தமிழகத்தில் இன்று புதிதாக 23 பேருக்கு கொரோனா பாதிப்பு…

தமிழகத்தில் இன்று புதிதாக 23 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு ஒற்றை இலக்கத்துக்குள் வந்தது, இன்று 9 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 32 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து இன்று வீடு திரும்பி இருக்கிறார்கள். 275 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர். 27 மாவட்டங்களில் புதிதாக பாதிப்பு ஏதும் இல்லை, செங்கல்பட்டு கன்னியாகுமரி, திருவாரூர், தூத்தூக்குடி ஆகிய நான்கு மாவட்டங்களில் தலா 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர், … Read more

இடியட் : சினிமா விமர்சனம்

‘தில்லுக்கு துட்டு’ முதல் மற்றும் இரண்டாம் பாகத்தை இயக்கிய ராம்பாலாவின் மூன்றாம் படம் இது. மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி, ஆனந்த்ராஜ், ஊர்வசி, மயில்சாமி, ரவி மரியா, ரெடின் கிங்க்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சீன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இயக்குநரின் முதல் இரண்டு படங்களைப்போலவே தான் இதுவும் இருக்கிறது. தில்லுக்கு துட்டு 3 என வைத்திருக்கலாம். முந்தைய இரண்டிலும் சந்தானம் நாயகன். இதில் மிர்ச்சி சிவா நாயகன் என்பதால் தலைப்பை மாற்றி விட்டார்கள் போலிருக்கிறது. … Read more

தமிழகத்தின் உரிமையை காக்கவே டெல்லிக்கு சென்றேன் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழகத்தின் உரிமையை காக்கவே நான் டெல்லிக்கு சென்றேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், முதல் அமைச்சரிடம் கோரிக்கை வைத்தால், கண்டிப்பாக நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. நிச்சயமாக உறுதியாக கலைஞர் சாதித்த வழியில் நானும் சாதிப்பேன் என்பதை நம்பிக்கையுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், நான் சாதாரண ஸ்டாலின் அல்ல. தமிழ்நாட்டு … Read more

‘காரி’: சசிகுமாரின் அதிரடி கிராமிய படம்!

உலகம் நவீனமயமாகி விட்டது என சொல்லிக்கொண்டாலும், கிராமத்து மனிதர்களின் வாழ்க்கையை மண்மணம் மாறாமல் சுமந்து வரும் படங்களுக்கு மக்களிடம் வரவேற்பு குறைவதே கிடையாது. அந்த வகையில், ஈரமும், வீரமும் மாறாத கிராமத்து மனிதர்களை ரத்தமும், சதையுமாக திரையில் பிரதிபலிப்பவர் சசிகுமார். அந்தவிதமாக மீண்டும் கிராம பின்னணியில் பிரம்மாண்டமான, ஆக்ஷன் மற்றும் ஜனரஞ்சக படமாக உருவாகிறது ‘காரி’ என்கிற புதிய படம். கதை நாயகன் சசிகுமாருக்கு இணையாக – கதாநாயகியாக தோன்றுபவர் பார்வதி அருண். இவர் மலையாளத்தில், ‘செம்பருத்திப்பூ’, … Read more

ஜீ 5 தயாரிப்பில் பிரகாஷ்ராஜின் ‘அனந்தம்’ டீசர்: யுவன் வெளியிட்டார்!

‘அனந்தம்’ இணைய தொடர், 2022 ஏப்ரல் 22 ஜீ5 தளத்தில் பிரத்யேகமாக வெளியாகிறது ! மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த பிரியா வி, இயக்கத்தில் பிரகாஷ்ராஜ் நடிப்பில், எட்டு அத்தியாயங்கள் கொண்ட தொடர். ‘அனந்தம்’. 1964 – 2015 வரை ஒரு வீட்டில் வாழ்ந்த நபர்களின் வாழ்வில் நடந்த, ஆச்சரியம், துரோகம், வெற்றி, காதல், சிரிப்பு, என உணர்ச்சிகரமான தருணங்களை, பொழுதுபோக்குடன் தரும் ஒரு அழகான இணைய தொடர். குடும்பத்தில் இருந்து பிரிந்த மகன், மீண்டும் தன் … Read more

பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைப்பு – 90 நாட்களுக்குள் பொதுத்தேர்தல்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் என, பிரதமர் இம்ரான் கான் கோரிக்கை விடுத்ததை அடுத்து, நாடாளுமன்றத்தை கலைத்து, அந்நாட்டு அதிபர் ஆரிப் ஆல்வி உத்தரவிட்டு உள்ளார். அண்டை நாடான பாகிஸ்தானில், பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக் – இ -இன்சாப் கட்சியின் ஆட்சி நடைபெற்று வந்தது. பாகிஸ்தானில் பணவீக்கம் அதிகரிப்பு, விலைவாசி உயர்வு ஆகியவற்றுக்கு பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசு தான் காரணம் எனக் குற்றம் சாட்டி அவர் மீது எதிர்க்கட்சிகள் … Read more

ஐசிசி மகளிர் உலகக் கோப்பையை 7வது முறையாக தட்டிச் சென்றது ஆஸ்திரேலியா

நியூசிலாந்து: நியூசிலாந்து நாட்டில் நடைபெற்ற 2022 ஐசிசி உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கோப்பையை வென்று அசத்தியுள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி. அந்த அணி 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் வெல்லும் ஏழாவது சாம்பியன் பட்டம் இது. கடந்த மார்ச் 4-ஆம் தேதி தொடங்கிய இந்த தொடரில் இந்தியா உட்பட மொத்தம் 8 அணிகள் பங்கேற்றன. ரவுண்ட் ராபின் முறையில் முதல் சுற்று நடைபெற்றது. அதில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி விளையாடிய ஏழு போட்டிகளிலும் வெற்றி … Read more

பாகிஸ்தான் அரசின் பஞ்சாப் மாகாண ஆளுநர் சவுத்ரி முகமது சர்வார் பதவி நீக்கம்

பஞ்சாப்:  பாகிஸ்தான் அரசின் பஞ்சாப் மாகாண ஆளுநர் சவுத்ரி முகமது சர்வார் பதவி நீக்க செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடக்க உள்ள நிலையில், பாகிஸ்தான் அரசின் பஞ்சாப் மாகாண ஆளுநர் சவுத்ரி முகமது சர்வார் பதவி நீக்கம் செய்து பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து பேசிய பாகிஸ்தான் நாதசு செய்தித்துறை அமைச்சர் பாவத் சவுத்ரி, புதிய ஆளுநர் நியமனம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் … Read more

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநராக ஒமர் சர்பராஸ் சீமா நியமனம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநராக ஒமர் சர்பராஸ் சீமா நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடக்க உள்ள நிலையில், பாகிஸ்தான் அரசின் பஞ்சாப் மாகாண ஆளுநர் சவுத்ரி முகமது சர்வார் பதவி நீக்கம் செய்து பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து பேசிய பாகிஸ்தான் நாதசு செய்தித்துறை அமைச்சர் பாவத் சவுத்ரி, புதிய ஆளுநர் நியமனம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்து இருந்தார். … Read more

நம்பிக்கை வாக்கெடுப்பையொட்டி இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு

இஸ்லாமாபாத்: நம்பிக்கை வாக்கெடுப்பையொட்டி இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனாலும், முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி (பிடிஐ) தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதையடுத்து பிற கட்சிகளின் ஆதரவுடன் இம்ரான் கான் பிரதமரானார். இந்த நிலையில், பொருளாதார நிர்வாகத் திறமையின்மையால் நாட்டை பொருளாதார சீரழிவிற்கு கொண்டு சென்றுவிட்டார் என்று இம்ரான் கான் மீது எதிர்க்கட்சிகள் குற்றம் … Read more