அரசு விரைவு பேருந்துகள் உணவு இடைவேளைக்கு எந்தெந்த இடங்களில் நிறுத்த வேண்டும்! பட்டியல் வெளியீடு

சென்னை: அரசு  விரைவு பேருந்துகள், வழியில் பயணிகள் சிற்றுண்டி மற்றும் உணவுகள் அருந்த எந்தெந்த உணவகங்களில் நிறுத்தலாம் என்ற பட்டியலை அரசு போக்குவரத்துக்கு துறை வெளியிட்டுள்ளது. தலைநகர் சென்னையில் இருந்து தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும் விரைவு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகள், உணவு இடைவேளையின்போது, தரமற்ற சாலையோர உணவகங்களில் நிறுத்தி விடுவதாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து  ஆய்வு செய்த போக்குவரத்துறை அதிகாரிகள், அரசு பேருந்துகள் உணவு இடைவேளைக்காக நிறுத்தும் இடங்களை ரத்து செய்தனர். இந்த … Read more

பாஜக ஆளும் கர்நாடகாவில் ஹிஜாப் அணியத் தடை – ராகுல் கண்டனம்

கர்நாடகா: பாஜக ஆளும் கர்நாடகாவில் ஹிஜாப் அணியத் தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் கண்டனம் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் உள்ள கல்லூரி ஒன்றில் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்து வகுப்பிற்கு வருவது தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனை கண்டிக்கும் வகையில், தற்போது கர்நாடகாவில் குந்தபுரா பகுதியில் இஸ்லாமிய மாணவர்களும் போராட்டத்தில் குதித்து உள்ளனர். பியூ கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகளுக்கு ஆதரவாக இஸ்லாமிய மாணவர்கள் களமிறங்கி போராடி வருகிறார்கள். மாணவிகளை உள்ளே அனுமதிக்கவில்லை என்றால் நாங்களும் வர மாட்டோம். … Read more

அதிமுக – பாஜக நாடகத்துக்கு மக்கள் பதிலடி தருவார்கள் – துரைமுருகன்

சென்னை: அதிமுக – பாஜக நாடகத்துக்கு மக்கள் பதிலடி தருவார்கள் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், அதிமுக – பாஜக நாடகத்துக்கு மக்கள், மாணவ சமுதாயம் பதிலடி தருவார்கள் என்றும், நீட் தேர்வு தடுத்து நிறுத்தப்பட்டதுடன் திமுக ஆட்சியில் இருந்தவரை நீட் நுழையவில்லை என்றும் அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், நீட் விவகாரத்தில் மீண்டும், மீண்டும் பொய் சொல்லி வரும் ஓபிஎஸ் மக்களை ஏமாற்ற துடிக்கிறார் என்று குற்றம் சாட்டினார்.

நீட் விலக்கிற்கு அதிமுக ஆதரவு! முதல்வர் ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் கடிதம்…

சென்னை: நீட் விலக்கு பெறுவதற்காக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அதிமுக ஆதரவு தரும்  என துணை எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி உள்ளார். நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பிய அனுப்பியது தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி அதிமுக உள்பட 13 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அனைத்துக்கட்சி கூட்டத்தை புறக்கணிப்பதாக பாஜக  ஏற்கனவே அறிவித்து விட்டது. இந்த நிலையில், இன்று … Read more

ஜஸ்டின் லங்கர் ராஜினாமா: ஆஸ்திரேலியா கிரிக்கெட்அணிக்கு புதிய இடைக்கால கோச் நியமனம்,,,

சிட்னி: ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜஸ்டின் லங்கர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, புதிய இடைக்கால தலைமை பயிற்சியாளராக ஆண்ட்ரூ மெக்டொனால்ட் நியமனம் செய்து ஆஸ்திரேய கிரிக்கெட் வாரியம் அறிவித்து உள்ளது. ஆஸ்திரேலியா ஆண்கள் அணியின் தலைமை பயிற்சியாளராக கடந்த 2018 ஆம் ஆண்டு  ஜஸ்டின் லாங்கர் இருந்து வருகிறார். இவரது பதவி காலம் ஜூன் மாதம் வரை உள்ளது. இதற்கிடையில் அணி வீரர் டேரன்லெமன் பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில்  பதவி விலகிய நிலையில், தலைமை … Read more

சென்னை மாநகராட்சி தேர்தல்: 200 வார்டுகளுக்கு 3 திருநங்கைகள் உள்பட 3,456 பேர் வேட்புமனு தாக்கல்…

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி,  12,838 உள்ளாட்சி பதவிகளுக்கு 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்  மனு தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுக்கு 3,456 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களில் 3 திருநங்கைகளும் உள்ளனர். தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்  21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகள் உள்ளன. இவற்றில் 12,838 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான தேர்தல் பிப்ரவரி மாதம் 19ம் தேதி … Read more

நீட் விலக்கு: தமிழக முதல்வர் தலைமையில் இன்று மீண்டும் அனைத்துக்கட்சி கூட்டம்…

சென்னை: நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்றதும், நீட் விலக்கு தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட்டு, சட்டமன்றத்தில் கடந்த ஆண்டு (2021) செப்.13-ம் தேதிசட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, அன்றே குடியரசுத் தலைவர் ஒப்புதலை பெறுவதற்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கதாமதப்படுத்தியதால், முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து … Read more

வரும் 2026 ஆம் வருடம் மதுரை எய்ம்ஸ் பணிகள் முடிவடையும் :  மத்திய அமைச்சர்

டில்லி வரும் 2026 ஆம் வருடம் அக்டோபர் மாதம் மதுரை எய்ம்ஸ் பணிகள் முடிவடையும் என் மக்களவையில் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். மதுரையில் எய்ம்ஸ்  மருத்துவமனை பணிகள் வெறும் சுற்றுச் சுவருடன் நிறைவு பெற்றுள்ளது.   இது சமீபத்திய தமிழக சட்டசபைத் தேர்தலில் பேச்சுப் பொருளாக விளங்கியது.    இந்த தேர்தலில் பாஜக கூட்டணி தோல்விக்கு இதுவும்  ஒரு காரணம் என கூறப்பட்டது.  இது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் மக்களவையில் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதிலாக மத்திய … Read more