தமிழகத்தில் இன்று 60% பேருந்துகள் இயங்கும்

சென்னை பொதுமக்கள் மற்றும் மாணவர் நலனுக்காக தமிழகத்தில் இன்று 60% பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தொமுச தெரிவித்துள்ளது.   நேற்று தமிழகத்தில் நடந்த வேலை நிறுத்த போராட்டம் காரனமாக பேருந்துகள் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் இயங்கியதால் மக்கள் பெரிதும் அவதியுற்றனர்.    மாணவர்களால் கல்வி நிலையங்களுக்குச் செல்ல இயலாத நிலை ஏற்பட்டது.   இது குறித்து தொமுச நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். பிறகு அவர்கள் செய்தியாளர்களிடம், “இரண்டு நாட்களாக மத்திய தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்திருந்தன. நேற்று தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தம் வெற்றிகரமாக நடந்தது. சுமார் … Read more

பெட்ரோல் டீசல் விலை இன்றும் உயர்வு

சென்னை பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்றும் உயர்ந்துள்ளதால் மக்கள் கடும் துயரம் அடைந்துள்ளனர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் தினசரி பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றி அமைத்தன.  சமீபகாலமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. ஆயினும் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக தேர்தல் காரணமாக விலை உயர்த்தப்படவில்லை.  தேர்தல் முடிந்த ஒரே வாரத்தில் பெட்ரோல் … Read more

ஐபிஎல் 2022: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி வெற்றி

வான்கடே: லக்னோ – குஜராத் அணிகள் இடையே இன்று நடந்த ஐபிஎல் போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி, பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. லக்னோ அணியில் தீபக் 55 ரன்களையும், ஆயுஸ் 54 ரன்களையும் அடித்தனர். குஜராத் அணி பந்து வீச்சாளர்களில் முஹமத் சமி 3 விக்கெட்டைகளையும், வருண் … Read more

பள்ளி வேன் மோதி மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் சட்டப்படி உரிய நடவடிக்கை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: பள்ளி வேன் மோதி மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ஆழ்வார் திருநகரி தனியார் பள்ளிக்கு பள்ளி கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பி,அடுத்த 24 மணி நேரத்திற்குள் அந்த நோட்டீஸில் கண்ட ஆறு கேள்விகளுக்கு பதில் அளிக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ஆழ்வார் திருநகரில் பள்ளி வேன் மோதி இரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுவன் பலியான விவகாரத்தில் தனியார் பள்ளிக்கு மெட்ரிகுலேஷன் … Read more

இந்த வாரம் துருக்கியில் உக்ரைன் – ரஷ்யா பேச்சு வார்த்தை

கிவ் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே இந்த வாரம் அடுத்த கட்ட பேச்சு வார்த்தை நடைபெற உள்ளது, ரஷ்யப் படைகள் உக்ரைன் மீது போர் தொடுத்து ஒரு மாதத்துக்கும் மேலாக போர் நடந்து வருகிறது.    ரஷ்யப் படைகள்  தாக்குதலால் உக்ரைன் நாட்டின் விமான நிலையங்கள் நொறுக்கப்பட்டுள்ளன.  இதனால் உக்ரைன் நாட்டுக்கு யாரும் செல்ல முடியாத நிலை மற்றும் நாட்டை விட்டு வெளியேறா முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த போரையொட்டி ரஷ்யாவுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் பொருளாதாரத்தடை … Read more

பாகிஸ்தான் : இம்ரான்கான் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்துக்குப் பின்பே வாக்கெடுப்பு

இஸ்லாமாபாத் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது 31 ஆம் தேதி விவாதத்துக்குப் பிறகு வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. பாகிஸ்தானில் ர்கேபோர்ஹு கடுமையான நிதி நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வு நிலவி வருகிறது.  இதற்கு பிரதமர் இம்ரான் கானின் செயல்பாடுகளே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. எனவே எதிர்க்கட்சிகள் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்துள்ளது.  இந்த தீர்மானம் தொடர்பாக, கூட்டத்தொடரைக் கூட்டுமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்து, எதிர்க்கட்சிகள் தேசிய சபையில் … Read more

2021 ஏப்ரல் – டிசம்பர் மாதங்களில் தமிழகத்தில் அன்னிய நேரடி முதலீடு 41.5% அதிகரிப்பு

சென்னை கடந்த ஏப்ரல் – டிசம்பர் மாதங்களில் தமிழகத்தில் அன்னிய நேரடி முதலீடு 41.5% அதிகரித்துள்ளது. இன்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்கமளிப்பு துறை வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி தெரிய வந்துள்ளதாவது: கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான 3-வது காலாண்டில் அந்நிய நேரடி முதலீடு 53 சதவீதம் அதிகரித்து ரூ,9,332 கோடியாக அதிகரித்துள்ளது.  அந்நிய நேரடி முதலீடு வருகையில் தமிழகத்தின் பங்கு 4 சதவீதத்திலிருந்து … Read more

தமிழகத்தில் இன்று 33 பேருக்கு கொரோனா பாதிப்பு  –  28/03/2022

சென்னை தமிழகத்தில் இன்று 33 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,52,681 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 28,896 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 6,54,12,777 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இன்று 33 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 34,52,714 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இன்று ஒருவர் கூட மரணம் அடையவில்லை.  இதுவரை 38,025 பேர் உயிர் இழந்துள்ளனர். இன்று 61 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 34,14,323 பேர் குணம் அடைந்து வீடு … Read more

உத்தரப்பிரதேசத்தில் கணவன் கண் முன்னே மனைவி கூட்டு பலாத்காரம்

முசாஃபர்நகர் பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில் கணவரை மரத்தில் கட்டி வைத்து அவர் கண் முன்னே மனைவியை 4 பேர் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி செய்து வருகிறது.  இங்குப் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிக அளவில் நடைபெறுவதாக புகார்கள் எழுந்துள்ளன.   இதையொட்டி எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.   ஆயினும் உ பி மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்க அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என இங்குள்ள மக்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் முசாபர் … Read more

அபுதாபியில் முதலமைச்சர் முன்னிலையில் ரூ. 3,500 கோடி முதலீட்டில் 3 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது

சென்னை: அபுதாபியில் முதலமைச்சர் முன்னிலையில், லுலு நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ. 3,500 கோடி முதலீட்டில் 3 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. 4நாட்கள் அரசு முறை பயணமாக ஐக்கிய அரபு அமிரகம் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள வர்த்தக பொருட்காட்சியில் தமிழக அரங்கை திறந்து வைத்தார். மேலும் அந்நாட்டு தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து, தமிழகத்துக்கு தொழில்தொடங்க வருமாறு அழைப்பு விடுத்தார். பல நிறுவனங்களுடன் ரூ.1,600 கோடி முதலீடு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தகளில் கையெழுத்திட்டார்.  அதன்பிறகு மேலும், துபாய் … Read more