உத்தரப்பிரதேசத்தில் கணவன் கண் முன்னே மனைவி கூட்டு பலாத்காரம்

முசாஃபர்நகர் பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில் கணவரை மரத்தில் கட்டி வைத்து அவர் கண் முன்னே மனைவியை 4 பேர் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி செய்து வருகிறது.  இங்குப் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிக அளவில் நடைபெறுவதாக புகார்கள் எழுந்துள்ளன.   இதையொட்டி எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.   ஆயினும் உ பி மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்க அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என இங்குள்ள மக்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் முசாபர் … Read more

அபுதாபியில் முதலமைச்சர் முன்னிலையில் ரூ. 3,500 கோடி முதலீட்டில் 3 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது

சென்னை: அபுதாபியில் முதலமைச்சர் முன்னிலையில், லுலு நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ. 3,500 கோடி முதலீட்டில் 3 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. 4நாட்கள் அரசு முறை பயணமாக ஐக்கிய அரபு அமிரகம் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள வர்த்தக பொருட்காட்சியில் தமிழக அரங்கை திறந்து வைத்தார். மேலும் அந்நாட்டு தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து, தமிழகத்துக்கு தொழில்தொடங்க வருமாறு அழைப்பு விடுத்தார். பல நிறுவனங்களுடன் ரூ.1,600 கோடி முதலீடு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தகளில் கையெழுத்திட்டார்.  அதன்பிறகு மேலும், துபாய் … Read more

செர்னோபில் அணுமின் நிலையத்தை கைப்பற்றிய ரஷ்ய படைகள்! உக்ரைன் மக்கள் பீதி…

கீவ்: உக்ரைனின் செர்னோபில் அணுமின் நிலையத்தை ரஷ்ய படைகள் கைப்பற்றி உள்ளன. இதனால், ஏதேனும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக  உக்ரைன் மக்கள் பீதியடைந்துள்ளனர். நேட்டோ விவகாரத்தில் உக்ரைன்மீது ரஷ்யா பிப்ரவரி 24ந்தேதி போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. போர் இன்று 33வது நாளாக தொடர் கிறது. இரு நாட்டு தலைவர்களின் ஈகோ காரணமாக, போர் தொடர்கிறது. சுற்றுலா தலமாகவும், வெளிநாட்டு மாணவர்களை கல்விக்கு ஈர்க்கும் களமாகவும், சூரியகாந்தி எண்ணெய் வித்துகளின் உற்பத்திக் கலனாகவும் அறியப்பட்ட … Read more

பொதுநுழைவுத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்துங்கள்! மாநில பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தல்

டெல்லி: மாநில பல்கலைக்கழகங்களும் பொது நுழைவுத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்துங்கள் என யுஜிசி அறிவுறுத்தி உள்ளது. மத்தியஅரசு நடப்பு கல்வியாண்டு முதல், மத்திய பல்கலைக்கழகங்களின் இளநிலை மாணவர் சேர்க்கைக்கும் நுழைவுத் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும், பிளஸ்2 மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது என்றும் யுஜிசி அறிவித்தது. இந்த நிலையில், மாநில பல்கலைக்கழகங்களிலும் பொது நுழைவுத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்த முன்வர வேண்டும் என பல்கலைக் கழக மானிய குழு அறிவிப்பு விடுத்துள்ளது. … Read more

நாளை தமிழகத்தில் 60 முதல் 80 சதவீதம் வரை பேருந்துகள் இயக்கப்படும்! தொழிற்சங்க கூட்டமைப்பு தகவல்…

சென்னை: தமிழகத்தில் நாளை 60 முதல் 80 சதவீதம் வரை பேருந்துகள் இயக்கப்படும் என தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இன்றைய போராட்டத்தில் சுமார் 10 சதவிகிதம் அளவிலான பேருந்துகள் மட்டுமே இயக்கம் நடைபெற்றது பொதுமக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், நாளை அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பொருளாதார கொள்கைகள், தொழிலாளர் விரோத திட்டங்களுக்கு எதிராக  அகில இந்திய தொழிற்சங்கங்கள் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  2 நாள் … Read more

டெல்லியில் வரும் 31ம் தேதி பிரதமர் மோடியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு..

