கருணாநிதி பிறந்தநாளன்று சிறந்த இதழியலாளருக்கு ரூ.5 லட்சம் பரிசுடன் “கலைஞர் எழுதுகோல் விருது”! தமிழகஅரசு

சென்னை: கலைஞர் பிறந்த நாளான ஜுன் 3ந்தேதி அன்று, ஒரு சிறந்த இதழியலாளருக்கு “கலைஞர் எழுதுகோல் விருது” ரூ.5 லட்சம் பரிசு பணத்துடன் வழங்கி கவுரவிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. திமுக பதவி ஏற்றதும் கடந்த 2021ம் ஆண்டு மானிய கோரிக்கை விவாதத்தின்போது அமைச்சர் சாமிநாதன், கலைஞர் எழுதுகோல் விருது, சமூக ஊடகப்பிரிவு, பத்திரிகையாளர்களுக்கு நலத்திட்டங்கள் என பல திட்டங்களை அறிவித்தார். அதன்படி இந்த ஆண்டு கலைஞர் எழுதுகோல் விருது, கலைஞர் கருணாநிதி பிறந்தநாளான … Read more

தமிழ் இனத்தை அழித்த இலங்கை அரசின் இன்றைய நிலை! ஆடியோ

தமிழ் இனத்தை அழித்த இலங்கை அரசு இன்று பொருளாதார நெருக்கடியில் சிக்கி தத்தளிக்கிறது. அன்று கொத்து கொத்தாக மக்களை கொல்ல உலக நாடுகளிடம் போர் தளவாடங்களை வாங்கி குவித்த இலங்கை இன்று போருளாதார நெருக்கடியில் சிக்கி தத்தளிக்கிறது. இலங்கையே இன்று திவாலாகி உள்ளது. இலங்கையின் தற்போதைய நிலவரத்தையே கார்டூன் விமர்சித்துள்ளது. https://patrikai.com/wp-content/uploads/2022/04/Pari-cartoon-Audio-2022-04-05-at-8.35.18-PM.ogg

கூட்டுறவு சங்கங்களில் குற்றச் செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை! அமைச்சர் எச்சரிக்கை.

சென்னை: கூட்டுறவு சங்கங்களில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பெரியசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் ரேசன் கடைகளில் ஆய்வு செய்த அமைச்சர், பின்னர் செய்தியளார்களை சந்தித்தார். அப்போது,  அரிசி கடத்தல், ரேஷன் பணியாளர்களை மிரட்டி பணம் வசூலித்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதுபோல குற்றங்களில் ஈடுபடும் கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளதாக கூறியவர், இது தொடர்பான புகார் … Read more

சென்னையில் நாளை (06/04/2022) மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் விவரம்

சென்னை : பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை சென்னை மாகரின் முக்கிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்து உள்ளது. அதன்படி, காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது எனவும் பொதுமக்கள் தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும் என மின்சார வாரியத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை மின்வாரியம் வெளியிட்டுள்ள தகவலில்,  நாளை முக்கிய பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் இதன் காரணமாக … Read more

தமிழக வெள்ள நிவாரணத்திற்காக ரூ.566.36 கோடி வழங்கப்பட்டுள்ளது! மத்திய அரசு

டெல்லி: தமிழக வெள்ள நிவாரணத்திற்காக ரூ.566.36 கோடி வழங்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்து உள்ளது. கடந்த வாரம் டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலின் பரிதமர் மோடியை சந்தித்து பேசினார்,. அப்போது தமிழகத்தின் மிக முக்கியமான 14 கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் நான் வழங்கினேன். அந்தக் கோரிக்கைகளில் இருக்கக்கூடிய முக்கியத்துவத்தை அவரிடம் நான் தெளிவாக எடுத்துரைத்ததாகவும் கூறியிருந்தார். அந்த கோரிக்கை மனுவில் வெள்ளநிவாரணம், ஜிஎஸ்டி இழப்பீடு உள்பட பல்வேறு கோரிக்கைகள் இடம்பெற்றிருந்தன. இதுதொடர்பாக மக்களைவில் இன்று … Read more

குழந்தையின் முதுகில் முகவரியை எழுதும் உக்ரைன் தாய்மார்கள்..! இதயங்களை உடைக்கும் சோகம்….!

கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா  தொடுத்துள்ள போர் தொடர்ந்து வரும் நிலையில், அங்குள்ள தாய் ஒருவர் தனது குழந்தையின் முதுகில், தங்களது முகவரியை எழுதியுள்ள காட்சி தொடர்பான புகைப்படம் வைரலாகி வருகிறது. நெஞ்சை உடைக்கும் இந்த புகைப்படம், காண்போரின் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது. நேட்டோ விவகாரம் காரணமாக, உக்ரைன் மீது பிப்ரவரி 24ந்தேதி அன்று போர் தாக்குதலை தொடங்கிய ரஷ்யா தொடர்ந்து 40 நாட்களை கடந்தும், தனது தாக்குதலை நிறுத்தாமல் தொடர்கிறது. பல மாநிலங்களை குண்டு மழை … Read more

இரவு பணியில் விழிப்புடன் செயல்பட்ட காவலர்களுக்கு சென்னை காவல் ஆணையாளர் நேரில் பாராட்டு!

சென்னை: இரவு பணியில் விழிப்புடன் செயல்பட்ட காவலர்களுக்கு சென்னை காவல் ஆணையாளர் நேரில் வாழ்த்து தெரிவித்து பாராட்டியுள்ளார்.  இரவு பணியின்போது விழிப்புடன் செயல்பட்டு குற்றவாளிகளை பிடித்த காவல் அதிகாரிகள் மற்றும் சாலையில் கிடந்த செல்போனை காவல் அதிகாரியிடம் ஒப்படைத்த பள்ளி மாணவர் ஆகியோரை நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். இதுகுறித்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, குமரன்நகர் பகுதியில் கத்தியுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பழைய குற்றவாளிகளை பிடித்த காவல்துறையினர், 1 இருசக்கர வாகனம் … Read more

ராஷ்மிகா மந்தனா பிறந்தநாள் பரிசு… க்ரஷ் ஆகிப்போன விஜய் ரசிகர்கள்..

பீஸ்ட் படத்திற்குப் பிறகு விஜய் நடிக்க இருக்கும் ‘தளபதி 66’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இன்று பிறந்த நாள் கொண்டாடும் ராஷ்மிகா மந்தனாவுக்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் விஜயுடன் நடிக்க தேர்வான அறிவிப்பு அவருக்கு பிறந்தநாள் பரிசாக அமைந்துள்ளது. Wishing the talented and gorgeous @iamRashmika a very Happy Birthday ! Welcome onboard #Thalapathy66@actorvijay @directorvamshi#RashmikaJoinsThalapathy66 pic.twitter.com/zy2DeieUFe — Sri Venkateswara Creations … Read more

தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் தற்போது உயர வாய்ப்பில்லை! அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர்

சென்னை: டீசல் விலை உயர்வால் தமிழ்நாட்டில்  பேருந்து கட்டணம் தற்போது உயர வாய்ப்பில்லை என்று அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர் கூறினார். நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை செஞ்சுரியை தாண்டி உயர்ந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். விலைவாசிகளும் தாறுமாறாக உயரத்தெடங்கி உளளதல், சாமனிய மக்கள் அவஸ்தபட்டு வருகின்றனர். இதற்கிடையில் தமிழகஅரசு சொத்துவரியை பல மடங்கு உயர்த்தி உள்ளது. மேலும், காலநிலைக்கு தகுந்தவாறு மின்கட்டணம், பேருந்து கட்டணங்கள் உயர்வது வாடிக்கையானது என அமைச்சர் நேரு … Read more

என்எஸ்சி போஸ் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது தொடர்பான அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: சென்னை என்எஸ்சி போஸ் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற ஏற்கனவே சென்னை  உயர் நீதிமன்றம் உத்தரவின்படி, இதுவரை  எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்த அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை பாரிமுனை அருகே உள்ள பூக்கடை என்எஸ்சி போஸ் சாலை, நடைபாதை வியாபாரிகளால் முழுமையாக ஆக்கிமிக்கப்பட்டுள்ளது. இதனால், வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இதையடுத்து,  மறைந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை … Read more