இந்து சமய அறநிலையத்துறை புதிய வாகனங்கள் – அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை புதிய வாகனங்கள் மற்றும் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியை, முதலவர் ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற விழாவில்,  இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களுக்கு ரூ 5.08 கோடி செலவில் 69 புதிய வாகனங்களை தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் வழங்கினார். தொடர்ந்து,  அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி வளாகத்தில் ரூ.8.74 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இரண்டு புதிய கட்டடங்கள் திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து நடைபெற்ற விழாவில், சென்னை,ராஜா அண்ணாமலைபுரம், அண்ணா … Read more

திமுக பிரமுகர் சவுந்தராஜன் கொலை வழக்கில் 5 பேர் நீதிமன்றத்தில் சரண்…

சென்னை: சென்னை பாரிமுனையில் திமுக பிரமுகர் சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர். தண்ணீர் பந்தல் அமைப்பது தொடர்பாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் கொலையில் முடிந்துள்ளது. சென்னை பாரிமுனையில் திமுக பிரமுகர் சௌந்தரராஜன் வெட்டி கொலை செய்யப்பட்டார். பட்டப்பகலில் நடைபெற்ற சம்பவவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலை செய்யப்பட்ட சவுந்தரராஜன் சென்னை வியாசர்பாடியில் 59-வது வட்ட கழக செயலாளராக இருந்தவர் என்பது தெரிய வந்தது. இவர்  பிராட்வே பேருந்து … Read more

இலவச திட்டங்களால் இந்தியாவிலும் பொருளாதார நெருக்கடி ஏற்படும்! பிரதமர் மோடியிடம் அதிகாரிகள் எச்சரிக்கை…

டெல்லி: இந்தியாவில் அதிகரிக்கப்பட்டு வரும், இலவச திட்டங்களால், இலங்கையைப் போல, இந்தியாவிலும் பொருளாதார நெருக்கடி ஏற்படும்  என பிரதமர் மோடியிடம், அதிகாரிகள்  எச்சரிக்கை விடுத்துள்ளனர். மத்திய அரசின் பல்வேறு துறை செயலர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். சுமார் 4மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பிரதமரின் முதன்மை செயலர் பி.கே.மிஸ்ரா, அமைச்சரவை செயலர் ராஜிவ் கவுபா உள்பட முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனை Tட்டத்தில், … Read more

‘காவல் உதவி’ புதிய செயலி: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்…

சென்னை: தமிழ்நாடு காவல்துறையால் உருவாக்கப்பட்ட ‘காவல் உதவி’ புதிய செயலி பயன்பாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் உயர் அதிகாரிகள் முன்னிலையில், இந்த விழா நடைபெற்றது. இதுதொடர்பாக தமிழகஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காவல்துறை என்பது குற்றங்களைத் தடுக்கும் துறையாகவும், தண்டனை பெற்றுத்தரும் துறையாகவும் மட்டும் அல்லாமல், குற்றங்கள் நடக்காத சூழ்நிலையை உருவாக்கும் துறையாகச் செயல்பட வேண்டும் என்ற முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார். அமைதியைப் பேணிப் … Read more

விலை கடும் வீழ்ச்சி: தக்காளியை நசுக்கியும், சாலையோரங்களில் கொட்டியும் விவசாயிகள் ரத்தக்கண்ணீர்…

தருமபுரி: உணவுப்பொருட்களில் முக்கியமானதாக விளங்கும் தக்காளி வீலை கடும் வீழ்ச்சி காரணமாக, அதை பல மாதங்கள் பாதுகாத்து விளைவித்த விவசாயிகள் கடும் வேதனைக்கு ஆளாகி உள்ளனர். பழுத்த தக்காளியை பறிக்காமல் அப்படியே செடியில் காய விட்டும், கீழே விழுந்த தக்காளிப்பழங்களையும்,  நசுக்கியும், சாலையோரங்களில் கொட்டியும், கால்நடைகள் மேயவும் விட்டு விவசாயிகள் ரத்தக்கண்ணீர் வடிக்கின்றனர்.  இதை பார்ப்போர் கண்களிலும்  கண்ணீர் வரவழைக்கிறது. தமிழ்நாட்டில், தக்காளி அதிகம் விளைச்சல் செய்யப்படும் மாவட்டங்களில் தருமபுரி மாவட்டமே முதலிடம் வகிக்கிறது. இந்த மாவட்டத்தில் … Read more

