தமிழகத்தின் புதிய கல்விக்கொள்கை வடிவமைக்க முன்னாள் நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைப்பு!

சென்னை: தமிழகத்தின் புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்க நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் நடிகர் சூர்யா குடும்பத்தினரின் அகரம் அறக்கட்டளையும் இடம்பெற்றுள்ளது. மத்தியஅரசு தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்தி உள்ளது. இதற்கு தமிழகஅரசு எதிர்ப்பு தெரிவித்து, அதை அமல்படுத்த மறுத்து வரும் நிலையில், புதிதாக கல்விக்கொள்கையை உருவாக்க முன்வந்துள்ளது. கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட (21-22) இடைக்கால பட்ஜெட்டில், தமிழகத்துக்கென மாநிலக் கல்விக் கொள்கை ஒன்றை உருவாக்க, கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்களைக் கொண்ட உயர்மட்டக் குழு … Read more

மின்னணு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு ஏற்ற இடம் சென்னை… எப்.டி.ஐ. ஆய்வில் தகவல்…

மின்னணு துறையில் வெளிநாட்டு நேரடி முதலீடு செய்ய சிறந்த இடங்கள் குறித்து எப்.டி.ஐ. பென்ச்மார்க் நிறுவனம் ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் முதல் 20 இடங்களில் துருக்கியின் இஸ்தான்புல் தவிர மற்ற அனைத்து இடங்களும் ஆசியாவில் உள்ளது குறிப்பிடத்தக்கது. தென் கொரியாவின் சியோல், ஜப்பானின் டோக்கியோ, சீனாவின் ஷென்ஜென், குவாங்ஹு, ஆகிய இடங்கள் இடம்பெற்றுள்ளது. 50 பேர் கொண்ட எலக்ட்ரானிக்ஸ் ஆர் & டி மையத்தை நிர்வகிக்க உலகின் 100 நகரங்களில் ஆகும் செலவினங்கள் குறித்த ஆய்வின் … Read more

விஜயின் பீஸ்ட் ரிலீசுக்கு தடை…

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் பீஸ்ட் திரைப்படம் இந்த மாதம் 13 ம் தேதி உலகமெங்கும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. ரிலீசுக்கு இன்னும் ஒருவாரமே இருக்கும் நிலையில், இந்தப் படத்தில் அதிகப்படியான வன்முறை காட்சிகள் இருப்பதாக கூறி திரையிட தடை விதித்திருக்கிறது.   இஸ்லாமிய தீவிரவாதிகள் தொடர்பான காட்சிகள் அதிகம் இடம்பெற்றிருப்பதால் குவைத் நாட்டில் இந்தப் படத்தை திரையிடக் கூடாது என்று அந்நாட்டு அரசு தடை விதித்திருக்கிறது. ஏற்கனவே துல்கர் சல்மான் நடித்த குரூப் மற்றும் … Read more

இந்த ஆட்சியில் நிம்மதியாக இருக்கிறோம் என்று மக்கள் கூறுகிறார்கள்! விழுப்புரம் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்…

விழுப்புரம்: இந்த ஆட்சியில் நிம்மதியாக இருக்கிறோம் என்று மக்கள் கூறினார்கள் என விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற நலதிட்டங்கள் வழங்கும்  நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினார். பெரியார் கண்ட கனவுப்படி தமிழகம் எங்கும் சமத்துவபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்தார். விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே கொமுவாரி பகுதியில் ரூ.2கோடியே 88 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 100 பெரியார் நினைவு சமத்துவ புர வீடுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் நேரில் சென்று திறந்து வைத்தார். … Read more

பாரத_கவுரவ_ரெயில் திட்டம்: கோவை-ஷீரடி இடையே முதல் தனியார் ரெயிலுக்கு மத்தியஅரசு அனுமதி…

