலகிலேயே உயரமான முத்துமலை முருகன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. 146 உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த முருகன் சிலை … Read more

வாகன சோதனையின்போது உதவி ஆய்வாளரை இடித்து தள்ளிவிட்டு சென்ற ஆட்டோ ஓட்டுநர் கைது!

சென்னை: கிண்டி அருகே நந்தம்பாக்கம் பகுதியில், வாகன சோதனையின்போது காவல் உதவி ஆய்வாளரை இடித்துதள்ளிவிட்டு சென்ற ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். கிண்டி போரூர் இடையே உள்ள நந்தம்பாக்கத்தில் வாகனை சோதனை நடத்திக்கொண்டிருந்த காவல்துறையினர்மீது வேகமாக வந்த ஆட்டோ, அங்கு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் பொன்ராஜை இடித்து தள்ளிவிட்டு சென்றது. இதனால்  சப்இன்ஸ்பெக்டர் பொன்ராஜுக்கு உடல் தலை என பல இடங்களில் காயம் ஏற்பட்டது. உடடினயாக அவரை மருத்துவமனைக்கு தூக்கிச்சென்று சக காவலர்கள் சிகிச்சை அளித்தனர். பின்னர், … Read more