ஜிஹாப் எதிர்ப்பு : கர்நாடக அரசுக்குக் காங்கிரஸ் பெண் எம் எல் ஏ சவால்
பெங்களூரு கர்நாடக அரசுக்குத் தைரியம் இருந்தால் தாம் ஜிஹாப் அணிந்து சட்டப்பேரவை வருவதைத் தடுக்கட்டும் என காங்கிரஸ் பெண் சட்டமன்ற உறுப்பினர் கூறி உள்ளார். கர்நாடகா மாநிலத்தில் உடுப்பி பகுதியில் உள்ள அரசுக் கல்லூரியில் ஜிஹாப் அணிந்த இஸ்லாமிய மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இது கடும் சர்ச்சையாக மாறி கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாநில அரசு நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் ஆடைகள் அணிந்து கல்வி நிலையங்களுக்கு வரத் தடை விதித்தது. இது குறித்து மாநிலத்தில் போராட்டம் வெடித்துள்ளது. … Read more