முதலமைச்சர் ஸ்டாலின் அணிந்திருந்த ‘ஜாக்கெட்’ குறித்து அவதூறு! பாஜக நிர்வாகி கைது…

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் துபாய் பயணத்தின்போது அணிந்திருந்த ‘ஜாக்கெட்’ குறித்து அவதூறு பதிவிட்ட பாஜக நிர்வாகி காவல்துறை யினரால் கைது செய்யப்பட்டுள்ளதால். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் தொழில்முதலீடுகளை ஈர்க்க 4 நாள் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி விமானத்தில், துபாய், அபுதாபிக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். அங்கு தொழிற்துறையினர், முதலீட்டாளர்கள் என பல தரப்பினரை சந்தித்த அவர், தமிழகத்தில் தொழில் தொடங்க உகந்த சூழலை எடுத்துக்கூறி, தமிழகத்தில் முதலீடு செய்ய வரும்படி அழைப்பு விடுத்தார். மேலும் … Read more

மாணவர் உயிரிழப்பு எதிரொலி: தனியார் பள்ளிகளுக்கு தமிழகஅரசு கடும் எச்சரிக்கை…

சென்னை: வளசரவாக்கம் தனியார் பள்ளி வேன் மோதி 2ம் வகுப்பு மாணவர் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில்,  தனியார் பள்ளிகளுக்கு தமிழகஅரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. பள்ளிக்கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. சென்னை வளசரவாக்கத்தில், பள்ளி வளாகத்தில் பள்ளி வேன் ஓட்டுநரின் கவனக் குறைவால் வேன் மோதி இரண்டாம் வகுப்பு மாணவா் உயிரிழந்தாா். இது பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அநத் பள்ளி வேனின் … Read more

இதுதான் மதம் போதிக்கும் பண்பா?

நெட்டிசன்: மூத்தபத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு இதுதான் மதம் போதிக்கும் பண்பா? அகால சம்பவத்தில் பள்ளி மாணவனான 7 வயது மகனை இழந்திருக்கிறார் ஒரு தாய்.. உலகமே திரண்டு ஆறுதல் சொன்னாலும் இப்படிப்பட்ட சோகத்தில் உள்ள ஒரு எந்த ஒரு தாயையயும் தேற்றுவது கடினம். கையில் சடலமாக கிடைக்கும் மகனை புதைக்க கல்லறையில் இடம் தர மறுக்கிறது கிறிஸ்தவ அமைப்பு.. பாதிக்கப்பட்ட தாயே, நீங்கள் எல்லாம் ஒரிஜினல் கிறிஸ்துவர்களா?” என்று கேட்கிறார். கேட்டால் விதிமுறை என்கிறார்கள். … Read more

தமிழ் புத்தாண்டையொட்டி நாகர்கோவில்- தாம்பரம் இடையே சிறப்பு ரெயில் அறிவிப்பு!

சென்னை: தமிழ் புத்தாண்டு விடுமுறையையொட்டி நாகர்கோவில்- தாம்பரம் இடையே  சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  தமிழ் புத்தாண்டு விடுமுறை காலத்தில் பயணிகளின் வசதிக்காக தாம்பரம்-நாகர்கோவில் இடையே ஒரு சிறப்பு ரெயில் இயக்க தெற்கு ரெயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி சித்திரை 1ந்தேதி தமிழ்ப்புத்தாண்டு தினமான வருகிற 13-ந்தேதி தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு அதிவிரைவு சிறப்பு ரெயில் (06005) இயக்கப்படுகிறது. இந்த ரயில் அன்று … Read more

2வது நாளாக வேலைநிறுத்தம்: தமிழ்நாட்டில் பேருந்து சேவை தொடங்கியது – வங்கி சேவை முடங்கியது…

சென்னை: தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள 2நாள் நாடுதழுவிய போராட்டத்தின் 2வது நாளான இன்று தமிழ்நாட்டில், பேருந்து சேவை தொடங்கி நடைபெற்று வருகிறது. 90 சதவிகித அரசு பேருந்துகள் இயங்குவதாக மாநில போக்குவரத்து துறை தெரிவித்து உள்ளது. ஆனால், வங்கி சேவை உள்பட பல சேவைகள் முற்றிலும் முடங்கி உள்ளது. மோடி தலைமையிலான மத்திய அரசின் மக்கள் விரோத போக்கு, தனியார் மயம்,  ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்பட 12 அம்ச கோரிக்கை களை  வலியுறுத்தி வங்கி உள்ளிட்ட … Read more

கோவை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தராக டாக்டர் கீதாலட்சுமி நியமனம்!

சென்னை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக டாக்டர் வி.கீதாலட்சுமியை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி  நியமித்தார். கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கிருட்டிணமூர்த்தி இருந்து வந்தார். அவரது பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் புதியதுணைவேந்தர் நியமிக்கப்பட்டுள்ளார். கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின்கீழ் மாநிலம் முழுவதும் 14 உறுப்புக் கல்லூரிகள், 28 இணைப்புக் கல்லூரிகள் உள்ளன. பல்கலைக்கழகத்தில் வேளாண்மை, தோட்டக்கலை என 11 பட்டப்படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. தற்போது கோவை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள … Read more

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில்  5.77 லட்சம் சோதனை- பாதிப்பு 1,259

டில்லி இந்தியாவில் 5,77,559 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 1,259 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,259 பேர் அதிகரித்து மொத்தம் 4,30,21,962 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  மரணமடைந்தோர் எண்ணிக்கை 35 அதிகரித்து மொத்தம் 5,21,070 பேர் உயிர் இழந்துள்ளனர்.  கடந்த 24 மணி நேரத்தில் 1,706 பேர் குணமடைந்து இதுவரை 4,24,85,534 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 15,378 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று இந்தியாவில் 29,92,407 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு … Read more

தமிழகத்தில் இன்று 60% பேருந்துகள் இயங்கும்

சென்னை பொதுமக்கள் மற்றும் மாணவர் நலனுக்காக தமிழகத்தில் இன்று 60% பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தொமுச தெரிவித்துள்ளது.   நேற்று தமிழகத்தில் நடந்த வேலை நிறுத்த போராட்டம் காரனமாக பேருந்துகள் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் இயங்கியதால் மக்கள் பெரிதும் அவதியுற்றனர்.    மாணவர்களால் கல்வி நிலையங்களுக்குச் செல்ல இயலாத நிலை ஏற்பட்டது.   இது குறித்து தொமுச நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். பிறகு அவர்கள் செய்தியாளர்களிடம், “இரண்டு நாட்களாக மத்திய தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்திருந்தன. நேற்று தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தம் வெற்றிகரமாக நடந்தது. சுமார் … Read more

பெட்ரோல் டீசல் விலை இன்றும் உயர்வு

சென்னை பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்றும் உயர்ந்துள்ளதால் மக்கள் கடும் துயரம் அடைந்துள்ளனர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் தினசரி பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றி அமைத்தன.  சமீபகாலமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. ஆயினும் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக தேர்தல் காரணமாக விலை உயர்த்தப்படவில்லை.  தேர்தல் முடிந்த ஒரே வாரத்தில் பெட்ரோல் … Read more

ஐபிஎல் 2022: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி வெற்றி

வான்கடே: லக்னோ – குஜராத் அணிகள் இடையே இன்று நடந்த ஐபிஎல் போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி, பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. லக்னோ அணியில் தீபக் 55 ரன்களையும், ஆயுஸ் 54 ரன்களையும் அடித்தனர். குஜராத் அணி பந்து வீச்சாளர்களில் முஹமத் சமி 3 விக்கெட்டைகளையும், வருண் … Read more