தேர்வுக்கு முன்பே வெளியான திருப்புதல் தேர்வு வினாத்தாள்! திருவண்ணாமலையில் பரபரப்பு…

திருவண்ணாமலை: தமிழ்நாட்டில் இன்று 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பள்ளி மாணாக்கர்களுக்கு இன்று திருப்புதல் தேர்வு தொடங்கி உள்ள நிலையில், தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே சமுக வலைதளங்களில் லீக்கானது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.  10ம் வகுப்பு அறிவியல் மற்றும் 12ம் வகுப்பு கணிதம் பாடத்தின் கேள்வித்தாள் சமூக வலைதளங்களை வெளியானது கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ள நிலையில்,   உரிய விசாரணை நடத்த திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் காவல் துறையில் புகாரளித்துள்ளார். கொரோனா தொற்று பரவல் … Read more

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை விவகாரம்: மாணவியின் தந்தைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

தஞ்சை: மதமாற்றம் செய்ய வலியுறுத்தியதாக வீடியோ வெளியிட்டு, தற்கொலை செய்துகொண்ட தஞ்சை பள்ளி மாணவி லாவண்யா  தற்கொலை தொடர்பான வழக்கில், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவுக்கு பதில் அளிக்க மாணவியின் தந்தைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்கவும் மறுத்து விட்டது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள வடுகப்பாளையத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி லாவண்யா,  தஞ்சை மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ பள்ளியில் விடுதியில் தங்கியிருந்து படித்து வந்தார். இவர், ஜனவரி 9-ஆம் தேதி … Read more

சென்னை முதலை பண்ணையில் இருந்து 1000 முதலைகள் குஜராத்தில் உள்ள ரிலையன்ஸ் முதலை பண்ணைக்கு மாற்றம்!

சென்னை: மத்தியஅரசுக்கு சொந்தமான ஈசிஆர் முதலை பண்ணையில் இருந்து 1000 முதலைகள் குஜராத்தில் உள்ள ரிலையன்ஸ் முதலை பண்ணைக்கு மாற்றம் செய்யப்படுகிறது. முதலைகளை பராமரிக்க போதிய நிதி இல்லாததால்,  நிதி நெருக்கடி காரணமாக, இந்ந மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், வடநெம்மேலி பகுதியில் மாபெரும் முதலைப் பண்ணை செயல்பட்டு வருகிறது. இங்கு 17 வகைகளை சேர்ந்த 2 ஆயிரத்துக் கும் மேற்பட்ட முதலைகள் கடந்த பல ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் இருந்து … Read more

படுக்கையறையில் மென்மையாக நடந்துகொள்வதே நீண்ட ஆயுளின் ரகசியம் : ஜப்பானிய காம சூத்திரம்

ஜப்பான் அரச குடும்பமும் அதன் மருத்துவர்களும் ஓரியண்டல் எனும் கிழக்காசிய மருத்துவத்தை 1000 ஆண்டுகளுக்கும் மேலாக பொக்கிஷமாக காத்துவருகின்றனர். இதுகுறித்து ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக பேராசிரியர் டெனிஸ் நோபல் எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரையில் கூறியிருப்பதாவது : இந்தியா, சீனா, கொரியா மற்றும் வேறு சில இடங்களில் இருந்து பெறப்பட்ட மூலங்களைத் தொகுத்து ‘மருத்துவ மருந்துகளின் இதயம்’ என்ற பெயரில் 30 பகுதிகளைக் கொண்ட மருத்துவ பொக்கிஷத்தை டோக்கியோ அரண்மனையில் உள்ள காப்பகத்தில் பாதுகாத்து வருகின்றனர். இதில் பல அசல் … Read more

இன்று காலை ஏவப்பட்ட பி எஸ் எல் வி சி 52 ராக்கெட் சென்னையில் தெரிந்தது

ஸ்ரீஹரிகோட்டா ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை பி எஸ் எல் வி சி 52 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. இன்று காலை ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து பி எஸ் எல் வி சி 52 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.  இந்த ராக்கெட் மூலம் இ ஓ எஸ் 04 என்னும் செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது/   இந்த ராக்கெட் சென்னையில் தெரிந்தது குறிப்பிடத்தக்கதாகும். இந்த செயற்கைக் கோள் மூலம் புவி கண்காணிப்பு, ராணுவ  பாதுகாப்பு ஆகிய … Read more

