முதல்வர் துபாய் பயணம் : அவதூறு கருத்து வெளியிட்ட அண்ணமலைக்க்கு திமுக நோட்டிஸ் – முழு விவரம்

சென்னை தமிழக முதல்வரின் துபாய் பயணம் குறித்து அண்ணாமலை வெளியிட்ட அவதூறு கருத்தை எதிர்த்து திமுக நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தற்போது துபாயில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.  இது அரசு முறை சுற்றுப்பயணம் ஆகும்.    பாஜக தமிழக மாநில தலைவர் அண்ணாமலை இந்த பயணம் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.   இதையொட்டி திமுக அமைப்பு செயலர் ஆர் எஸ் பாரதி சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி … Read more

தனது 134வது மாரத்தானை பாட்னாவில் நிறைவு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்

பாட்னா: தனது 134வது மாரத்தானை பாட்னாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிறைவு செய்துள்ளார். பாட்னாவில் நடைபெற்ற மாரத்தானில் பங்கேற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன், 21.1 கி.மீ. தூரத்தை 2.30 மணி நேரத்தில் கடந்து அசத்தினார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், உடற்பயிற்சியில் தமிழக இளைஞர்களுக்கு முன்மாதிரியாக இருந்தவர் கலைஞர் கருணாநிதி. இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே தான் மாரத்தானில் ஓடுகிறேன்.இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் நடைபெறும் மாரத்தான் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்பது தான் என்னுடைய இலக்கு. என்று தெரிவித்துள்ளார். … Read more

முதல்வரின் துபாய் பயணம் குடும்பச் சுற்றுலா: இபிஎஸ்

சென்னை: முதல்வரின் துபாய் பயணம் குடும்பச் சுற்றுலா என்று ம்முனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி, முதல் அமைச்சர் மு.க ஸ்டாலினின் துபாய் பயணம் குடும்ப சுற்றுலா போல் உள்ளது என்றும், தமிழ்நாட்டுக்கு நன்மை செய்ய மு.க ஸ்டாலின் துபாய் செல்லவில்லை என்றும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், தனிப்பட்ட காரணங்களுக்குக்காக புதிய தொழில் தொடங்க துபாய் சென்றுள்ளதாக மக்கள் பேசுகின்றனர் … Read more

அதிமுகவில் சசிகலாவை மீண்டும் இணைப்பதற்கான வாய்ப்பே இல்லை – எடப்பாடி பழனிசாமி

சென்னை: அதிமுகவில் சசிகலாவை மீண்டும் இணைப்பதற்கான வாய்ப்பே இல்லை என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி பேசுகையில், அதிமுகவில் சசிகலாவை மீண்டும் இணைப்பதற்கான வாய்ப்பே இல்லை என்றும், சசிகலா குறித்த ஓபிஎஸ் கருத்து தனிப்பட்டது. அரசியல் என்பது வேறு தனிப்பட்ட முறையில் யாருக்கும் எந்த பிரச்னையும் இல்லை; அரசியல், பொதுப்பிரச்னையில்தான் வேறுபாடு உள்ளது என்றும் கூறினார்.

தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்: தடையில்லா மின்சாரத்தை உறுதி செய்ய மாநிலங்களுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தல்

புதுடெல்லி: தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், தடையில்லா மின்சாரத்தை உறுதி செய்ய மாநிலங்களுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. நாளை முதல் 30ஆம் தேதி வரை தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளன. இந்நிலையில், தடையில்லா மின்சாரத்தை உறுதி செய்ய மாநிலங்களுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு, மாநிலங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில், மாநிலங்களில் மின் சேவை பாதிக்கப்படாத படி இருக்க கூடுதல் பணியாளர்களை நியமிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மருத்துவமனை, ரயில்வே உள்ளிட்ட முக்கியமான இடங்களில் மின் … Read more

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வி

கிறிஸ்ட்சர்ச்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி தோல்வி அடைந்தது. மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா- தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் கேப்டன் மித்தாலி ராஜ் அதிகபட்சமாக 68 ரன்கள் எடுத்தார். 275 ரன்களை … Read more

ஒடிசாவின் பாலாசோர் கடற்கரையில் நடைபெற்ற வான் எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி

ஒடிசா: ஒடிசாவின் பாலாசோர் கடற்கரையில் நடைபெற்ற வான் எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) இன்று காலை 10.30 மணியளவில் ஒடிசாவின் ஐடிஆர் பாலசோரில் இருந்து சோதனை செய்யப்பட்ட எம்ஆர்எஸ்ஏஎம்-ஆர்மி ஏவுகணை அமைப்பு விமானத்தை வெற்றிகரமாக சோதனை செய்தது. இதுகுறித்து DRDO அதிகாரிகள் தெரிவிக்கையில், இந்த அமைப்பு இந்திய இராணுவத்தின் ஒரு பகுதியாகும். சோதனையில், ஏவுகணை மிக தொலைவில் … Read more

தமிழகத்தின் 2 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் – வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தின் 2 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள் அறிக்கையில், உள்தமிழக பகுதியின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக இன்றும் நாளையும் கன்னியாகுமரி, திருநெல்வேலி அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. … Read more

டான்செட் நுழைவுத்தேர்வுக்கு மார்ச் 30 முதல் விண்ணப்பிக்கலாம் – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

சென்னை: டான்செட் நுழைவுத் தேர்வுக்கு வரும் 30-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வரும் கல்வியாண்டில் MBA, MCA, M.E., http://M.Tech., M.Plan., M.Arch., படிப்புகளில் சேர TANCET நுழைவுத் தேர்வுக்கு வரும் 30-ம் தேதி முதல் ஏப்ரல் 18-ம் தேதி வரை https://tancet.annauniv.edu/tancet இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. எம்சிஏ படிப்பிற்கு வருகிற மே 14ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 12 மணி … Read more

இலவச ரேசன் திட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பு

புதுடெல்லி: கடந்த சில மாதங்களாக இலவச ரேஷன் திட்டம் மத்திய அரசு அமல்படுத்தி வரும் நிலையில் தற்போது மேலும் 6 மாதங்களுக்கு இந்த திட்டம் நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பின் போது நாடு முழுவதும் ஏழைகளுக்கு இலவச ரேஷன் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று பிரதமர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் பெறப்பட்டது … Read more