உலகக் கோப்பையை வென்ற இளையவர் கிரிக்கெட் அணிக்கு பிசிசிஐ ரொக்கப்பரிசு

மும்பை உலகக் கோப்பையை வென்ற இந்திய இளையவர் கிரிக்கெட் அணிக்கு பிசிசிஐ ரொக்கப் பரிசுகளை அறிவித்துள்ளது. மேற்கு இந்திய தீவுகளில் 19 வயதுக்குப்பட்டோருக்கான இளையவர் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டி இறுதிச் சுற்று நேற்று ஆண்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடந்தது.  இந்த போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடின,  இதில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு  செய்தது. இங்கிலாந்து அணி 44.5 ஓவர்களில் 189 ரன்கள் எடுத்து அனைத்து … Read more

விஷ்ணு விஷாலின் ‘எப்.ஐ.ஆர்.’ திரைப்படத்துக்கு இஸ்லாமிய அமைப்பு எதிர்ப்பு!

“நடிகர் விஷ்ணு விஷால் தயாரித்து நடித்துள்ள எப்.ஐ.ஆர். திரைப்படம் இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கிறது” என இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் தடா ரஹீம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். விஷ்ணு விஷால் நடித்து தயாரிக்க, மனு ஆனந்த இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் எப்.ஐ.ஆர். இப்படத்தை வரும் 11ம் தேதி தமிழ்நாடு முழுதும் திரையரங்கில், உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிடுகிறது. இந்நிலையில், இந்திய தேசிய லீக் கட்சித் தலைவர் தடா ரஹீம், எப்.ஐ.ஆர். படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். … Read more

தரமற்ற உணவு பொருட்களா? உடனே திருப்பி அனுப்ப ரேசன் கடை ஊழியர்களுக்கு உத்தரவு…

சென்னை: ரேசன் கடைகளில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் உணவு பொருட்கள் தரமற்ற நிலையில், அதை உடனே திருப்பி அனுப்பலாம் என ரேசன் கடை ஊழியர்களுக்கு தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ரேசன் கடைகளில் வழங்கப்படும் உணவுபொருட்கள் தரமற்று உள்ளதாக ஏராளமான புகார்கள் எழுந்துள்ளன. ஏற்கனவே தமிழகஅரசு வழங்கிய பொங்கல் பரிசு தொகுப்பிலும் தரமற்ற பொருட்கள் இருந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ரேஷன் கடைகளுக்கு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் இருந்து வரும் உணவு பொருட்கள் … Read more

நாடு முழுவதும் உள்ள பின்தங்கிய மாவட்டங்களில் 40 புதிய மருத்துவ கல்லூரிகள்! மத்திய அமைச்சர் தகவல்

டெல்லி: நாடு முழுவதும் உள்ள பின்தங்கிய மாவட்டங்களில் 40 புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படும்  என நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த  மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது. இன்றைய மக்களை அமர்வின்போது, சுகாதார கட்டமைப்பு மேம்பாடு குறித்து உறுப்பினர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார் பதில் அளித்தார். அப்போது, சுகாதார கட்டமைப்பு மேம்பாடு உயர்த்தப்பட்டு வருவதாகவும்,  நாட்டின் பின்தங்கிய மாவட்டங்களின் வளர்ச்சிக்காக  மருத்துவக்கல்லூரிகள் … Read more

உலகின் இரண்டாவது பெரிய சிலை: தெலுங்கானாவில் 216 அடி உயர ராமானுஜர் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி…

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலம் முச்சிந்தலாவில் அமைக்கப்பட்டுள்ள  216 அடி உயர ராமானுஜர் சிலையை பிரதமர் மோடி இன்று மாலை திறந்து வைத்தார். தெலங்கானா மாநிலம் ஹைதராபாதின் புறநகர் பகுதியான ஷம்ஷாபாதில் ரூ.1,000 கோடி செலவில் பஞ்சலோகத்திலான பிரமாண்டமான ராமானுஜர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஜீயர் அறக்கட்டளையால் ஐதராபாத்தில் உள்ள சம்ஷாபாத்தில் உள்ள ஸ்ரீராம் நகரில் உள்ள ஜீவா ஆஸ்ரமத்திற்கு அருகில் ராமாநுஜரின் 1,000-வது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் இந்த சிலை உருவாக்கப்பட்டு உள்ளது. 45 ஏக்கர் … Read more

தீவிர சிகிச்சையில் கானக் குயில் லதா மங்கேஷ்கர்…

மும்பை: லதா மங்கேஷ்கர் தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இன்று பிப்ரவரி 5 ஆம் தேதி அவரது உடல்நிலை மோசமடைந்தது, மேலும் அவர் தொடர்ந்து ICU வில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கிறார். கடந்த மாதம் சிறிது முன்னேற்றம் காணப்பட்ட நிலையில், இன்று அதிகாலை லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மோசமடைந்தது. புகழ்பெற்ற பாடகர் தீவிர சிகிச்சையில் தொடர்ந்து இருக்கிறார். லதா மங்கேஷ்கர் மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஜனவரி 8 அன்று லதா மங்கேஷ்கருக்கு … Read more

05/02/2022-7.30 PM: தமிழ்நாட்டில் இன்று மேலும் 7,524 பேருக்கு கொரோனா பாதிப்பு..! – முழு விவரம்…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 7,524 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. தினசரி பாதிப்பு 8 ஆயிரத்துக்கு கீழே குறைந்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளத. அதிக பட்சமாக சென்னையில் 1223 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று இரவு 7.30 மணி அளவில் வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழ்நாட்டில் இன்று மட்டும் 1,26,701 மாதிரிகள் பரிசோதனை செய்யபட்டுள்ளது. மொத்தமாக தமிழகத்தில் 6,24,01,480 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாநிலத்தில் இன்று புதிதாக மேலும்  … Read more

தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் 8ந்ததி கூடுகிறது! சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் 8ந்ததி கூடுகிறது என்று சபாநாயகர் அப்பாவு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அன்றை யதினம் காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ரவி திருப்பி அனுப்பிய நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து இன்று முதல்வர் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில், மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பும் வகையில் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடரை கூட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. … Read more

அரசு விரைவு பேருந்துகள் உணவு இடைவேளைக்கு எந்தெந்த இடங்களில் நிறுத்த வேண்டும்! பட்டியல் வெளியீடு

சென்னை: அரசு  விரைவு பேருந்துகள், வழியில் பயணிகள் சிற்றுண்டி மற்றும் உணவுகள் அருந்த எந்தெந்த உணவகங்களில் நிறுத்தலாம் என்ற பட்டியலை அரசு போக்குவரத்துக்கு துறை வெளியிட்டுள்ளது. தலைநகர் சென்னையில் இருந்து தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும் விரைவு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகள், உணவு இடைவேளையின்போது, தரமற்ற சாலையோர உணவகங்களில் நிறுத்தி விடுவதாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து  ஆய்வு செய்த போக்குவரத்துறை அதிகாரிகள், அரசு பேருந்துகள் உணவு இடைவேளைக்காக நிறுத்தும் இடங்களை ரத்து செய்தனர். இந்த … Read more