நாளை முதல்  சென்னையில் மின்சார ரயில்கள் 100% இயக்கப்படும்

சென்னை கொரோனா பரவல் குறைந்து வருவதால் நாளை முதல் சென்னையில் மின்சார ரயில்கள் 100% இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை நகரில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக புறநகர் ரெயில் சேவை 100 சதவீதம் இயங்க வில்லை.  மேலும் புறந்கர் ரயிலில் பயணிக்க இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை தெற்கு ரெயில்வே விதித்து இருந்தது.  சமீபத்தில் சில வாரங்களாகத் தொற்று பரவல் மீண்டும் இறங்கு முகம் கண்டு வருகிறது. தமிழக அரசு … Read more

மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நாளை வகுப்புக்கள் தொடக்கம்

சென்னை நாளை முதல் மருத்துவக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புக்கள் தொடங்குகிறது/ தமிழக மருத்துவக் கல்வி இயக்ககம் அனைத்து வருத்துவக் கல்லூரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.  அந்த சுற்றறிக்கையில், “நாளை முதல் தேசிய மருத்துவ ஆணையம் வழிகாட்டுதல் படி, 2021- 22ம் ஆண்டில் மருத்துவ  படிப்பில் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்க வேண்டும். மேலும் கல்லூரி விடுதிகளில் கொரோனா தடுப்பு  நடவடிக்கைகள் பின்பற்ற வேண்டும். உணவு கூடங்களில் 50 சதவீதம்  மட்டுமே, மாணவர்கள் இருக்க வேண்டும்.  கல்லூரி … Read more

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் மீஞ்சூரில் 118 நாற்காலிகள் பறிமுதல்

மீஞ்சூர் மீஞ்சூர் பேரூராட்சி தேர்தலில் வாக்காளர்களுக்கு அளிக்க வைக்கப்பட்டிருந்த 118 நாற்காலிகளைப் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்/. வரும் 19 ஆம் தேதி தமிழகம் எங்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற உள்ளன.   அனைத்து வேட்பாளர்களும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.   தேர்தல் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால் பறக்கும் படையினர் தீவிரமாக வேட்டை நடத்தி வாக்காளர்களுக்கு அளிக்க வைக்கப்பட்டுள்ள பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர. சென்னையை அடுத்த மீஞ்சூர் பேரூராட்சியில் அனைத்து வார்டுகளுக்கும் தேர்தல் நடைபெறுவதால் அங்கு … Read more

தமிழகத்தில் இன்று 2,296 பேருக்கு கொரோனா பாதிப்பு  – 13/02/2022

சென்னை தமிழகத்தில் இன்று 2,295 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,36,262 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,02,916 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 6,32,95,780 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இன்று 2,296 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 34,36,262 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இன்று 11 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 37,918 பேர் உயிர் இழந்துள்ளனர். இன்று 8,329 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 33,56,648 பேர் குணம் … Read more

பாஜக செய்தி தொடர்பாளரான எடப்பாடி பழனிச்சாமி : திருமாவளவன் விமர்சனம்

சென்னை பாஜகவின செய்தி தொடர்பாளர் போல் முன்னாள் முதல்வர் எடப்பாடி  பழனிச்சாமி பேசுவதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவருமான எடப்பாடி பழனிசாமி பாஜகவின் கோஷமான ஒரே நாடு ஒரே தேர்தல் எனப் பேசி உள்ளார்.  இது கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  இன்று  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று செய்தியாளர்கள் சந்தித்தார் அப்போது அவர் செய்தியாளர்களிடம், ”அதிமுகவை“பாஜக தான் அதிமுகவை இயக்குகிறது என்று தொடர்ந்து நாங்கள் விமர்சித்து வருகிறோம். தற்போது அதை … Read more