கோவை: பாரத_கவுரவ_ரெயில் திட்டத்தின்படி,  கோவை-ஷீரடி இடையே முதல் தனியார் ரெயிலுக்கு மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ஐஆர்சிடிசி ராமாயாணா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கி வரும் நிலையில், தற்போது தெற்கு ரயில்வேயில் இருந்து, முதல் ரயிலாக கோவை ஷீரடி ரயில் சேவை தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது. இந்திய ரயில்வேயின் முதல் பாரத் கவுரவ் ரயில், தெற்கு ரயில்வேயின் கோயம்புத்தூர் – ஷீரடி பிரிவில் இயக்கப்படுகிறது. இந்த  கோயம்புத்தூர்-ஷீரடி ரயில் சேவை பிரிவு மே … Read more

2ஆண்டுகளுக்கு பிறகு ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ மதுரை சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது – வீடியோ…

மதுரை: 2 ஆண்டுகளுக்கு பிறகு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புடன் மதுரை சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக இன்று காலை தொடங்கியது. சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. உலகப்புகழ்பெற்றது மதுரை மீனாட்சி அம்மன் கோவில். இங்கு நடைபெறும் 12நாட்கள் சித்திரைப்பெருவிழா பிரசித்தி பெற்றது. இந்த விழாவைக் காண இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையில் குவிவார்கள். கொரோனா காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக பக்தர்களுக்கு அனுமதியின்றி, கோவில் வளாகத்திற்குள்ளேயே எளிமையா நடைபெற்று வந்த நிலையில், … Read more

விழுப்புரத்தில் சமத்துவபுரத்தை திறந்து வைத்த முதல்வர் ரூ.42 கோடி மதிப்பு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்…

விழுப்புரம்: விழுப்புரத்தில் இன்று காலை சமத்துவபுரத்தை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின், தொடர்ந்து அம்மாவட்டத்தில்  ரூ.42 கோடி மதிப்பிலான நலத்திட் உதவிகளை வழங்கி சிறப்பித்தார். விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் கொழுவாரி ஊராட்சி பகுதியில் பெரியார் நினைவு சமத்துவபுரம் வீடுகள் 100 கட்டப்பட்டுள்ளது. இந்த வீடுகளை திறந்து வைப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை புதுச்சேரி சென்ற முதலமைச்சர் அங்கிருந்து, இன்று காலை 10 மணிக்கு விழுப்புரம் வந்தார். தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டம் கொழுவாரி ஊராட்சி பகுதியில்  … Read more

தமிழ்நாட்டில் சதம்அடித்தது டீசல் விலை! இன்று மேலும் 76 காசுகள் உயர்வு…

சென்னை:  தமிழ்நாட்டில்  பெட்ரோல், டீசல் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாயையும், டீசல் விலை 100 ரூபாயையும் கடந்து சதம் அடித்துள்ளது. இதனால்  வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால்  விலைவாசிகளும் கடுமையாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. இன்றைய நிலவரப்படி ஒரு … Read more

பெரியகுளம் குளோரைட் தொழிற்சாலையில் தீ விபத்து; 4,000 டன் மூலப்பொருட்கள் சேதம்

தேனி: பெரியகுளம் அருகே முருகமலை பகுதியில் குளோரைட் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த 10 மணி நேரமாக தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த தீ விபத்து குறித்து தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், பெரியகுளம் அருகே முருகமலை பகுதியில் குளோரைட் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்றும், தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையின் தீயை அணைக்கும் பணியை தொடர்ந்து வருகின்றனர். இந்த தீ … Read more

சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்

மதுரை: சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 12 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. சித்திரை திருவிழாவை முன்னிட்டு அம்மன் சன்னதியில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கோலம் இடப்பட்டுள்ளது. காலை 10.35 மணிக்கு மேல் 10.54 மணிக்குள் மிதுன லக்கனத்தில் சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது. விழாவில் சிகர நிகழ்ச்சியாக தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14-ந் தேதி மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. மறுநாள் 15-ந் தேதி மாசி வீதிகளில் தேரோட்டம் … Read more