சொத்துவரியை தொடர்ந்து வாகனப்பதிவுக் கட்டணத்தை பல மடங்கு உயர்தியது தமிழகஅரசு…

சென்னை: தமிழ்நாட்டில் சொத்துவரி பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அதைத்  தொடர்ந்து வாகனப்பதிவுக் கட்டணத்தை பல மடங்கு உயர்தி தமிழகஅரசு அறிவித்து உள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு ஏப்ரல் 1ந்தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. தமிழகஅரசு ஏப்ரல் 1ந்தேதி முதல் சொத்து வரியை பல மடங்கு உயர்த்தி உள்ளது. குறைந்த பட்சம்  25% முதல் 150% வரை உயர்த்தப்பட்டுள்ளது மக்களிடையே அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. சொத்து வரி உயர்வை திரும்ப பெற வேண்டும் என … Read more

திமுக கவன ஈர்ப்பு நோட்டீஸ் – பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இன்றைய மக்களவை அமர்வு

டெல்லி: தமிழகஅரசுக்கு எதிராக செயல்படும் ஆளுநர்ஆர்.என்.ரவியை  திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி பாராளுமன்றத்தில் திமுக கவன ஈர்ப்பு நோட்டீஸ் வழங்கி உள்ளது. திமுக பாராளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி. இதற்கான நோட்டீஸ் வழங்கியுள்ளார். இதனால் இன்று பாராளுமன்றத்தில் அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்றதும், கடந்த அதிமுக ஆட்சியின்போது  நீட் விலக்கு கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிய மசோதாவுக்கு ஒப்புதல் தரக்கோரி … Read more

தமிழ்நாடு ஆளுநர் குறித்து விவாதிக்க கோரி திமுக கவன ஈர்ப்பு நோட்டீஸ்

புதுடெல்லி: தமிழ்நாடு ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் திமுக கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளது. மக்களவையில் கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ்-ஐ திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு அளித்தார். மேலும், கடமைகள் மற்றும் பொறுப்புகளை நிறைவேற்ற ஆளுநர் தவறுவதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது கட்ட அமர்வு கூட்டத்தொடரில், நீட் மசோதாவை கிடப்பில் போட்டுள்ள ஆளுநரின் நடவடிக்கை, பி.எஃப் வட்டி குறைப்பு ஆகியவற்றை விவாதிக்க … Read more

எய்ம்ஸ் மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் தொடக்கம்

ராமநாதபுரம்: எய்ம்ஸ் மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் துவங்குகிறது. ராமநாதபுரத்தில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி முதல்- அமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை தொடங்கியது. முதல்கட்டமாக ராமநாதபுரத்தில் 100 மாணவர்கள் சேர்க்கைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வருகின்றன. இந்தநிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்கள் 50 பேருக்கு ராமநாதபுரத்தில் இன்று முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, … Read more

புதிய வினாத்தாளைக் கொண்டு இன்று நடைபெறுகிறது 12ம் வகுப்பு திருப்புதல் தேர்வு

சென்னை: கணித பாடத்திற்கான வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததை அடுத்து, புதிய வினாத்தாளைக் கொண்டு இன்று 12 ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு நடைபெறுகிறது. 10ஆம் வகுப்பு 12 ஆம் வகுப்புக்கான முதல் திருப்புதல் தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இதற்கு முன்கூட்டியே வினாத்தாள் சமூக வலைதளங்களில் கசிந்தது. திருவண்ணமலை மாவட்டம் போளூர், வந்தவாசி ஆகிய இடங்களில் உள்ள தனியார் பள்ளிகள் வாயிலாக வினாத்தாள்கள் கசிந்ததாக கண்டறியப்பட்டது. இதையடுத்து திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சஸ்பெண்ட் … Read more