நீட் விலக்கு தொடர்பாக நாளை சிறப்பு சட்டப்பேரவை கூட்டம்! நேரடி ஒளிபரப்பு…

சென்னை:  நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றும் வகையில், நாளை (8ந்தேதி) சட்டமன்றபேரவை சிறப்பு கூட்டம் நாளை  நடைபெறுகிறது. இந்த கூட்டத்தை தமிழக மக்கள் காணும் வகையில், நேரலை (நேரடி ஒளிபரப்பு) செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. தமிழகஅரசு  சட்டமன்றத்தில் நிறைவேற்றி  ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் 8 மாதங்களுக்கு பிறகு திருப்பி அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதையடுத்து, அடுத்தக்கட்ட நடவடிக்கை … Read more

டெல்லி ஜேஎன்யு பல்கலைக்கழக முதல் பெண் துணைவேந்தராக முன்னாள் மாணவி சாந்திஸ்ரீ பண்டிட் நியமனம்…

டெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) முதல் பெண் துணைவேந்தராக முன்னாள் மாணவி சாந்திஸ்ரீ பண்டிட் நியமனம் செய்யப்பட்டு உள்ளது. . டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பொறுப்பு துனை வேந்தராக இருந்த ஜகதீஷ் குமார், கடந்த வாரம் யுஜிசி தலைவராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, ஜேஎன்யு பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தாராக சாந்திஸ்ரீ துளிப்புடி பண்டிட் (Santishree Dhulipudi Pandit) நியமிக்கப்பட்டுள்ளார். சாந்திஸ்ரீ பண்டிட் இதற்கு முன்னதாக, மகாராஷ்டிராவில் உள்ள சாவித்ரிபாய் பூலே பல்கலைக்கழகத்தின் … Read more

தடுப்பூசி போட்டுக்கொண்டதால்தான் கொரோனா 3வது அலையில் உயிரிழப்பு குறைவு! ராதாகிருஷ்ணன் விளக்கம்

சென்னை: தமிழ்நாட்டில் அதிகம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டதால்தான் 3-ம் அலையில் உயிரிழப்பு குறைந்துள்ளது என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். தமிழகத்தில் தீவிரமடைந்து வந்த கொரோனா மூன்றாவது அலை தற்போது குறையத் தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாகவே தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் தொற்று பரவல் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் தமிழகஅரசும் தளர்வுகளை வழங்கியதுடன், கல்வி நிறுவனங்கள் உள்பட அனைத்து வணிக நிறுவனங்களும் வழக்கம்போல செயல்பட அனுமதி வழங்கியது. இதனால், பொதுமக்களின் இயல்புவாழ்க்கை … Read more

முதல்வர் மு.க.ஸ்டாலினின் தேர்தல் பிரசாரம் விவரம்: இன்று சேலம் மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து காணொளி காட்சி பிரசாரம்…

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி, திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்துள்ளார். நேற்று கோவை மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த நிலையில், இன்று சேலம் மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார். சேலம் மாவட்டத்தில் உள்ள தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை காணொலி மூலம் பிரசாரம் மேற்கொள்கிறார். தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சூடுபிடித்துள்ளது. அதிமுக, திமுக, பாஜக, … Read more

நிர்வாண படங்களை காட்டி பணம் பறிப்பு: கொளத்தூர் மணி மீது பெரியார் இயக்க பெண் பரபரப்பு குற்றச்சாட்டு – வீடியோ

சென்னை:  திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி மீது அவரது இயக்கத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார். அதில், கொளத்தூர் மணி நிர்வாண படங்களை காட்டி பணம் பறிப்பதாக  அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. தந்தை பெரியார் கொள்கைகளை முன்னெடுத்து செல்வதில், திராவிடர் கழகத்தைத் தொடர்ந்து, திராவிடர் விடுதலைக் கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பானது பெரியார் … Read more

இன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

சென்னை இன்று தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது. வரும் 19 ஆம் தேதி அன்று தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.  இந்த தேர்தலில் 21 மாநகராட்சிகளில் உள்ள 1374 உறுப்பினர்கள், 138 நகராட்சிகளில் 3843 உறுப்பினர்கள், 490 பேரூராட்சிகளில் 7621 உறுப்பினர்கள் என 12,838 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். கடந்த ஜனவரி மாதம் 28 ஆம் தேதி தொடங்கிய வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது.    கடந்த 4-ந் தேதி வரை … Read more

இந்தியாவின் முதல் திரைப்பட சந்தை களம் ஆரக்கிள் மூவிஸ்!

