உ.பி. முதல்கட்ட தேர்தலில் 60.17 % வாக்குப்பதிவு: பரபரப்பை ஏற்படுத்திய யோகி போலவே உடை அணிந்த வாலிபர்… வீடியோ

லக்னோ: உ.பி.யில் நேற்று நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் 60.17 % வாக்குப்பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், அங்குள்ள வாக்குச்சாவடி ஒன்றில், யோகி ஆதித்யநாத் போலவே உடை அணிந்து வாலிபர் ஒருவர் வாக்களித்த வந்த சம்பவம் பரபரப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தல் 7 கட்டங்களாக  நடக்கிறது.  முதல்கட்ட தேர்தல் நேற்று (பிபரவரி 10ந்தேதி) 11 மாவட்டங்கள் அடங்கிய 58 தொகுதிகளில் நடைபெற்றது.  காலை 7 … Read more

ஒரே மாதத்தில் 54% சிறார்களுக்குத் தடுப்பூசி போட்ட மகாராஷ்டிரா

மும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரே மாதத்தில் 15-18 வயதுடைய சிறார்கள் 60.7 லட்சம் பேரில் 54% பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது சென்ற மாதம் 3 ஆம் தேதி முதல் 15-18 வயதான சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது.    இவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி போடப்படுகிறது.   கோவாக்சின் தடுப்பூசி இரு டோஸ்களுக்கு இடையே 28 நாட்கள் இடைவெளி இருந்தால் போதும் என்பதால் தற்போது சிறார்களுக்கு 2 ஆம் டோஸ் ஊசியும் போடப்படுகிறது/ மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரே மாதத்தில் … Read more

உ.பி. சட்டமன்ற முதல்கட்ட தேர்தல்: மாலை 3 மணி வரை 50%க்கும் குறைவான வாக்குப்பதிவு…

லக்னோ: உ.பி. சட்டமன்ற தேர்தல் முதல்கட்ட வாக்குப்பபதிவு இன்று நடைபெற்று வருகிறது. காலை விறுவிறுப்பாக தொடங்கிய வாக்குப்பதிவு முற்பகல் முதல் குறைவாகவே பதிவாகி வருகிறது.  மாலை 3 மணி வரை 50%க்கும் குறைவான வாக்குப்பதிவு நடந்துள்ளது. 403 தொகுதிகளை கொண்ட  உத்தரபிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி பிப்ரவரி 10, 14, 20, 23, 27, மார்ச் 3, 7 ஆகிய தேதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. … Read more

இந்தியா மதசார்பற்ற நாடா? மத ரீதியாக பிளவுபட்ட நாடா? சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: இந்தியா ஒரு மதசார்பற்ற நாடா? மத ரீதியாக பிளவுபட்ட நாடா? என்று கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதி மன்றம் நாடு முக்கியமா? மதம் முக்கியமா என்று காட்டமாக கூறியுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர், இந்து கோவில்களில் மற்ற மதத்தில் நுழையக்கூடாது என வாசலில் போர்டு வைக்க உத்தரவிட வேண்டும் என பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற  பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி அமர்வில் இன்று … Read more

வேட்பாளர் தற்கொலை: காஞ்சிபுரம் 36 வது வார்டு தேர்தல் ஒத்திவைப்பு…

காஞ்சிபுரம் : வேட்பாளர் தற்கொலை காரணமாக காஞ்சிபுரம் 36 வது வார்டு தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்  பிப்ரவரி மாதம் 19ம் தேதி நடைபெறுகிறது.  அதைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த தேர்தலானது, 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகளைச் சேர்ந்த12,838 வார்டுகளுக்கு நடைபெற உள்ளது. இதில் சில வார்டு தேர்தல்கள் ஒத்தி … Read more

