அண்ணா – கலைஞர் அறிவாலய திறப்பு விழாவுக்கு வருகை தந்த தலைவர்களுக்கு ஸ்டாலின் நன்றி

Anna – Stalin thanks the leaders who attended the opening ceremony of the Artist Academy புதுடெல்லி: டெல்லியில் அண்ணா – கலைஞர் அறிவாலய திறப்பு விழாவுக்கு வருகை தந்த தலைவர்களுக்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். டெல்லியில் திமுக அலுவலகமான அண்ணா – கலைஞர் அறிவாலயத்தை திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். இந்நிலையில், டெல்லியில் அண்ணா … Read more

வன்னியர் இடஒதுக்கீடு விவகாரம்: எடப்பாடி பழனிசாமி துரைமுருகன் கண்டனம்

சென்னை: வன்னியர் இடஒதுக்கீடு விவகாரத்தில் கருத்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமிக்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக நீர்வளத் துறை அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக ஆட்சியில் கொண்டு வந்தாலும், வன்னியர் ஒதுக்கீட்டை நிலைநிறுத்த தமிழ்நாடு அரசு அனைத்து வாதங்களையும் முன்வைத்தது என்றும், உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதாடியது திமுக அரசு தான் எந்த எந்த மூத்த வழக்கறிஞர்கள் வாதாடினர்கள் என்பது தீர்ப்பிலேயே இடம்பெற்றுள்ளது … Read more

ஐபிஎல் 2022: ராஜஸ்தான், குஜராத் அணிகள் வெற்றி

மும்பை:  ஐபிஎல் 2022 தொடரில் ராஜஸ்தான் – மும்பை அணிகள் இடையேயான போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்தது. இந்த அணியில் ஜோஸ் பட்லர் அதிகபட்சமாக 100 ரன்கள் அடித்தார். மும்பை பந்து வீச்சாளர்களில் பும்ப்ரா, மில்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், … Read more

நாளை முதல் ரமலான் நோன்பு – தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் நாளை முதல் ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி அறிவித்துள்ளது. இஸ்லாமிய நாள்காட்டி பிறையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் ஆண்டுதோறும் ஆங்கில நாள்காட்டிக்கும், இஸ்லாமிய நாள்காட்டிக்கும் வேறுபாடுகள் இருந்து வருகிறது. இதில் குறிப்பாக ரமலான் மாதம் ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில நாள்காட்டியில் 11 நாட்கள் குறைந்து தொடங்குகிறது. கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13-ந் தேதி ரமலான் மாதம் தொடங்கியது. இந்நிலையில்,வளைகுடா நாடுகளில் இன்று ரமலான் நோன்பு தொடங்கிய … Read more

1 – 5ம் வகுப்புகளுக்கு இறுதித்தேர்வு இல்லை – பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் 1 – 5ம் வகுப்புகளுக்கு இறுதித்தேர்வு இல்லை என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் 1 – 5ம் வகுப்புகளுக்கு இறுதித்தேர்வு இல்லை என்றும் 6-9ஆம் வகுப்புகளுக்குமே 5 முதல் 13ஆம் தேதி வரை ஆண்டு இறுதி தேர்வுகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான வர்த்த ஒப்பந்தத்தால் 10லட்சம் பேருக்கு வேலை! பியூஸ் கோயல்…

டெல்லி: இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான வர்த்த ஒப்பந்தத்தால் அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும்  என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இந்தியா ஆஸ்திரேலியா இடையே பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம்  இருநாட்டு பிரதமர்கள் முன்னிலையில் காணொலி வாயிலாக நடைபெற்ற  நிகழ்ச்சியில் டெல்லியில் கையெழுத்தானது. இந்த நிகழ்ச்சியில்,  மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல் மற்றும் ஆஸ்திரேலியா வர்த்தகத்துறை மந்திரி டான் டெஹான் ஆகியோர்  கையெழுத்திட்டனர். இந்த நிகழ்ச்சியில் … Read more

டெல்லியில் கோலாகலமாக நடைபெறும் திமுக அலுவலகம் திறப்பு விழா…

டெல்லி: தலைநகர் டெல்லியில் திமுக அலுவலகம் திறப்பு விழா நடைபெறுகிறது. டெல்லி தீனதயாள் உபாத்யாயா மார்க் பகுதியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகமான அண்ணா கலைஞர்  அறிவாலயத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சுமார் 4.30 மணி அளவில் வந்தடைந்தார். இந்த நிகழ்ச்சியில் திமுக எம்.பி.க்கள், தமிழ்நாடு அமைச்சர்கள் உள்பட முக்கிய திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர். மேலும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா உள்பர ஏராளமானோர் வந்துள்ளனர். தொடர்ந்து முக்கிய … Read more

நடப்பு நிதியாண்டில் ரூ.1500 கோடி வரி வசூலிக்க இலக்கு நிர்ணயம்! சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை: நடப்பு (2022-23) நிதியாண்டில் ரூ.1500 கோடி வரி வசூலிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் இன்றுமுதல் சொத்து வரி பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 25சதவிகிதம் முதல் 150 சதவிகிதம் வரை வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், மத்தியஅரசின் வலியுறுத்தல் காரணமாகவே வரியை உயர்த்தி இருப்பதாக அமைச்சர் நேரு கூறியுள்ளார். இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  பெருநகர சென்னை மாநகராட்சிக்கு … Read more

விஜயின் பீஸ்ட் டிரெய்லர் மாஸான ரிலீஸ்….

கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் திரைப்படம் பீஸ்ட். விஜய்க்கு ஜோடியாக, நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். செல்வராகவன், யோகி பாபு, VTV கணேஷ், ரெட்டின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். ஏப்ரல் 13 ம் தேதி திரைக்கு வரும் இந்தப் படத்தின் டிரெய்லர் இன்று வெளியானது. #Beast Trailer https://t.co/V3sX1lczMF — Vijay (@actorvijay) April 2, 2022 ”நான் அரசியல்வாதி இல்ல.. படைவீரன்” என்று … Read more

அரசியல் வேறுபாடுகளை மறந்து நாட்டை காப்பாற்ற ஒன்றிணைய வேண்டும் என ஸ்டாலின் அழைப்பு – ஆடியோ

அரசியல் வேறுபாடுகளை மறந்து நாட்டை காப்பாற்ற அனைத்து கட்சி எதிர்க்கட்சித் தலைவர்களும், ஒன்றிணைய வேண்டும்,  பாஜகவிடம் இருந்து நாட்டை காப்பற்ற வேண்டும் என்றும், ஒற்றுமையே பலம் என்பதை அனைத்து எதிர்க்கட்சிகளும் உணர்ந்து, ஒன்றிணைய வேண்டும் என டெல்லியில் முகாமிட்டுள்ள  திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வரும் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.