திரைப்பட வர்த்தகம் நடைபெறும் முறையில் பெரும் தொழில்நுட்ப மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில், தொழில்நுட்ப வல்லுநர் செந்தில் நாயகம் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஜி கே திருநாவுக்கரசு ஆகியோர் இணைந்து இந்தியாவின் முதல் என்எஃப்டி திரைப்பட சந்தை தளமான ஆரக்கிள் மூவீஸை அறிமுகப்படுத்த இருக்கிறார்கள். (NFT)என்எஃப்டி என்று அழைக்கப்படும் ‘Non-fungible Token ‘ (நான்-ஃபன்ஜபிள் டோக்கன்), மேம்பட்ட பிளாக் செயின் தொழில்நுட்பத்தின் மூலம் திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் ஓடிடி நிறுவனங்கள் திரைப்பட உரிமைகளை வாங்கவும் விற்கவும் வழிவகை செய்கிறது. … Read more

ஜிஹாப் எதிர்ப்பு : கர்நாடக அரசுக்குக் காங்கிரஸ் பெண் எம் எல் ஏ சவால்

பெங்களூரு கர்நாடக அரசுக்குத் தைரியம் இருந்தால் தாம் ஜிஹாப் அணிந்து சட்டப்பேரவை வருவதைத் தடுக்கட்டும் என காங்கிரஸ்  பெண் சட்டமன்ற உறுப்பினர் கூறி உள்ளார். கர்நாடகா மாநிலத்தில் உடுப்பி பகுதியில் உள்ள அரசுக் கல்லூரியில் ஜிஹாப் அணிந்த இஸ்லாமிய மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.   இது கடும் சர்ச்சையாக மாறி கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  மாநில அரசு நல்லிணக்கத்தைச்  சீர்குலைக்கும் வகையில் ஆடைகள் அணிந்து கல்வி நிலையங்களுக்கு வரத் தடை விதித்தது. இது குறித்து மாநிலத்தில் போராட்டம் வெடித்துள்ளது.  … Read more

காங்கிரஸ் கட்சியின் பஞ்சாப் முதல்வர் வேட்பாளர் சரண்ஜித் சிங் சன்னி : ராகுல் காந்தி அறிவிப்பு

டில்லி பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளராக சரண்ஜித் சிங் சன்னி யின் பெயரை அக்கட்சி தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார். மொத்தம் 177 தொகுதிகளைக்கொண்ட பஞ்சாப் சட்டப்பேரவைக்கு ஒரேகட்டமாக பிப்ரவரி 20-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.   இந்த தேர்தலில் சரண்ஜித் சன்னியை முதல்வர் வேட்பாளராகக்  காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.  இதை அவர் . லூதியானாவில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் அறிவித்துள்ளார். பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சி முதல்வர் வேட்பாளர் யார் … Read more

பாடகி லதா மங்கேஷ்கர் மறைவு : நாளை மகாராஷ்டிராவில்  பொது விடுமுறை அறிவிப்பு

மும்பை பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மரணத்தை ஒட்டி நாளை மகாராஷ்டிர மாநிலத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பல்வேறு மொழிகளில் இன்றும் ரசிக்கும் படியான பல நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ள பிரபல பாடிகியான லதா மங்கேஷ்கர் இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்பட்டார். இவர் கடந்த சில வாரங்களாக உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். லதா மங்கேஷ்கரின் உடல்நிலை ஓரளவு தேறிய நிலையில், … Read more