இந்த மாத இறுதியில் இந்தியா வருகிறார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்…

டெல்லி: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்த மாத இறுதியில் இந்தியா வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு இரண்டு முறை அவரது இந்திய பயணம் கொரோனா தொற்றால் ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அவர் வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்தியா-இங்கிலாந்து இடையேயான  வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளின் பின்னணியில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தி, இம்மாத இறுதியில் இந்தியாவிற்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ … Read more

ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியின்போது முதுமக்கள் தாழியில் நெல் உமிகள் கண்டுபிடிப்பு!

நெல்லை: நெல்லை மாவட்டம் ஆதிச்சநல்லூர் பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணியின்போது, நெல் உமிகள் கொண்ட சங்க காலத்தைச் சேர்ந்த முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து  தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஆதிச்சநல்லூரில் ஏற்கெனவே கடந்த 1876, 1902, 1905, 2004, 2005-ஆம் ஆண்டுகளில் வெளிநாட்டினர் மற்றும் இந்தியத் தொல்லியல் ஆய்வகம் சார்பாக 5 கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் சூன் 2020 முதல் மேற்கொள்ளப்படும் 6-ஆம் கட்ட அகழாய்வுப் … Read more

சொத்து வரி உயர்வு தவிர்க்க முடியாதது! சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

சென்னை: தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள வருவாய் பற்றாக்குறையால் சொத்து வரி உயர்வு தவிர்க்க முடியாதது என சட்டப் பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார். சட்டப்பேரவை இன்று கூடியதும், கேள்வி நேரத்தைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் 100 விதியின்கீழ் தமிழக முதலீடு குறித்த அறிக்கை வாசித்தார். அதைத் தொடர்ந்து எதிர்க்கட்சியினர் சொத்து வரி உயர்வு குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  சொத்து வரி உயர்வை மனமுவந்து செய்யவில்லை என்றும் உள்ளாட்சி அமைப்புகள் … Read more

10 மாதங்களில் 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் – உலக முதலீட்டாளர்கள் மாநாடு! சட்டப்பேரவையில் முதல்வர் மு.க ஸ்டாலின் தகவல்

சென்னை:  திமுக ஆட்சிக்கு வந்த 10 மாதங்களில் 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன என்றும் உலக முதலீட்டாளார் மாநாடு தமிழ்நாட்டில் நடத்தப்படும் என்றும் சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின் கூறினார். தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தமிழகத்தில் தொழில் முதலீடுகள் குறித்து விதி எண் 110-கீழ் முதலமைச்சர் அறிக்கை வாசித்தார். அப்போது,  துபாய் பயணத்தில் ரூ.6,100 கோடிக்கு புரிந்துணர்வு  ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்றும்,  கடந்த  10 மாதங்களில் … Read more

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கியது! உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில்…

சென்னை: பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. காலையில் வழக்கமாக நடைபெறும் கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் தெரிவித்து வருகின்றனர். 3 லட்சம் பட்டாக்கள் வழங்கப்பட உள்ளதாகவும், வோளண்துறையில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர், மார்ச் மாதம் 18ம் தேதி தொடங்கி 24ம் தேதியுடன் முடிவடைந்தது. 5 நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டத்தொடரில் 2022-23ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை, … Read more

எஸ்.பி. அலுவலகத்திலேயே தொழிலதிபரிம் ரூ.5 லட்சம் வாங்கிய நாகர்கோவில் டிஎஸ்பி! அதிரடி கைது…

நாகர்கோவில்: எஸ்.பி. அலுவலகத்திலேயே தொழிலதிபரிம் ரூ.5 லட்சம் வாங்கிய நாகர்கோவல் டிஎஸ்பி அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் லஞ்சம், ஊழல், பெண்கள் மீதான வன்கொடுமைகள், போதைப்பொருள் உபயோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் நடவடிக்கை களை தீவிரப்படுத்தி உள்ளதாக உள்ள காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு கூறியிருந்தாலும், காவல்துறையிலேயே லஞ்ச லாவணம் தலைவிரித்தாடுவது பல்வேறு சம்பவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. நாகர்கோவிலில் ஜவுளிக்கடைகள் நடத்தும் தொழிலதிபர் ஒருவரிடம் நிலப்பிரச்சினை காரணமாக ரூ.5 லட்சம் லஞ்சம் லஞ்சப்பணத்தை … Read more

அம்பேத்கர் பிறந்ததினம் -தமிழ்ப்புத்தாண்டு: ஏப்ரல் 14ம் தேதி பொது விடுமுறை என மத்திய அரசு அறிவிப்பு!

டெல்லி: அம்பேர்கர் பிறந்ததினம் மற்றும் தமிழ்ப்புத்தாண்டையொட்டி, நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி பொது விடுமுறை என மத்திய அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 14ம் தேதி இந்தி அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் அரசியல் சாசனம் உருவாக காரணகர்த்தாக இருந்தவர்களில் இவரும் ஒருவர். நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர் அண்ணல் அம்பேத்கர்.  உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்குரியவர்,  பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை … Read more

உட்கட்சி பூசல் காரணமாக கட்சி நிர்வாகிஉட்கட்சி பூசல் காரணமாக கட்சி நிர்வாகியை தாக்கிய பாஜக பிரமுகர்கள் மீது வழக்குப்பதிவுயை தாக்கிய பாஜக பிரமுகர்கள் 4 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை: கோவையில் உட்கட்சி பூசல் காரணமாக கட்சி நிர்வாகியை தாக்கிய பாஜக பிரமுகர்கள் 4 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவையை சேர்ந்த பாஜக நெசவாளர் பிரிவு செயலாளர் ஜெயக்குமார். உட்கட்சி பூசல் காரணமாக கட்சி காரணமாக இவரை பாஜக பிரமுகர்கள் சிலர் தாக்கியுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து தாக்கிய பாஜக பிரமுகர்கள் 4 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

பெட்ரோல், டீசல் விலை தலா 76 காசுகள் அதிகரிப்பு

சென்னை: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தலா 76 காசுகள் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. அதன்படி பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து 110 ரூபாய் 85 காசுகளுக்கும், டீசல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து 100 ரூபாய் 94 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டுகிறது.

ஐபிஎல் 2022: ராஜஸ்தான் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி

மும்பை: ஐபிஎல் 2022 தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. மும்பையில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. 170 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய பெங்களூரு அணி 19.1 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் … Read more