தமிழகத்தில் இன்று 37 பேருக்கு கொரோனா பாதிப்பு  –  29/03/2022

சென்னை தமிழகத்தில் இன்று 37 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,52,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 25,105 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 6,55,37,882 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இன்று 37 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 34,52,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இன்று ஒருவர் கூட மரணம் அடையவில்லை.  இதுவரை 38,025 பேர் உயிர் இழந்துள்ளனர். இன்று 64 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 34,14,387 பேர் குணம் அடைந்து வீடு … Read more

சென்னையின் அடையாளம் ‘சென்ட்ரல் ஸ்கொயர்’! முதல்வர் ஸ்டாலின் நாளை திறந்துவைக்கிறார்…

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள ‘சென்ட்ரல் ஸ்கொயர்’ (சென்ட்ரல் மதத்திய சதுக்கம்) நாளை முதலமைச்சர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்படுகிறது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், சென்ட்ரல் ரயில் நிலையத்துடன் மெட்ரோ ரயில் நிலையம் ஒருங்கிணைத்து ரூ.400 கோடி ரூபாய் மதிப்பில் அழகிய செடிகளுடன்  வாகன நிறுத்தம் மற்றும் பொதுமக்கள் ஓய்வெடுக்கும் வகை யில் பிரமாண்டமான  சதுக்கம் அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள “டைம்ஸ் ஸ்கொயர்”, … Read more

அதிகாரியை சாதி பெயர் கூறிய விவகாரம்: போக்குவரத்து துறை அமைச்சர் இலாகா மாற்றம்…

சென்னை: போக்குவரத்து அமைச்சராக இருந்து வந்த ராஜகண்ணப்பன் மீது கூறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து, அவர்  பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை கவர்னர் ஆர்.என்.ரவி அறிவித்துள்ளார். போக்குவரத்துதுறையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. கடந்த இரு வாரங்களுக்கு முன்பு (மார்ச் 14ந்தேதி) எழிலகத்தில் உள்ள போக்குவரத்து துணை ஆணையர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இது சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், போக்குவரத்துதுறை அமைச்சர் ராஜகண்ணப்பன் … Read more

ஜூலை 24ம் தேதி குரூப் 4 தேர்வு! டிஎன்பிஎஸ்சி தலைவர் அறிவிப்பு…

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகள் ஜூலை 24ம் தேதி நடைபெறும் என்றும், நாளை முதல் ஏப்ரல் 28-ம் தேதி வரை தேர்வுக்கு விண்ணப் பிக்கலாம் என இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் கூறினார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ( TNPSC)  நடத்தும் குரூப்-4 தேர்வு குறித்து இன்று மாலை அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப் பட்டிருந்தது. அதன்படி, இன்று மாலை    டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அதைத் … Read more

மதுரை காமராஜர் பல்கலைக் கழக புதிய துணைவேந்தராக பேராசிரியர் குமார் நியமனம்!

சென்னை: மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் குமார்  நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவரது நியமன ஆணையை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கினார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக 2019ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட எம்.கிருஷ்ணன் கடந்த ஆண்டு (2021) ஜூலை மாதம், திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார்.இதையடுத்து மதுரை துணைவேந்த பணியிடம் காலியாக இருந்து வந்தது. தொடர்ந்து,  புதிய துணைவேந்தரைத் தேர்வு செய்ய அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தர் இ.பாலகுருசாமி தலைமையில் தேடல் … Read more

பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வைக் கண்டித்து தமிழக காங்கிரஸ் சார்பில் போராட்டம் அறிவிப்பு! கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

சென்னை: பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வைக் கண்டித்து தமிழக காங்கிரஸ் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மார்ச் 31ந்தேதி மற்றும் ஏப்ரல் 2ந்தேதி முதல் 4ந்தேதி வரை போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்தலைவர்  கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். எட்டு ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்பு, தொழில் உற்பத்தி முடக்கம் என மக்கள் மீது பலமுனை தாக்குதல் நடத்தப்படுகிறது. இதனால் வறுமையின் பிடியில் சிக்கி மக்கள் தவிக்கிறார்கள். பெட்ரோலியப் … Read more

கொரோனா பாதிப்பு: இஸ்ரேல் பிரதமரின் இந்திய பயணம் ஒத்திவைப்பு…

டெல்லி: இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதால் அவரது இந்திய பயணம் ஒத்தி வைக்கப் படுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்து உள்ளது. கடந்த இரு ஆண்டுகளாக உலக நாடுகளை புரட்டிப்போட்ட கொரோனா தொற்று தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் இன்னும் தொற்று பரவல் நீடித்து வருகிறது. இதற்கிடையே உலக நாடுகளுக்கு இடையே போக்குவரத்து உள்பட அனைத்துவிதமான பரிவர்த்தனை களும் மீண்டும் தொடங்கி உள்ளன. இந்த நிலையில், இந்தியாவுக்கு 3 … Read more

முதலமைச்சர் ஸ்டாலின் அணிந்திருந்த ‘ஜாக்கெட்’ குறித்து அவதூறு! பாஜக நிர்வாகி கைது…

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் துபாய் பயணத்தின்போது அணிந்திருந்த ‘ஜாக்கெட்’ குறித்து அவதூறு பதிவிட்ட பாஜக நிர்வாகி காவல்துறை யினரால் கைது செய்யப்பட்டுள்ளதால். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் தொழில்முதலீடுகளை ஈர்க்க 4 நாள் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி விமானத்தில், துபாய், அபுதாபிக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். அங்கு தொழிற்துறையினர், முதலீட்டாளர்கள் என பல தரப்பினரை சந்தித்த அவர், தமிழகத்தில் தொழில் தொடங்க உகந்த சூழலை எடுத்துக்கூறி, தமிழகத்தில் முதலீடு செய்ய வரும்படி அழைப்பு விடுத்தார். மேலும் … Read more

மாணவர் உயிரிழப்பு எதிரொலி: தனியார் பள்ளிகளுக்கு தமிழகஅரசு கடும் எச்சரிக்கை…

சென்னை: வளசரவாக்கம் தனியார் பள்ளி வேன் மோதி 2ம் வகுப்பு மாணவர் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில்,  தனியார் பள்ளிகளுக்கு தமிழகஅரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. பள்ளிக்கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. சென்னை வளசரவாக்கத்தில், பள்ளி வளாகத்தில் பள்ளி வேன் ஓட்டுநரின் கவனக் குறைவால் வேன் மோதி இரண்டாம் வகுப்பு மாணவா் உயிரிழந்தாா். இது பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அநத் பள்ளி வேனின் … Read more

இதுதான் மதம் போதிக்கும் பண்பா?

நெட்டிசன்: மூத்தபத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு இதுதான் மதம் போதிக்கும் பண்பா? அகால சம்பவத்தில் பள்ளி மாணவனான 7 வயது மகனை இழந்திருக்கிறார் ஒரு தாய்.. உலகமே திரண்டு ஆறுதல் சொன்னாலும் இப்படிப்பட்ட சோகத்தில் உள்ள ஒரு எந்த ஒரு தாயையயும் தேற்றுவது கடினம். கையில் சடலமாக கிடைக்கும் மகனை புதைக்க கல்லறையில் இடம் தர மறுக்கிறது கிறிஸ்தவ அமைப்பு.. பாதிக்கப்பட்ட தாயே, நீங்கள் எல்லாம் ஒரிஜினல் கிறிஸ்துவர்களா?” என்று கேட்கிறார். கேட்டால் விதிமுறை என்கிறார்கள். … Read more