சென்னை : 3 நாள் பயணமாக டெல்லி செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 31ம் தேதி பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். தலைநகர் டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகமான அண்ணா அறிவாலயம் ஏப்ரல் 2ந்தேதி திறக்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள எதிர்க்கட்சி தலைவர்கள், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, ராகுல்காந்தி மற்றும் பாஜக தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா உள்பட பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக  3 நாள் பயணமாக டெல்லி வரும் 30ம் … Read more

2021ம் ஆண்டு தமிழக வெள்ள சேதங்களுக்கு ரூ. 352.85 கோடி நிதியுதவி! மத்தியஅரசு ஒப்புதல்

சென்னை: கடந்த 2021ம் ஆண்டு தமிழ்நாட்டில் ஏற்பட்ட மழை  வெள்ள சேதங்களுக்காக ரூ. 352.85 கோடி நிதியுதவி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட மழை வெள்ளப்பாதிப்பு குறித்து  அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அதையடுத்து, சாலைகள், வடிக்கால்கள் சீரமைப்பு மற்றும் விவசாயிகளுக்கு முதல்கட்ட நிவாரணம் வழங்குவதற்காக ரூ.300 கோடி ஒதுக்கி முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். மேலும், உதவிகள் வழங்கும் வகையில் மத்தியஅரசிடம் … Read more

சென்னையில் பரிதாபம்: தனியார் பள்ளி வளாகத்தின் உள்ளேயே வேன் மோதி மாணவர் உயிரிழப்பு…

சென்னை: சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், அந்த பள்ளியைச் சேர்ந்த வேன் மோதி பள்ளி சிறுவன் உயிரிழந்தான். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து வேன் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை வளசரவாக்கம் அருகே உள்ள ஆழ்வார்திருநகர் பகுதியில் செயல்பட்டு வருகிறது ஸ்ரீவெங்கடேஷ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி. இங்கு ஆயிரக்கணக்கான மாணாக்கர்கள் பயின்று வருகின்றனர். மாணவர்களை அழைத்து வர பள்ளி நிர்வாகம் வேன்கள்  இயக்கி வருகிறது.  அதுபோல இன்று காலை மாணாக்கர்களை ஏற்றி வந்த வேன் … Read more

முதல்வர் ஸ்டாலினின் துபாய் பயணத்திற்கான தனி விமான செலவை திமுக ஏற்கும்! தங்கம் தென்னரசு

சென்னை: 4 நாட்கள் அரசுமுறை பயணமாக தனி விமானத்தில் குடும்பத்தினருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் சென்ற விவகாரம் சர்ச்சையாக்கப்பட்ட நிலையில், முதல்வர் ஸ்டாலினின் துபாய் பயணத்திற்கான தனி விமான செலவை திமுக ஏற்கும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தார். தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில்,  துபாயில் நடைபெற்று வரும் சர்வதேச தொழில் கண்காட்சியில் பங்கேற்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துபாய் புறப்பட்டு சென்றார்.  முதல்வரான பின்னர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ள உள்ள முதல் வெளிநாட்டு … Read more

சென்னையில் அரசு பேருந்துகள் இயக்கம் முடங்கியதால், மின்சாரம் மற்றும் மெட்ரோ ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்…

சென்னை: நாடு முழுவதும் 2நாள் நடைபெறும் வேலைநிறுத்தத்தில் தமிழக அரசு போக்குவரத்துறை ஊழியர்கள் கலந்துகொண்டுள்ளதால், சென்னை உள்பட மாநிலம் முழுவதும் அரசு பேருந்துகள் இயக்கம் முடங்கி உள்ளது. சென்னையில் பேருங்கள் இயக்கப்படாததால், பொதுமக்கள் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், கிடைக்கும் ஷேர் ஆட்டோக்கள் மூலம் ரயில் நிலையங்களுக்கு சென்று, ரயில்கள் மூலம் கல்லூரிகளுக்கும், வேலைகளுக்கும் சென்று வருகின்றனர். இதனால்  மின்சாரம் மற்றும் மெட்ரோ ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் … Read more