பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க உ.பி.யில் மீண்டும் ரோமியோ எதிர்ப்பு படை!

லக்னோ: உத்தர பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க, ரோமியோ எதிர்ப்புப் படை மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. யோகி தலைமையில் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்துள்ள நிலையில், மீண்டும் ரோமியோ எதிர்ப்பு படை செயல்பாடுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடைபெற்று முடிந்த உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில், பாஜக அமோக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. முதல்வராக, யோகி ஆதித்யநாத் மீண்டும் பதவி ஏற்றுள்ளார். இதையடுத்து, கடந்த ஆட்சியின்போது உருவாக்கப்பட்ட, பெண்களுக்கு எதிரான குற்றங்களைச் தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட ரோமியோ … Read more

ராகுல் காந்தியின் கொள்கையால் கவரப்பட்ட 78 வயது மூதாட்டி தனது சொத்து முழுவதையும் ராகுல் காந்தி பெயருக்கு எழுதினார்…

உத்தரகாண்ட் மாநிலம் தேராதூனைச் சேர்ந்தவர் புஷ்பா முஞ்சியால், 78 வயதாகும் இவர் 15 சவரன் தங்கம் மற்றும் 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெயரில் எழுதி வைத்துள்ளார். ராகுல் காந்தியின் கொள்கை மற்றும் கோட்பாடுகள் நாட்டிற்கு மிகவும் அவசியம் என்றும் அதன் காரணமாக தனது சொத்துக்களை ராகுல் காந்தி பெயரில் உயில் எழுதி உள்ளதாகவும் கூறினார். உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் பிரிதம் சிங் முன்னிலையில் உயில் … Read more

வன்னியர் இடஒதுக்கீடு விஷயத்தில் முதல்வர் ஸ்டாலினை பாராட்டிய பாமக தலைவர் – ஆடியோ

வன்னியர் இடஒதுக்கீடு விஷயத்தில் முதல்வர் ஸ்டாலினை பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் பாராட்டியுள்ளார். வன்னியர் இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை உச்சநீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. இதையடுத்து, மீண்டும் திருத்தங்களுடன் வன்னியர் இடஒதுக்கீடு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், பாமக பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்ட பாமக தலைவர் ராமதாஸ், தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ள திமுக நிச்சயம் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கும் என முதல்வர் ஸ்டாலினை பாராட்டி பேசியுள்ளார். https://patrikai.com/wp-content/uploads/2022/04/Paari-cartoon-Audio-2022-04-04-at-8.24.47-PM.ogg

மாணவர் சேர்க்கைக்கு லஞ்சம் வாங்கிய பள்ளி முதல்வருக்கு 5 ஆண்டு சிறை

சென்னை: பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு ரூ.1.5 லட்சம் பெற்ற வழக்கில் கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது சென்னை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சென்னையை அடுத்த நெற்குன்றம் கிருஷ்ணாநகரைச் சேர்ந்த ராஜேந்திரன், கடந்த 2018ம் ஆண்டு தனது மகனை சென்னை அசோக்நகரில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் முதலாம் வகுப்பில் சேர்ப்பதற்காக விண்ணப்பித்துள்ளார். அந்த சிறுவனை பள்ளியில் சேர்க்க பள்ளியின் முதல்வராக இருந்த ஆனந்தன் என்பவர் ஒன்றரை லட்சம் … Read more

நாளை காலை கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்

கொழும்பு: கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாளை காலை 10 மணிக்கு இலங்கை நாடாளுமன்றம் கூடுகிறது. கடும் பொருளாதார நெருக்கடி நிலவுவதால், அதிபர், பிரதமருக்கு எதிராக இலங்கை முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. பொருளாதார பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பத் திட்டமிட்டுள்ளன. இலங்கை அரசிலிருந்து விலகுவதென இலங்கை சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அதேவேளையில், லசந்த அலகியவன்ன, துமிந்த … Read more

ஐபிஎல் 2022: ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி வெற்றி

மும்பை: ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய லக்னோ அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது. இந்த அணியில் கே.எல்.ராகுல் அதிகபட்சமாக 68 ரன்களும், தீபக் ஹோடா 51 ரன்களும் எடுத்தனர். லக்னோ அணி பந்து வீச்சாளர்களில் வாஷிங்டன் சுந்தர், செப்பர்ட் நடராஜன் ஆகியோர் தலா … Read more

தமிழகத்தில் பள்ளி நேரத்தை மாற்றியமைக்க கோரிக்கை

சென்னை: தமிழகத்தில் வெயில் காலம் தொடங்கியுள்ள நிலையில் பள்ளிகளின் நேரத்தை மாற்றியமைக்க வேண்டுமென முதல்வரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி வீசி வருகிறது. வெயிலின் தாக்கத்தால் வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். வழக்கமாக மே மாதத்தில் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு விடும் நிலையில் இந்த ஆண்டில் மே மாதத்தில்தான் தேர்வுகள் நடைபெற உள்ளன. ஆனால் வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பள்ளி மாணவர்கள் … Read more

கடந்த நிதி ஆண்டில் ஏற்றுமதி வருவாய் 41,800 கோடி டாலரை எட்டியுள்ளது! பியூஷ் கோயல்

டெல்லி: கடந்த நிதி ஆண்டில் (2021-22) இந்தியாவின் ஏற்றுமதி 41,800 கோடி டாலரை (ரூ.31.76 லட்சம் கோடி) எட்டியுள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். கடந்த ஆண்டின் ஏற்றுமதி குறித்து மத்திய வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கடந்த நிதி (2021-22) ஆண்டில் ஏற்றுமதி வருவாய் 41,800 கோடி டாலரை எட்டி இருப்பதாகவும், இது  முந்தைய நிதியாண்டை விட 40 சதவீதம் அதிகம் என்றவர்,  கொரோனா … Read more

விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கு: திமுக உறுப்பினர்கள் 2 பேர் உள்பட 4 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்…

விருதுநகர்: 22வயது பட்டியலின இளம்பெண்ணை காதலிப்பதாக கூறி ஏமாற்றி, அதை வீடியோ எடுத்து மிரட்டி பல மாதங்களாக வன்புணர்வு செய்து வந்த திமுக நிர்வாகிகள் 2 பேர், 4 சிறுவர்கள்  உள்பட 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில்,  திமுக நிர்வாகி உள்பட  4 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்றக்காவல் வழங்கப்பட்டுள்ளது. விருதுநகரில் தனியார் ஆடை  தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த  22 வயது  இளம் பெண் ஒருவரை,  திமுக நிர்வாகி ஹரிஹரன் என்பவர் காதலிப்பதாக கூறி … Read more

நரிக்குறவர், இருளர் உள்பட விளிம்பு நிலை மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா! ஸ்டாலின் வழங்கினார்

சென்னை:  விளிம்பு நிலையில் உள்ள 57,978 நரிக்குறவர் மற்றும் இருளர் இன மக்களுக்கும், 2,35,890 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மற்றும் 41,573 பிற்படுத்தப்பட்டோர் மக்களுக்கும் இணையவழி இலவச பட்டாக்களை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில் பட்டாக்களை வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (4.4.2022) தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், விளிம்பு நிலையில் உள்ள 57,978 … Read more