இஸ்ரோ இதுவரை 36 நாடுகளின் செயற்கைக்கோள்களை ஏவியுள்ளது! நாடாளுமன்றத்தில் தகவல்…

டெல்லி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ  இதுவரை 36 நாடுகளின் செயற்கைக்கோள்களை விண்ணில் வெற்றிகரமாக ஏவி சாதனை புரிந்துள்ளது என நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. உலக வல்லரசு நாடுகளுக்கு இணையாக செயற்கை கோள்களை செலுத்துவதில், இஸ்ரோவும் தீவிரமாக செயலாற்றி வருகிறது. சந்திரனுக்கு ஏற்கனவே விண்கலத்தை அனுப்பிய நிலையில், இந்த ஆண்டு இறுதியில் மீண்டும் சத்திரயான்3 விண்கலத்தை அனுப்ப தயாராகி வருகிறது. இதற்கிடையில் வரும் 14ந்தேதி பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த திட்டமிட்டு உள்ளது. இதுமட்டுமின்றி  இந்திய … Read more

ஹிஜாப்  வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு! கர்நாடக உயர்நீதி மன்றம்…

பெங்களூரு: ஹிஜாப்  வழக்கில் எந்தவித உத்தரவையும் பிறப்பிக்காமல் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்படுவதாக கர்நாடக உயர்நீதி மன்றம் தெரிவித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் பள்ளி , கல்லூரிகளில் சமத்துவத்தை பின்பற்றும் வகையில் ஒரே சீருடை சட்டம் அமல்படுத்த அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், அதை ஏற்க மறுத்து, உடுப்பி அரசு பி.யூ மகளிர் கல்லூரியில் இஸ்லாமிய பெண்கள் சிலர் ஹிஜாப் அணிந்து வந்தனர். அவர்களை கல்லூரிக்குள் அனுமதிக்க நிர்வாகம் மறுத்த நிலையில், அவர்கள்  கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து ஹிஜாப் அணிந்து … Read more

தமிழகத்தில் பிப்.26 ல் புத்தகமில்லா தினம் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் பிப்.26ஆம் தேதி புத்தகமில்லா தினம் கடைபிடிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 6 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பிப்.26ஆம் தேதி புத்தகமில்லா தினம் கடைபிடிக்கப்படுகிறது. பள்ளிகளுக்கு புத்தகங்கள் எடுத்துச் செல்வதை விடுத்து அனுபவங்கள் மூலம் வாழ்க்கை கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாடித்தோட்டம், மூலிகைத் தாவர வளர்ப்பு, பாரம்பரியக் கலைகள் குறித்து புத்தகமில்லா தினத்தில் பயிற்சி கொடுக்கப்படுகிறது.

ரஷ்ய கலை அரங்கில் 1930ம் ஆண்டு ஓவியத்துக்கு கண் வைத்த பாதுகாவலர்… ரூ. 7.5 கோடி நஷ்டம்…

ரஷ்யாவில் உள்ள எக்டேரின்புர்க் நகரில் உள்ள எல்ஸ்ட்டின் மைய்ய கலை அரங்கில் பழமையான ஓவியங்கள் வைக்கப்பட்டிருந்தது. 1932 வாக்கில் ஹன்னா லெபோர்ஸ்கயா வரைந்த ‘த்ரீ பிகர்ஸ்’ என்ற ஓவியமும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. கண்ணில்லாத இந்த ஓவியத்தில் கண் வரைந்ததைக் கண்டு திடுக்கிட்ட பார்வையாளர் ஒருவர் இதுகுறித்து நிர்வாகத்தினரிடம் புகார் அளித்தார். விசாரணையில் அன்றைய தினம் புதிதாக வேலைக்கு சேர்ந்த பாதுகாவலர் ஒருவர் பொழுது போகாததால் தனது கையில் இருந்த பேனாவால் இந்த ஓவியத்தில் கண் வரைந்த … Read more

ரஜினிகாந்த் நடிக்கும் 169 வது படம்

நடிகர் ரஜினிகாந்தின் 169வது படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. அண்ணாத்த திரைப்படத்திற்கு பின் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் மீண்டும் இணைகிறார் ரஜினிகாந்த். #Thalaivar169BySunPictures: ▶ https://t.co/EFmnDDnBIU Presenting Superstar @rajinikanth’s #Thalaivar169 directed by @Nelsondilpkumar and music by @anirudhofficial — Sun Pictures (@sunpictures) February 10, 2022 இந்த படத்தை பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்க இருக்கிறார். அனிருத் இசையமைக்கிறார் – தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு. https://patrikai.com/wp-content/uploads/2022/02/rajini169.mp4