திமுக – பாஜக – திமுக: மீண்டும் திமுகவுக்கு தாவினார் ஆயிரம் விளக்கு தொகுதி முன்னாள் எம்எல்ஏ கு.க.செல்வம்…
சென்னை: ஆயிரம் விளக்கு தொகுதி முன்னாள் எம்எல்ஏ கு.க.செல்வம். மீண்டும் திமுகவுக்கு தாவினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ கு.க.செல்வம் கடந்த 2020ம் ஆண்டு, திடீரென டெல்லி சென்று பாஜக தலைவர்களை சந்தித்தது சர்ச்சையானது. இதையடுத்து, அவரிடம் கட்சி தலைமை விளக்கம் கேட்டது. இதற்கு பதில் அளித்த கு.க.செல்வம், எதிர்க்கட்சித் தலைவர்களை சந்திப்பது தவறா என்று கேள்வியும் எழுப்பினார். தைரியம் இருந்தால் தன் மீது தி.மு.க தலைமை நடவடிக்கை … Read more