சொத்து வரிகள் உயர்வு – தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரிகள் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட 21 மாநகராட்சிகளில் சொத்து வரி விகிதங்கள் 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 600 சதுரடிக்கு குறைவான பரப்பளவு உள்ள கட்டிடங்களுக்கு 25 சதவிகித சொத்துவரி உயர்வை தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னையில் புதியதாக இணைந்த பகுதிகளில் 600 முதல் 1200 சதுரடி பரப்பளவு கொண்ட குடியிருப்புகளுக்கு 50 சதவிகிதம் … Read more

பாஜகவுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

புது டெல்லி: பாஜகவுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பாஜகவுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு நாட்டை காக்க ஒன்றிணைய வேண்டும் என்றார், தொடர்ந்து பேசிய அவர், ஒற்றுமையே வலிமை என்பதை உணர்ந்து பாஜக அல்லாத கட்சிகளுடன் கொள்கை ரீதியான நட்பை காங்கிரஸ் கட்சி கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

கே.பாலகிருஷ்ணனுக்கு முதலமைச்சர் வாழ்த்து

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுச் செயலாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள கே.பாலகிருஷ்ணனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுச் செயலாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள தோழர் கே.பாலகிருஷ்ணனுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! கல்லூரி பருவம்தொட்டே அரசியல்களத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட பொதுவுடைமைப் போராளியான அவரது தொண்டு சிறக்க வாழ்த்தி மகிழ்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் 389 நடமாடும் மருத்துவ வாகன சேவை அடுத்த வாரம் தொடக்கம்! அமைச்சர் மா.சு. தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 389 நடமாடும் மருத்துவ வாகன சேவை அடுத்த வாரம் தொடங்கப்பட உள்ளதாகவும், இந்த சேவை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாளை  (2-ம் தேதி) தமிழகம் முழுவதும்  27-வது மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் இடங்களில் நடக்க உள்ளது. இதில் முதல் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய 50 லட்சம் பேரும், 2-வது … Read more

மாநகர பேருந்துகளில் இரவு நேரங்களில் பாதுகாப்பு பணிக்கு காவலர்கள்! சங்கர் ஜிவால் தகவல்…

சென்னை: மாநகர பேருந்துகளில் இரவு நேரங்களில் பாதுகாப்பு பணிக்கு காவலர்கள் நியமிக்கப்படுவார்கள் என மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால்  தெரிவித்துள்ளார். பெருநகர சென்னை மாநகராட்சி வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் இன்று பாலின நிகர் மேம்பாடு மற்றும் கொள்கை ஆய்வக கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்களை  சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் தொடங்கி வைத்தார். இதில் சென்னை மாநகராட்சி ஆணையர், சென்னை காவல்துறை ஆணையர் உள்பட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த … Read more

25 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று இல்லை… தமிழகத்தில் இன்று 32 பேருக்கு கொரோனா…

இரண்டாண்டுகளாக தொடர்ந்து வந்த பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகள் நாடுமுழுவதும் இன்று முதல் நீக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கைக்கு திரும்பியுள்ள நிலையில் தமிழகத்தில் இன்று 27,914 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 16 ஆண்கள் 16 பெண்கள் என மொத்தம் 32 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. சென்னையில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் மொத்தம் 293 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.   மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் 25 மாவட்டங்களில் … Read more

விஜய் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது பீஸ்ட் டிரெய்லர்…

பீஸ்ட் படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘பீஸ்ட்’. விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், டாம் சாக்கோ ஆகியோர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஏப்ரல் 13 ம் தேதி ஐந்து மொழிகளில் உலகெங்கும் ரிலீசாக இருக்கும் இந்தப் படத்தை தமிழில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. இந்தப் படத்தின் டிரெய்லர் நாளை மாலை … Read more

பாஜக உறுப்பினர் கல்யாணராமன் மீதான குண்டர் சட்டம் ரத்து!

சென்னை: சர்ச்சைக்குரிய வகையில் பேசி பரபரப்பையும், சலசலப்பையும் உருவாக்கி வரும்,  பாஜக செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் மீதான குண்டர் சட்டத்தைசென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழக பாஜக செயற்குழு உறுப்பினராக இருப்பவர் கல்யாணராமன். இவர் அடிக்கடி சமூக வலைதளங்களில் சாதி, மத மோதல்களை தூண்டும் விதமாக பரபரப்பான தகவல்களையும் பதிவிட்டு, மக்களிடையே வேறுபாட்டை எழுப்பி வந்தார். இதனால், இவர்மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து,  அவர்மீது காவல்துறை குண்டர் சட்டம் போடப்பட்டது. கடந்த 2021ம் … Read more

சன்னலுக்கு வெளியேதான் உலகம் இருக்கிறது! அதனை உங்கள் திறமையினால் புதுமைப்படுத்துங்கள்! ஆசிரியர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்!

சென்னை: சன்னலுக்கு வெளியேதான் உலகம் இருக்கிறது என்று அதனை உங்கள் திறமையினால் செழுமைப்படுத்துங்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்  டிவிட் மூலம் ஆசிரியர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். டெல்லியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  இன்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை சந்தித்து பேசினார். தொடர்ந்து டெல்லியில் உள்ள பள்ளி ஒன்றிற்கு நேரடியாக சென்று, அங்குள்ள நிகழ்வுகளை கேட்டறிந்தார். அப்போது ஸ்டாலின் உடன் டெல்லி முதல்வர்கெஜ்ரிவால், துணைமுதல்வர் சிசோடியா, அன்பில் மகேஷ் உள்பட பலர் சென்றனர். தொடர்ந்து டெல்லியில் … Read more

ஜிஎஸ்டி வரலாற்றில் முதன்முறையாக மார்ச் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.42 லட்சம் கோடியாக உயர்வு!

டெல்லி: ஜிஎஸ்டி வரலாற்றில் முதன்முறையாக,  இதுவரை இல்லாத அளவ  மார்ச் மாதத்தில் ஜி.எஸ்.டி வசூல் ரூ.1.42 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இந்தியாவில், சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி 2017ம் ஆண்டு ஜூலை 1ந்தேதி முதல் அமலுக்கு வந்தது. அன்றுமுதல் இன்று வரை, சாமானிய மக்களின் வயிற்றில் அடித்து, தொடர்ந்து வசூலை வாரிக் கொண்டிக்கொண்டிருக்கிறது. கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக சற்று வரி வசூல் குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்கத்தொடங்கி உள்ளது. கடந்த … Read more