மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்காலம் நீட்டிப்பு

சென்னை தமிழக ஆளுநர் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி காலத்தை நீட்டித்துள்ளார். தமிழகத்தின் புகழ் பெற்ற பலகலைக்கழகங்களில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகமும் ஒன்றாகும்.  இங்கு பிச்சுமணி துணை வேந்தராக உள்ளார்.  இவரது பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. ஆனால் இன்று வரை நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு  புதிய துணை வேந்தர் நியமிக்கப்படவில்லை.  இன்று தமிழக ஆளுநர் ஆர் என் ரவி ஒரு புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவின்படி தமிழக ஆளுநர் நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் … Read more

தஞ்சை மாணவி தற்கொலை :  குழந்தையைத்  தற்கொலைக்குத் தூண்டியதாக சிபிஐ வழக்குப் பதிவு

சென்னை சிபிஐ தஞ்சை மாணவி தற்கொலை குறித்து குழந்தைகளைத் தற்கொலைக்குத் தூண்டியதாகா வழக்குப்  பதிந்துள்ளது, தமிழகத்தில் அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் வடுகபாளையத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவரது முதல் மனைவி இறந்துவிட்ட நிலையில், முதல் மனைவிக்குப் பிறந்த மகளைத் தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றியம் மைகேல்பட்டியில் உள்ள தனியார்ப் பள்ளியொன்றில் சில ஆண்டுகளுக்கு முன்னர் 8-ஆம் வகுப்பில் சேர்த்துள்ளார் அந்த மாணவி பள்ளியின் அருகில் உள்ள செயின்ட் மைக்கேல் மகளிர் விடுதியில் தங்கி படித்துள்ளார்.  அவர் இந்த … Read more

போனி கபூர் கம்பெனிக்காக மேலும் ஒரு படத்திற்கு அஜித் ஒப்பந்தம்

AK61 – அஜித் குமாரின் 61 வது படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. போனி கபூர் தயாரிக்க இருக்கும் இந்த படத்தை எச். வினோத் இயக்க இருக்கிறார். இது தொடர்பான அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள போனி கபூர் AK61 படப்பிடிப்பிற்கு ஆயத்தமாவதாக குறிப்பிட்டுள்ளார். Prep mode on #AK61 pic.twitter.com/UOqGUrZwgK — Boney Kapoor (@BoneyKapoor) February 15, 2022 ஏற்கனவே, நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களை … Read more

விவசாயிகள் போராட்டத்தின் போது செங்கோட்டையில் அத்துமீறி நுழைந்த நடிகர் தீப் சித்து சாலை விபத்தில் உயிரிழந்தார்

2021 குடியரசு தினத்தன்று செங்கோட்டையில் அத்துமீறி நுழைந்து விவகாரத்தில் தொடர்புடைய நடிகர் தீப் சித்து அரியானாவில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். பஞ்சாபி மொழி படங்களில் நடித்த நடிகர் தீப் சித்து, இன்று இரவு ஹரியானாவில் நடந்த சாலை விபத்தில் இறந்ததாக சோனேபத் போலீசார் உறுதிப்படுத்தினார். குண்ட்லி-மனேசர்-பல்வால் விரைவுச்சாலையில் இரவு 9 மணியளவில் இந்த விபத்து நடந்தது. இதில் பயணம் செய்த மூன்று பேரில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு … Read more

தமிழகத்தில் இன்று 1,325 பேருக்கு கொரோனா பாதிப்பு  – 15/02/2022

சென்னை தமிழகத்தில் இன்று 1,325 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,39,221 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 85,969 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 6,34,77,508 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இன்று 1,325பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 34,39,221 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இன்று 14 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 37,946 பேர் உயிர் இழந்துள்ளனர். இன்று 5,894 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 33,69,907 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி … Read more

இலங்கை – இந்தியா கிரிக்கெட் போட்டி அட்டவணை மாற்றப்பட்டுள்ளது

புனே இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி அட்டவணை மாற்றப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணியுடன் கிரிக்கெட் போட்டியில்  கலந்துக் கொள்ள உள்ளது.   முன்பு இந்தியா மற்றும் இலங்கை இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது, பிப்ரவரி 25ந்தேதி பெங்களூருவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.  டி20 போட்டியானது, வருகிற மார்ச் 13ந்தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த அட்டவணையில் மாற்றம் செய்து பிசிசிஐ வெளியிட்டுள்ளது.   இந்த மாற்றத்தின்படி,  3 போட்டிகள் … Read more

மேடையில் தலைப்பாகை அணிவதால் யாரும் சர்தார் ஆக மாட்டார்கள்! பஞ்சாப் தேர்தல் பிரசாரத்தில் பிரியங்கா காந்தி

சண்டிகர்: பஞ்சாப் சட்டமன்ற தேர்தலையொட்டி, மாநில காங்கிரஸ் முதல்வர் சன்னியுடன்  காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தீவிரமாக வாக்கு வேட்டை நடத்தி வருகிறார். அப்போது, மேடையில் தலைப்பாகை அணிவதால் யாரும் சர்தார் ஆக மாட்டார்கள் என்று பிரதமர் மோடி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை கடுமையாக தாக்கி பேசினார். 117 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தல் வரும்20ம் தேதி நடைபெற உள்ளது. இதன்காரணமாக தேர்தல் பிரசாரம் 18ந்தேதி மாலையுடன் ஓய்வு பெறுகிறது. அங்கு ஆட்சியை … Read more

முன்னாள் மத்திய சட்ட அமைச்சர் அஸ்வனி குமார் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்

“தற்போதைய சூழ்நிலையில் எனது கண்ணியத்திற்கு ஏற்ப கட்சிக்கு வெளியில் இருந்து செயலாற்றுவதே சிறந்தது என முடிவுக்கு வந்துள்ளேன்” என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு முன்னாள் மத்திய சட்ட அமைச்சர் அஸ்வனி குமார் கடிதம் எழுதியுள்ளார். 2012-2013ல் மன்மோகன் சிங் அமைச்சரவையில் மத்திய சட்ட அமைச்சராகப் பணியாற்றிய அஸ்வனி குமார், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளார். இதன் மூலம் காங்கிரஸ் கட்சியுடனான தனது 46 ஆண்டுகால தொடர்பை முறித்துக் கொண்டார். காங்கிரஸ் தலைவர் சோனியா … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வங்கிகளுக்கு 19ந்தேதி விடுமுறை அறிவிப்பு!

சென்னை: தமிழ்நாட்டில் வரும் 19ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, தேர்தல் நடக்க உள்ள பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு வரும் 19ஆம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது . இதுகுறித்து, மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுமம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தமிழகத்தில் , பேரூராட்சிகள் , நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு , வரும் 19 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது . வாக்காளர்கள் ஓட்டு போட வசதியாக , தேர்தல் நடைபெறும் பகுதிகளில் , … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி சென்னையில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்! மாவட்ட கலெக்டர்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி சென்னையில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என சென்னை மாவட்ட கலெக்டர் ஜெ.விஜயாராணி அறிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகளைச் சேர்ந்த  12,838 வார்டு களுக்கு  பிப்ரவரி மாதம்  19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.  அதைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதையொட்டி, டாஸ்மாக் கடைகள்  பிப்ரவரி 17 … Read more