தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்த்து வந்த முதலமைச்சர் ஸ்டாலின் – ஆடியோ

தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்க 4 நாள் துபாய் சுற்றுப்பயணம் செய்த முதலமைச்சர் அங்கு பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு, ஏராளமான முதலீடுகளை ஈர்த்து வந்துள்ளார். இதை வரவேற்கும் வகையில் வகையில் கார்ட்டூன் அமைந்துள்ளது.

பூசாண்டி வரான்: திரை விமர்சனம்

ஹாரர், க்ரைம், வரலாற்று படம். ஆனால் குழப்பமின்றி, சிறப்பான திரைக்கதையுடன் நம்மை கட்டிப்போடுகிறது, பூசாண்டி வரான் திரைப்படம். முதல் விசயம்.. படக்குழுவினர் அனைவருக்கும் இரட்டைப் பாராட்டு. சிறப்பான படம் என்பதோடு, படக்குழுவில் ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் மலேசிய கலைஞர்கள். தொல் பொருட்களை வாங்கி விற்கும் நபர், அவருக்கு உதவியாளர்களா இருவர். மூவரும் பெரிய பங்களாவில் தங்கி இருக்கின்றனர். விளையாட்டாய் அவர்கள் பேயை அழைக்க, அந்த நேரம் அவர்களிடம் பழங்கால நாணயம் ஒன்று வந்து சேர அதன் … Read more

முகநூல் பாஜகவுக்கு ஆதரவாகச் செயல்படுகிறதா? நிர்வாகம் விளக்கம்

டில்லி பாஜகவுக்கு ஆதரவாக அரசியல் விளம்பரம் வெளியிட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு முகநூல் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. முகநூல் அரசியல் விளம்பரங்கள் பாஜகவுக்கு ஆதரவாக வெளியிடுவதாக ஒரு குற்றசாட்டு எழுந்தது.  மேலும்  குடிமக்களின் உரிமைகள் பாதுகாப்பு மற்றும் சமூக வலைத்தளங்களில் தனிநபர் விபரங்களைத் தவறாகப் பயன்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.  எனவே இது குறித்து தகவல் தொழில் நுட்ப துறைக்கான நாடளுமன்ற நிலை குழு முகநூல் நிறுவன பிரதிநிதிகளைச் சந்தித்து விளக்கம் கேட்டது. முகநூல் நிர்வாக பிரதிநிதிகள், ”நாங்கள் விளம்பரங்களை … Read more

கணிதம் அவசியம் இல்லாத பொறியியல் படிப்புக்கள் எவை? : அரசு அறிவிப்பு

டில்லி ஒரு சில பொறியியல் படிப்புக்களுக்குக் கணிதம், வேதியியல் அவசியம் இல்லை என அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழு அறிவித்துள்ளது. பொறியியல் படிப்புக்களில் சேர தற்போது கணிதம், இயற்பியல், உள்ளிட்ட பாடங்கள்  அவசியமாக இருந்தன.   ஆனால் ஒரு சில பொறியியல் படிப்புக்களுக்கு கணிதம் உள்ளிட்டவை அவசியம் இல்லை என இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு எழுந்தது.  இதையொட்டி அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், “கணிதம் பொறியியல் பிரிவில் உள்ள 3ல் … Read more

வேளச்சேரி : ரூ.5.84 கோடி மழைநீர் வடிகால் பணிகள் – முதல்வர் ஆய்வு

சென்னை வேளச்சேரியில் ரூ.5.84 கோடி செலவில் நடக்கும் மழைநீர் வடிகால் பணிகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்துள்ளார் தமிழக அர்சு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழையின்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினார்.  இந்நிலையில், வரும் மழைக் காலங்களில் மழை, வெள்ளப் பாதிப்புகள் ஏற்படாத வகையில், அதிக அளவில் தண்ணீர் தேங்கும் இடங்களில் மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ளுமாறும் முதல்வர் உத்தரவிட்டார். அதன்படி `சிங்காரச் சென்னை 2.0′ … Read more

கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு

சென்னை சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையைத் தினசரி மாற்றி அமைக்கின்றன.   ஐந்து மாநில சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த 8 நாட்களாகவே பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டு … Read more

இலங்கையில் மருந்துகள் தட்டுப்பாடு : அறுவை சிகிசசை ரத்து – இந்தியா உதவி

கொழும்பு போதிய மருந்துகள் இல்லாததால் இலங்கையில் அறுவை சிகிச்சைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தற்போது இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வருகிறது. குறிப்பாக கொரோனாவுக்கு பின்னர் அந்நாட்டின் பொருளாதாரம் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இலங்கை நிதி நெருக்கடியை சமாளிக்கச் சீனாவிடம் கடன் வாங்கி அந்த கடனை கட்ட முடியாமல் சிக்கித் தவித்தது. இதனால் இலங்கை ரூபாயின் மதிப்பு சர்வதேசச் சந்தையில் பெரும் சரிவை சந்தித்தது. இலங்கை வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வாங்க முடியாமல் தவித்து வருகிறது. … Read more

அடையாறு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் ஆய்வுசெய்த முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அடையாறு மண்டலத்தில் ரூ.5.84கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கடந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவமழையின் போது சென்னை வெள்ளத்தில் தத்தளித்தது. நகரின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி பாதிப்பு ஏற்பட்டது. இதை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அடுத்த பருவமழைக்குள் மழை நீர் தேங்கும் இடங்கள் கண்டறியப்பட்டு சரி செய்யப்படும் என கூறியிருந்தார். அதைத்தொடர்ந்து, சென்னையில் … Read more

தென்னிந்திய ஊடகம் & பொழுதுபோக்கு துறையின் கருத்தரங்கு… ஏப். 9 ம் தேதி சென்னையில் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்…

தென்னிந்திய ஊடகம் & பொழுதுபோக்கு துறையின் கருத்தரங்கு வரும் ஏப்ரல் மாதம் 9 ம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது, இந்த கருத்தரங்கை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைக்க இருக்கிறார். இந்திய தொழில் துறை கூட்டமைப்பு நடத்தும் தென்னிந்திய ஊடகம் & பொழுதுபோக்கு துறையின் கருத்தரங்கில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானுக்கு சிறந்த ஐகான் விருது வழங்கப்பட இருக்கிறது. “தக்ஷின்” என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த கருத்தரங்கு சென்னை வர்த்தக மைய்யத்தில் ஏப்ரல் 9 மற்றும் … Read more

ஃபெட்எக்ஸ் கொரியர் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக இந்தியர் ராஜ்சுப்ரமணியம் நியமனம்…

வாஷிங்டன்: அமெரிக்காவின் ஃபெட்எக்ஸ் கொரியர் (FedEx) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராஜ் சுப்ரமணியம் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த பல நிறுவனங்களின் உயர்அதிகாரிகளாக இந்தியர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே கூகுள், மைக்ரோ சாப்ட், டிவிட்டர் உள்பட பல நிறுவனங்களில் தலைமை அதிகாரியாக இந்தியர்களும், இந்திய வம்சாவழியினரும் நியமிக்கப்பட்டு உள்ள நிலையில், தற்போது,  உலகளவில் கொரியர் வர்த்தகத்தில் கோலோச்சும் முன்னணி நிறுவனமான  அமெரிக்காவின் ஃபெட்எக்ஸ்  நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இந்திய வம்சாவளியைச் … Read more